புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பாணாங்குளம் திருச்சபை

பாணாங்குளம் திருச்சபை வரலாறு
பாணாங்குளம் நெல்லை - நாகர்கோவில் மெயின் ரோட்டில் பாளையங் கோட்டையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரதான சாலையிலிருந்து மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்.
பாணன் என்றால் பாடும் குலத்தான் என்று பொருள் பாண் என்றால் பாட்டு என்ற பொருள் உண்டு.
எனவே இங்கு வாழ்ந்த மக்கள் சிறந்த பாடகர்களாக இருந்துள்ளார்கள்.
கவிபாடும் திறம் படைத்தவர்களாகவும் வாழ்ந்துள்ளார்கள்.
இதே நாகர்கோவில் ரோட்டில் வள்ளியூரை அடுத்து பணகுடி என்ற ஒரு ஊர் உள்ளது.
பாடும் இசைக்கருவிகள் இவ்வூரில் செய்துள்ளார்கள்.
பணகுடி மக்கள் பண்ணோடு பாடுவதில் பண்பட்டவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்மோனியம், ஆர்கன் போன்ற இசை கருவிகள் இவ்வூரில் தான் அதிகமாக தயாரித்தார்களாம். அவைகளை மீட்டி பரம்பரையாய் வாழ்ந்து வந்த ஊர்கள் தான் பணகுடி, பாணாண்கும்
பணகுடி , பாணான்குளம் ஆகிய ஊர் மக்கள் பண் பாடுவதில் வல்லவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
மேலும் குசவன்குளம் , கோனார்குளம் , செட்டிகுளம் என்று சாதிகளின் பெயரால் பல ஊர்கள் அமைந்துள்ளன.
இதேப் போன்று இதுவும் பாணாங்குளம் என்று பெயர் பெற்றுள்ளது.
*1833ம் ஆண்டில் பாணாங்குளத்தில் தென்னிந்திய திருச்சபைகள் தோன்றியதாக ரேனியஸ் குறிப்பு கூறுகிறது.*
இவ்வூரில் சீர்திருத்தத் திருச்சபை ( சி எஸ் ஐ . ) . சுத்தாங்க சுவிசேஷ சபை என்று இரு சபைப் பிரிவுகள் உள்ளன.
ஒரே கிறிஸ்தவர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்த நாளில் 1924 இல் சிலுவையை கோவிலில் வைத்து சிலை வழிபாடு செய்யப் போகிறார்கள் ! என்ற ஒரு வதந்தி வேகமாக எழுந்தது.
விக்கிரக வழிபாட்டிலிருந்து விடுபட்ட மக்களுக்கு இது ஒரு பெரிய ஆத்திரத்தை உண்டு பண்ணியது.
சிலுவை ஓர் அடையாளம் மட்டுமே என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு பலர் சீர்திருத்தத் திருச்சபையை விட்டு விலகி சுத்தாங்க சுவிசேஷ சபையில் சேர்ந்தார்கள்.
கரிசல், ஆழ்வானேரி , மருதகுளம் அம்பலம் , பாணாங்குளம் , கண்டித்தான்குளம் மற்றும் சில ஊர்களிலும் புதிய பிரிவினை சபைகள் தோன்றின.
அதற்கு ( பேர்தான் சுத்தாங்கு சுவிசேஷ திருச்சபை என்பது .) அங்கு ஆலயத்தின் ஒருக் கல்வெட்டு என்னை பிரமிக்க வைத்தது தென்னிந்தியத் திருச்சபை ஆலயக் கல்வெட்டுகளிலிருந்து அது முற்றிலும் மாறுபட்டு உள்ளது கல்வெட்டின் வாசகத்தை அப்படியேத் தருகிறேன்.
சுத்தாங்க சுவிசேஷ சபை ஆலய மண்டபத்தில் உள்ள கல் வாசகம் திருநெல்வேலி சி எம் . எஸ் . சுத்தங்க சுவிசேஷ சபையின மக்களால் தங்கள் சொந்த பணத்தின் மூலம் , இந்த ஆலயம் கட்டப்பட்டது.
முந்தின . ஆலயம் 16 . 07 . 1937 இல் கட்டப்பட்டது.
பிந்தின ஆலயம் அஸ்திபார நாள் 29 .10 .1987
பிரதிஷ்டை நாள் : 27 07 . 1990 இந்த ஆலயம் எந்த சபையின் ஆளுகைக்கும் உட்பட்டதல்ல.
சபையின் ' மக்களுக்கு சொந்தமாய் உள்ளது .
சபையார் , பாணாங்குளம்
இந்தக் கல்வெட்டின் சிறப்பு அம்சங்கள் வெகுவாகக் கவர்ந்தன.
சுத்தாங்கத் திருச்சபை மக்கள் ஆங்கில ஆதிக்கத் திருச்சபையை விரும்பவில்லை.
மேல்நாட்டு மக்களின் உதவியையும் நாடவில்லை என்பது தெளிவாகின்றது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory