புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வில்லியம் தோபியாஸ் ரிங்கல் தோபே

தென் திருவிதாங்கூரின் அப்போஸ்தலன் ” என்று போற்ற படும் வில்லியம் தோபியாஸ் ரிங்கல் தோபே
இந்தியாவில் முதன் முறையாக இறை செய்தியை எற்றுக்கொண்ட திருவிதாங்கூர்
அம்மகான் ஜெர்மனி தேசத்தில் உள்ள புருசியா என்ற மாகாணத்தில் சொஹ்டேல் வ்ஹிட்ஸ் என்னும் கிராமத்தில் 1770 – ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் 8 – ஆம் நாள் பிறந்தார்.
ராஜ்யத்தின் தென் எல்லையான கன்னியாகுமரி முதல் வடக்கு கொல்லம் வரை திருச்சபை நிறுவிய பெருமை *” தென் திருவிதாங்கூரின் அப்போஸ்தலன்”* என்று போற்ற படும் *வில்லியம் தோபியாஸ் ரிங்கல் தோபே* சாரும்.
இவரது தந்தை லூதரன் சபையின் குருவானவர்.
இவர் அயல்நாடு சென்று ஊழியம் செய்ய டென்மார்க் தேச சர்வ கலாசாலையில் பயின்று தேறி 1785 ஜூலை 24 – ல் போதபிஷேகம் பெற்றார்.
மறுநாளே லண்டன் மிஷனரி சங்கத்தில் சேர்ந்து பற்பல ஊழியங்களில் ஈடுபட்டு பயிற்சி பெற்ற பின் கப்பல் ஏறி இந்தியாவுக்கு வந்து தரங்கம்பாடி யல் தங்கி சில நாட்கள் தமிழ் மொழி பயின்று, இறைவனின் சித்தபடி மைலடி மகராஜன் வேத மாணிக்கத்தின் அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் புறப்பட்டு 1806- ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் நாள், ஆரல்வாய்மொழியைக் கடந்து மைலாடி வந்து அங்கு திரு. வேத மாணிக்கம், மற்றும் மாசில்லாமணி என்ற அடியார்களோடு அருள் ஒளியை ஏற்றி வைத்து, கன்னியாகுமரி முதல் கொல்லம் வரை பல திருச்சபையை நிறுவினர்.
*அனந்தநாடார் குடியில் ஒரு அதிசய உண்மை சாட்சி:-*
முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் அம்மனையும் , பூதங்களையும் வணங்கி வந்தார்கள்.
அதற்கு ஆதரமாக ஊரின் மேல்புறத்தில் அம்மன் கோயிலும், தென் புறத்தில் பூதத்தான் கோயிலும் வழிபட்டு ஸ்தலங்களாக அமைத்திருந்தன.
அன்றொரு நாள் அங்கு கோயில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது.
அன்று கோயில் தர்மகர்த்தாவாக இருந்த திரு. பூதநாதன் நாடார் தலைமையில் நிகழ்சிகள் நடைபெற்றுக் கொண்டீருந்தபோது, மிகவும் விறுவிறுப்பான சாமியாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
அச்சமயம் புலியூர்குறிச்சியில் இருந்து அம்மாண்டி விளைக்கு குதிரையில் சென்ற்று கொண்டுருந்த மகா கணம் பொருந்திய வில்லியம் தோபேதோபியாஸ் ரிங்கல் ஐயர் அவர்கள் அங்கே இறங்கி நிற்க, என்ன ஆச்சரியம் !!!! சாமியாட்டம்மும் சகல மேள முழக்கமும் நின்று விட்டது.
உடனே தர்மகர்த்தா ஐயர் அவர்களிடம் வந்த வணங்கி என்ன காரணம் என்று வினவினார். யார் அவர்கள் இயேசு கிறிஸ்து ஒருவரே மானிடரை மீட்க வந்த இறை மகன் ஆவார் என கூறினார்.
ஐயர் அவர்கள் கிறிஸ்துவை பற்றி விளக்கமாக எடுத்து கூறவே
தர்மகர்த்தாவும், மக்களும் எங்களுக்கும் அவ் இறைமகன் ஏசுவே வேண்டும் ரென்று கூற, ஐயர் அவர்கள் நற்செய்திப் பணியால் திரு. புதத்தான் அவர்களும் , மக்களும் திரு முழுக்கு பெற்றார்கள். திரு. புதத்தான் என்று அழைக்க பெற்றவர், திரு முழுக்கு பெற்று திரு. வேதமாணிக்கம் என்று பெயர் சூட்டப்பட்டார்.
திரு. வேதமாணிக்கம் அவர்களால் இலவசமாக கொடுக்க பட்ட பூமியில் சிறியதொரு ஆலயம் அமைத்து அங்கு இறைவனை ஒழுங்காக வழிபட்டு வந்தார்கள்.
அந்த ஆலயம் மகாகனம். வில்லியம் தோபேதோபியாஸ் ரிங்கல் ஐயர் அவர்களால் 1813 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாளில் அர்ப்பணம் செயப்பட்டது.
அது ஓலையால் வையப்பட்ட முதல் ஆலயம்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory