புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அப்போஸ்தலருடைய விசுவாச பிரமாண விளக்கம்

அப்போஸ்தலருடைய விசுவாச பிரமாண சுருக்க விளக்கம்
கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளை அனைத்தையும் மிக சுருக்கமாக விளக்குவது இந்த அப்போஸ்தலர் பிரமானமாகும்.
மேலும் இது இப்போது உருவாகும் பல இறையியல் கொள்கைகளுக்கு அடித்தளமாகவும் விளங்குகிறது. இதன் வரலாறு.
ஆதித்திருச்சபையில் நாம் தற்போது கையில் வைத்திருக்கும் விசுவாச பிரமானங்கள் போல ஒரு நிலையான எந்த விசுவாச பிரமாணங்களும் கிடையாது.
கிறிஸ்தவத்தின் போதனைகள் அவர்களுக்கு அப்போதைய சபை முப்பர்களின் பிரசங்கங்கள் வாயிலாகவும், சபை போதகங்கள் வாயிலாகவும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்தது.
முதல் முறையாக தோற்றுவிக்கபட்டு அனைத்து ஆதி திருச்சபைகளினால் அங்கீகரிக்கபட்டு , பிரகடனப்படுத்தப்பட்ட விசுவாச பிரமாணம் என்பது நிசயா விசுவாச பிரமாணம் ஆகும்.
இது கிபி 325 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
அதற்கு பின்பாக சில காலத்திற்கு பின்பு தான் ஆப்போஸ்தருடைய விசுவாச பிரமாணம் தோற்றுவிக்கப்பட்டது.
ஆனால் அப்போஸ்தலர் விசுவாச பிரமாணத்தின் சில எச்சங்கள் The old roman creed ல் காணப்படுகிறது(அதாவது நிசயா விசுவாச பிரமாணத்திக்கு முன்பே).
அப்போஸ்தலருடைய விசுவாச பிரமாணதின் நிலையான பரிணாமம் என்பது ஆதி திருச்சபைக்கு பின்பாக இருந்தாலும் அதன் சாரம் அனைத்தும் வேதத்தை அடிப்படையாக கொண்டது.
*அப்போஸ்தலர் விசுவாச பிரமாணத்தின் வேத குறிப்புரைகள்*
வானத்தையும் பூமியியையும் படைத்த
சங்கீதம் 89:11-23,ஆதி 2.4, யாத் 31.17, அப்போஸ் 4.24,எபே 3.9
சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
*ஏசா.63.16, மத் 6.9, மத் 23.9, லுக் 11.2*
அவருடைய ஒரே பேரான குமாரனான நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்
*சங்கீ 2.7, யோவா 1.1-4.14,3.6,16.28, அப்போஸ் 13.33, எபிரெயர் 5.5, 1 யோவா 4.9*
அவர் பரிசுத்த ஆவியானவராலே கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்தார்.
*ஏசா 7.14, மத் 1:20-23, லூக்கா 1.30-35, யோவா 1.14, கலா 4.4, 1 யோவா 4.2*
பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு,
*ஏசா 53.4-5, யோவா 19.18, அப்போஸ் 4.10,27, 1 திமோ 6.13*
பாதாளத்தில் இறங்கினார்.
*சங்கீ 16.10, அப்போஸ் 2.24, 27,13:33-37, எபே 4.8-10, 1 யோவா 3.19*
மூன்றாம் நாள் மரித்தோரிடத்தில் இருந்து எலுந்தருளினார்.
*மத் 27.40,67,மாற் 8.31,10.36,யோவா 20.19-20,25-29, அப்போஸ் 2.32,3.15, 4.33, 1கொரி 15.12-22, கலா 1.1*
பரமண்டலத்துக்கேறி , லூக்கா 24.51, அப்போஸ் 1.9-11, எபே 4.8-10, எபி 4.14, 9.24
சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பரிசத்தில் வீற்றிருக்கிறார்.
*சங்கீ 110.1, மாற் 16.19, அப்போஸ் 2.23,5.31,7.55-56, எபி 12.2, எபி 8.1, 1 பேது 3.21-22*
அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும், மரிதோரையும் நியாயந் தீர்க்க வருவார்.
*யோவா 5.22-23,அப்போஸ் 10.42, ரோம 14.10, 2 கொரி 5.10, 2 திமோ 4.1, 1 பேது 4.4-5*
பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேன்.
*எசே 39.29, யோவா 14.26, அப்போஸ் 2.17,13.2,1 கொரி 2.10-11, 12.13, எபி 3.7-9*
பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும் ,
*அப்போஸ் 9.31,1கொரி 1.1-2, 2 கொரி1.1, 1 திமோ 3.15, எபி 12.22-25, 1 பேது 1.1*
பரிசுத்தவான்களுடைய பரிசுத்த ஐக்கியமும் , *அப்போஸ் 2.42, ரோம 12.4-13, 15:26-27,1 கொரி 1.9,2 கொரி 8.3-4, பிலி 2.1-4, 1 யோ 1.3*
பாவமன்னிப்பும்,
*நெகே 9.17, மாற் 11.26, மத் 6.12-15, லுக் 6.37-38, கொலோ 1.13-14, 2.13-14, எபே 1.7*
சரீர உயிர்த்தெலுதலும் ,
*பிர 12.7, மத் 22.31-32, மாற் 12.18-27, லுக் 20.27-37, ரோம 8.23, 2 கொரி 4.14*
நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன் ஆமென்.
*தானி 12.2, மத் 25.31-33, லுக் 16.22-23, யோவா 5.28-29, ரோம 6.7-8, தித் 3.5-7.*
பெரும்பாலான வேத அறிஜர்கள் இது போன்ற பிரமாணங்கள் மக்களிடையே போலி போதகங்கள் உலாவும் வேளையில் அதில் இருந்து மக்கள் தங்களின் விசுவாசங்களை தற்காத்து கொள்ள உருவாக்கபட்டது என்று கருதுகின்றனர்.
ஏன் என்றால் அப்போஸ்தலராகிய பவுல் கலாத்தியருக்கு சொல்லும்போது கூட இதை தெளிவாக சொல்லுகிறார் (கலா 1.8). அப்போஸ்தலர் விசுவாச பிரமானத்தில் பெரும்பான்மையானது அப்போஸ்தலரின் நடபடிகளில் உள்ள பேதுருவின் பிரசங்கங்களில் இருந்து எடுக்கபட்டவை ஆகும்.
*(அப்போஸ் 2.22-36).*
ஆதி போதகர்கள் இக்னீசியஸ் (கிபி 188) போன்றவர்களின் பிரசங்களிலும் இது காணப்படுகிறது.
டெர்டுலியன் என்னும் ஆதி திருச்சபை போதகரின் *“ விசுவாசத்தின் விதிகள்”* என்று சொல்லப்படும் புத்தகதிலும் அப்போஸ்தலர் விசுவாச பிரமாணத்தின் சுவடுகள் காணப்படுகிறது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜 *Thx Bro Sujith*
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory