புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அதனாசியஸ் விசுவாச பிரமாணம் வரலாறு

அதனாசியஸ் விசுவாச பிரமாணம் வரலாறு
நம்முடைய திருச்சபை liturgy ல் உள்ள மூன்றாவது விசுவாச பிரமாணம் அதனாசியஸ் விசுவாச பிரமாணம் ஆகும்.
இந்த அதனாசியஸ் பிரமாணத்தை ரோமன் கத்தோலிக்க சபையும் மற்ற சில ப்ரொடெஸ்டெண்ட் சபைகளும் அங்கீகரித்து உள்ளன.
அதில் நம்முடைய திருச்சபையும் ஒன்று.
இந்த விசுவாச பிரமாணது நாற்பது வசனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் பாதி தேவனுடைய திரித்துவதையும் இரண்டாவது பாதி தேவனுடைய மனித தன்மை அதாவது இயேசு கிறிஸ்துவை நூறு சதவிகிதம் மனிதன் என்றும் நூறு சதவிகிதம் தேவ தன்மையுடையர் என்றும் விளக்குகிறது.
இந்த அதனெசியஸ் விசுவாச பிரமாணம் ஒரு நிலையான உண்மையை தாங்கி உள்ளது போல ஒரு உறுதியை தொடங்கும் போதும் முடியும் போதும் கொடுக்கிறது.
இருந்தாலும் இதன் வரலாற்று தன்மை இன்றும் பல வேத அறிஜர்களால் விவாதத்திற்கு உரியதாக உள்ளது.
இந்த விசுவாச பிரமாணம் லத்தீன் மொழியை மூலமாக கொண்டது ஆகும்.
லத்தீன் மொழி என்பது மேற்கத்திய திருச்சபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.
கிபி 1200 ஆம் தான் இது கிழக்கத்திய சபைகளுக்கு அறிமுகபடுத்தப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டை சார்ந்த வேத ஆய்வாளர்கள் இது நிச்சயமாக அதனாசியஸ்(Died 373) என்பவரால் எழுதப்பட்ட விசுவாச பிரமாணம் இல்லை என்று உறுதியாக சொல்லுகின்றனர்.
பெரும்பாலான அறிஜர்கள் இதை 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெற்கு பிரான்சு நாட்டை சார்ந்தவர் தான் எழுந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
1940ஆம் ஆண்டு lost Excerpta of Vincent of Lérins என்ற ஒரு பழங்கால எழுத்து சுருள் கண்டுக்க பட்டது.
இதன் லத்தீன் எழுத்துக்களும் அதனாசியஸ் விசுவாச பிரமாணத்த்தின் எழுத்துக்களும் சமகாலத்தை சார்ந்தவை ஆகும். இந்த எழுத்து சுருள் கிபி 440 ஆம் ஆண்டை சார்ந்தது.
இதன் பழமையான பதிப்பு ஒரு முன்னுரையை கொண்டுள்ளது. இந்த முன்னுரை கேசரியாஸின் உபதேசங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
கேசரியஸ் என்பவர் கிபி542 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவ போதகர் ஆவார்.
இந்த விசுவாச பிரமாணத்தில் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் மற்றும் தெற்கத்திய பிரான்சு நாடுகளின் தாக்கங்கள் காணப்படுகிறது என்று வேத ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் கிபி 9 ஆம் நூற்றாண்டுகளில் இந்த விசுவாச பிரமாணம் ஜெர்மனியில் உள்ள சபைகள் மற்றும் சில ரோம சபைகளின் Liturgy ல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
From Anglican History, Encyclopedias
Translated and collected by Sujith
TDTA பாரம்பரிய மீட்பு குழு

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory