புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஸ்மித் விக்கிள்ஸ் வொர்த்

*ஆத்தும ஆதாயகர் ஸ்மித் விக்கிள்ஸ் வொர்த் பிறந்த தினம் இன்று*

அது ஒரு கன்வென்ஷன் கூட்டம் .

ஆராதனை நடத்திய ஸ்மித் அன்று செய்தியைப் பகிர்ந்து கொண்டார் . கூட்டம் முடிந்தது . மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடக்கலாயினர் .

சுமார் 15 பேர் , தங்களுக்கு சுகம் பெற வேண்டி ஸ்மித்திடம் ஜெபிக்க முன்வந்தனர் .

இரு கைகளிலும் ஊன்று கோலுடன் வந்த மனிதன் மேல் கைகளை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார் ஸ்மித் . எ ன் ன ஆச்சர்ய ம் ? அ வ ன் த ன் னு டை ய ஊன்றுகோல்களை எறிந்துவிட்டு துள்ளிக் குதித்தான் .

ஸ்மித்தால் நம்பவே முடியவில்லை .

முதன் முதலாகத் தன்னிடமிருந்து ஒரு மாபெரும் வல்லமையானது செயல்படுவதை உணர்ந்தார் .

ஆண்டவர்ஸ்மித்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார் .

அதன்பின் அவர் ஊழியத்தில் ஏராளம் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றன .

கட்டிகள் மறைய ஆரம்பித்தன . உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீண்டும் புத்துணர்வுடன் செயல்படத் தொடங்கினர் . இவரின் அற்புதமாக்கும் வரம் உலகமெங்கும் காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்தது .

இங்கிலாந்து , அமெரிக்கா , நியூஸிலாந்து , இலங்கை , ஸ்வீடன் , சுவிட்சர்லாந்து , நார்வே , கலிபோர்னியா போன்ற நாடுகளில் இவர் மூலம் பெரிய அசைவு ஏற்பட்டு ஜனங்கள் ஆத்துமாவில் இரட்சிப்பையும் தெய்வீக சுகத்தையும் பெற்றனர் .

இவர் கைகளில் எப்பொழுதும் எண்ணெய் பூசி ஜெபித்த உடனே அவர்கள் சுகம் பெற்றுவிடுவர் .

ஆதி அப்போஸ்தலர்கள் காலத்தில் நடந்தது போலவே மாபெரும் பணிகள் இவர் மூலம் நடைபெறத் தொடங்கியது.

இம்மாபெரும் ஆத்தும ஆதாயகர் பள்ளிக்குச் செல்லாதவர் என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது .

ஒரு மனிதன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டால் , ஆண்டவர் அவர் மூலம் அற்புதமாய் செயல்படுவார் என்பதற்கு ஸ்மித்தின் வாழ்வே ஓர் சாட்சி ,

-

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory