புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நிசயா விசுவாச பிரமாணம் வரலாறு

நிசயா விசுவாச பிரமாணம் வரலாறு
நிசயா (Nicene) விசுவாச பிரமாணம் தான் இருக்கின்ற விசுவாச பிரமாணங்களில்
மிகப்பழமையானது ஆகும்.
கி.பி.325 ஆம் ஆண்டு கான்ஸ்டண்டைன் என்னும் மன்னரால் நிசயா நகரத்தில் நடந்த முதலாம் நிசயா பொதுக்கூட்டம்
கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் இந்த விசுவாச பிரமாணம் ஆதி கிறிஸ்தவ
போதகர்களால் உருவாக்கப்பட்டது.
நிசயா விசுவாச பிரமாணம் ஆதி காலத்தில் இருந்தே மக்களின் நம்பிக்கை தளர்ந்து போகும் காலத்திலும், கள்ள தீர்க்ககரிசிகள் வரும் காலத்திலும் மக்களின் நம்பிக்கைகளை உறுதி
படுத்தும் விதமாக அறிக்கைப்பண்ணபடுகிறது.
இந்த நிசயா நகரமானது இன்றைய
துருக்கி நாட்டில் உள்ள இஸ்நிக் என்னும் நகரம் ஆகும். அங்கு வைத்து இந்த விசுவாச பிரமாணம் இயற்றபட்டதால் இதற்க்கு அந்த பொதுக்கூட்டம் நடந்த இடமான
நிசயா என்ற பெயரை வைத்தனர்.
இந்த விசுவாச பிரமாணத்தை நம்முடைய CSI மட்டுமல்லாது வெஸ்டர்ன், ஈஸ்டர்ன் , ஒரிஎண்டேல், ஆங்கிலிக்கன், லூத்ரன் போற சபையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் . இந்த விசுவாச பிரமாணம் உருவாக்கபடும் பொது அங்கு நடந்த கூட்டத்தில் 250
ளில் இருந்து 318 மத குருக்கள் வரை இருந்ததாக பொதுவாக நம்பபடுகிறது.
இந்த பிரமாணம் உருவாக காரணமாயிருந்தவர் ஆரியுஸ் என்னும் கிறிஸ்தவ போதகர்
ஆவார்.
இவருக்கும்அலெக்ஸ்சான்ரியாவின் பிஷப் அலெக்ஸ்சாண்டாருக்கும் பல
கருத்து மோதல்கள் ,விவாதங்கள் இந்த பொது கூட்டத்தில் நடைபெற்றன. ஆரியுசின் போதகங்கள் கிறிஸ்து ஒரு காலத்தில் பிதாவானவரால்
படைக்கப்பட்டவரே என்ற கோட்பாடு (தற்கால ஜெகோவா விட்னேஸ் என்ற
அமைப்பினரின் நம்பிக்கை) பல சர்ச்சைகளும், குலப்பங்களும்,ஏற்பட்டது.
மேலும் பல குருக்கள் ஒன்று கூடி அவரின் இந்த கோட்பாடு தவறு என்று
கண்டறிந்து, அவரின் போதகங்களை களை பிடுங்கும் விதமாக கிறிஸ்துவானவர் வானமும் பூமியும் படைக்கும் முன்னரே தேவனுடன் இருந்தார் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த விசுவாச பிரமாணத்தை உருவாக்கினர்.
இந்த முதலாம் பொது கூட்டத்தில் உருவாக்கிய விசுவாச பிரமாணத்தை கிபி381 ஆம் ஆண்டு கான்ஸ்டன்டயின் நகரின் கூடிய மற்றொரு பொதுக்கூட்டத்தில் சிறிது
விரிவுபடுத்தினர். எடுத்துக்காட்டாக “நாம் நம்புகிறோம்” என்ற
வாக்கியத்திற்கு பதிலாக “நான் நம்புகிறேன்” என்று மாற்றப்பட்டது.
அதற்க்கு பின் 431 ல் ஏற்படுத்தபட்ட மற்றொரு பொதுகூட்டம் கிபி 381 ஆம்
ஆண்டு விரிவுபடுத்தபட்ட விசுவாச பிரமாணத்தை அப்படியே எடுத்துகொள்ளப்பட்டது. அதன் பின் எந்த ஒரு மாறுதலும் விசுவாச
பிரமாணத்தில் ஏற்படவில்லை என்று கத்தோலிக்க வரலாறு கூறுகிறது.
From catholic encyclopedias
Collected and Translated - Sujith

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory