புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பேராயர் சாலமோன் துரைசாமி

பேராயர் சாலமோன் துரைசாமி நினைவு தினம்
மே 22
பிஷப் ஹீபர் கல்லூரி . 1934 ஆம் ஆண்டு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டது.
சைமன் கமிஷன் பரிந்துரைப்படி அ து மூடப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலையில் இடி விழந்தாற் போல் தடுமாறிநின்றனர்.
1964ம் ஆண்டு திருச்சி - தஞ்சை திருமண்டலப் பேராயராகப் பொறுப்பேற்ற சாலமோன் துரைசாமி , அக்கல்லூரியை மீண்டும் தழைக்கச் செய்தார்.
புத்துயிரும் , புதுவாழ்வும் அக்கல்லூரிக்குக் கிடைத்தது . இருபது ஏக்கருக்கும் அதிகமான கட்டிடங்கள் கட்டப்பட்டன.
கண்டோர் வியந்து போற்றும் வகையில் அதனை உருவாக்கி , படிப்போரைப் பெருமையடையச் செய்தார் பேராயர் துரைசாமி . மக்களின் ஆன்மீக வாழ்விலும் , பொருளாதார வளர்ச்சியிலும் , கல்விப்பணியிலும் அக்கறை கொண்டு தமது செயற் திட்டங்களுக்கு சிறப்பான வடிவம் கொடுத்தார் . திருச்சபை தன்னிறைவு பெற்றுக் காணப்பட வேண்டும் என்பதற்காகப் பல வணிக வளாகங்களை உருவாக்கினார்.
மேற்கு ஜெர்மனியின் உதவியுடன் ஏழைச் சிறுவர் சிறுமியர் இலவசமாகத் தங்கிப் பயில நாற்பதுக்கும் மேற்பட்ட விடுதிகளை ஏற்படுத்தினார் . கல்விப் பணியில் பெரும் முன்னேற்றங்களை மக்கள் பெற்றிடச் செய்தார்.
பேராயர் துரைசாமி , தமிழ் கிறிஸ்தவ இலக்கியங்கள் மீது நீங்காப் பற்றுடையவர்.
1981ஆம் ஆண்டு *உலகக் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை* என்ற அமைப்பைத் தொடங்கித் திறம்பட நடத்தினார்.
பேராயர் ஒரு சிறந்த எழுத்தாளர் . கிறிஸ்தவக் கல்வி , இந்தியாவில் கிறிஸ்தவம் , *என் கண்கள் அவரது மகிமையைக் கண்டன* போன்ற அழியா நூல்களைப் படைத்தார்.
மாபெரும் தலைவனாக வாழ்ந்த பேராயர் இதே நாள் மே 22 , 1992ஆம் ஆண்டு கடவுளின் அழைப்பை ஏற்று , பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் விதைக்கப்பட்டார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory