புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பரி . பவுலின் ஆலயம் மெய்ஞ்ஞானபுரம்

*பரி . பவுலின் ஆலயம் மெய்ஞ்ஞானபுரம்*
மெய்ஞ்ஞானபுரம் பரி . பவுலின் ஆலயம் இருக்குமிடத் தில் 1830 - ம் ஆண்டு ஒரு குலதெய்வக் கோவில் இருந்தது.
மலையாள தேசத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் யாத் திரிகர் அங்கு தங்கி , தொழுதுபோவது வழக்கம் . மெய்ஞ்ஞானபுரத்திற்கு முதல்முதலாக வழங்கிவந்த பெயர் , நெடு விளை . . இப்பகுதியில் கிறிஸ்தவத்தை வேரூன்றிய பெருமை ரேனிஸ் ஐயரைச் சேரும்.
மூர்த்தி , வில்லி , பண்டாரம் , மாலைசூடி , குப்பையாண்டி , என்ற ஐந்து பூர்வ குடும்பங் களைகொண்ட நெடுவிளையை ரேனிஸ் ஐயர் அடிக்கடி சந்தித்து , அவர்களைக் கிறிஸ்தவர்களாக்கி , அவர்களது குலதெய்வக் கோவிலை அகற்றி , அதே இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டினார்.
1837ல் தென் திருநெல்வேலியின் அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்ட கனம் ஜான் தாமஸ் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்தார்.
மெய்ஞ்ஞானபுரம் சபையைக் கட்டியதுமல்லாமல் , தென்னிந்தியாவிலே அழகானதும் , உயர்ந்ததும் விசாலமானதுமான கிறிஸ்தவ ஆலயத்தையும் கட்டினார்.
மெய்ஞ்ஞானபுரத்திலிருது 4 மைல் மேற்கேயுள்ள பன்னம்பாறை என்ற ஊரிலுள்ள கல்தச்சர் அங்குள்ள கற்களாலேயே இக்கோவிலைக் கட்டினார்கள்.
கட்டடம் உறுதிபெற முட்டை , பதனீர் , கருப்புக்கட்டி , கடுக்காய் முதலியவற்றைச் சாந்துடன் சேர்த்துக் கட்டினர் .
இக்கோவிலுக்கு ஏழு அடுக்குகள் உண்டு , கோவில் மணரிமிகவும் தெளிவான சப்தம் கொடுக்கக்கூடியது.
ஏறக்குறைய ஒருமைல் தூரம் இதன் ஒலி எட்டும்.
எட்டடி உயரமுள்ள மகுடக் கல்லின் மீது மிகவும் சக்தி வாய்ந்த இடிதாங்கி பொறுத்தப்பட்டுள்ளது.
கனம் ஜாண் தாமஸ் இவ்வால யத்தை *" ஒரு ரூபாய் ஆலயம் "* - என்று வேடிக்கையாய்ச் சொன்னாராம்.
ஒரு ரூபாய் 192 பைசா கொண்டதுபோல இவ்வாலயம் 192 உயரம் கொண்டதாம் .
1844 - ம் வருஷம் ஜூன் 20 - ம் தேதி சென்னை C . M . S . காரியதரிசி J . டக்கர் ஐயரால் அஸ்திபாரம் போடப்பட்டது.
1847 - ம் வருடம் டிசம்பர் 29 - ம் தேதி கனம் ஜாண் தாமஸ் ஐயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1868 - ல் கோபுர வேலை முடிந்து அக்டோபர் மாதம் 9 - ம் தேதி நேப்பியர் பிரபுவால் மகுடக்கல் வைக்கப்பட்டது.
1855 ஜனவரியில் மேற்கோப்பு வேலை முடிந்தது , 1937 டிசம்பர் 21ல் ஸ்ரீ ஜாண் தாமஸ் ஐயர் வந்ததை நினைத்து நூற்றாண்டு கொண்டாடப்பட்டது .
1947 டிசம்பர் 20 - ல் ஆலய நூற்றாண்டு விழா நடை பெற்றது .
1943ல் ரூ . 14000 செலவில் தென்பக்கத்துக் கூரை மாத்திரம் புதிப்பிக்கப்பட்டது.
1955 டிசம்பர் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டது.
இவ்வாலயத்துள் யாரும் பாதரட்சை அணிந்து கொண்டு செல்லக்கூடாது .
சபையார் அனைவரும் தரையில் அமர்ந்தே வணக்கம் செலுத்துவர்.
இங்கிலாந்திலிருந்து வந்த துரைமகனார் ' ' எத்தனையோ ஆலயம் சென்று வழிபட்டேன்.
இவ்வாலயத்தினுள் தேவனின் பிரசன்னம் இருப்பதாக உணருகிறேன் , ' ' என்றாராம் ! எத்தனையோ பக்திமான்களையும் , குருக்களையும் இவ்வாலயம் உண்டுபண்ணினது.
அதில் தலைசிறந்தவர் ' ' பிஷப் அசரியா " .
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory