புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பள்ளிவாசல்பட்டி , நாகலாபுரம் திருச்சபை

பள்ளிவாசல்பட்டி , நாகலாபுரம் திருச்சபையில் நடந்த அதிசய சம்பவம்*
(4-7-1870)
கோடைகாலத்துக் கொடிய வெயிலில் பூமி காய்ந்து விட்டது. பச்சைப் புல்லை எங்கும் காணமுடியாது.
பல மரங்களில் இலையென்பதே இல்லை . வேப்ப மரங்களுங்களும் ஆங்காங்கே பட்டு வந்தன . அந்த மே , ஜூன் மாதங்களில் வெயிலின் உஷ்ணத்தைத் தாங்கவியலாமல் பனைமரங்களிற் பல பட்டுப்போயின.
அன்று மதியம் சுமார் பதினொன்றரை மணியிருக்கும்.
பள்ளிவாசல்பட்டி சபையின் பிரமுகர்களிலொருவரும் பக்தி மானுமான பரமானந்தரின் மனைவி கடும் வெய்யில்லையும் பொருட்படுத்தாமல் இடுப்பில் குடமும் கையில் தோண்டியுமாகக் குறுநடை நடந்து , ஊளருக் கருகிலிருந்த கிணற்றை நோக்கிச் சென்றாள். வயது முப்பத்தைந்திருக்கும் . நிறை கர்ப்பிணி. சிரமத்துடனேயே நடக்க முடிந்தது . உஷ்ணந் தாங்கக் கூடாது , மேல் மூச்சு வாங்க , மெது வாக முன்னேறிச் , சற்று நின்று களைப்பு நீக்கிப் , பின்னும் அடியெடுத்து வந்தாள். ஆயிற்று , கிணற்றண்டை வந்து விட்டாள். கிணற்றுக்குத் துவளமில்லை . ஆழம் அதிகம் . கோடைக்கால மான தால் கொஞ்சம் தண்ணீரே இருந்தது.
அதுவும் ஒரு மூலையில் ! தோண்டிக் கயிற்றைப் பிரித்து , ஒரு முனையைக் கையில் பிடித்துக்கொண்டு , தோண்டியைக் கிணற்றி னுள் எறிந்தாள் . சற்றுத் தொலைவில் , ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சில பையன்கள் அதைக் கவனித்தார்கள் , கிணற்றினுள் தோண்டியை விட்டெறிந்தவள் அது தண் ணிரைக் கோறிக்கொண்டதா என்று பார்க்கக் குனிக்தாள் , தலை சுற்றியது ; தடுமாற்றத்தைத் தடுக்க முனைந்தவள் கிணற்றோரத்திலிருந்த பாசிபிடித்த ஒரு கல்லின் மேல் காலை வைத்தாள் ; அது வழுக்கி விட்டது . அந்தோ !பாழுங்கிணற்றினுள் நிறை கர்ப்பிணியான அவள் விழுந்து விட்டாள் : " *இயேசுவே , இரட்சியும் ! ' ' - அது அவளது அபயக்குரல் . .* பார்த்துக்கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுவனொருவன் கதறினான் : ' ' அடே , ஓடி வாங்கடா , தண்ணியெடுக்க வந்த பொம்பள கிணத்துள்ள உழுந்துட்டாடா ' ! ஓடி வாங்கடா. அப்பையன்கள் ! அவள் செத்துப்போயிருப்பாளே ? ஐயோ பாவம் ! கிணற்றினுள் எட்டிப் பார்த்தனர் . ஆ , என்ன ஆச்சரியம் ! கிணற்றினடியில் , தண்ணீரில்லாத பாராங்கல்லின் மேல் , எவ்வித சேதத்துக்கும் உள்ளாகாத வளாக , மேலே பார்த்தவாறு கைகளைக் கூப்பி , பரமண்டல நா தரை ஸ்தோத்தரித்தவண்ணம் அவள் நின்றிருந்தாள் ! ' இ யேசுவே இரட்சியும் ' என்று அவள் விடுத்த அபயக்குரல் விண்ணுக்கெட்டி , ஆண்டவரின் கட்டளை பெற்ற பரிசுத்ததாதர் , சுமார் நாற்பது அடி ஆழமான அக்கிணற்றினுள் விழுந்த அவளைத் தங்கள் கைகளிலேந்திக் காத்தனர் என்றுணர்ந்து உள்ளக் கனிவுடன் அம்மாது அவருக்குத் துதி செலுத்தினாள்.
அவளைக் கண்ட மாத்திரத்தில் இன்னார் என்றறிந்து , கொண்ட அச் சிறுவர் ஊருக்குள் ஓடிச் சென்று , பரமானந்த நாடாரிடம் , அவள் கிணற்றினுள் விழுந்துவிட் டடதையும் , அங்கு எவ்வித விக்கின முமின்றியிருந்ததையும் தாங்கள் கண்டவாறே தெரிவிக்க , அவரும் வேறு சிலரும் வம் வந்தனர். சிலர் கட்டிலும் கயிறுகளும் கொண்டுவந்தார் சில நிமிஷங்களுக்குள் அவள் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாள்.
அவள் மட்டுமல்ல , அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் எவ்வித ஆபத்துமின்றித் தப்பினர். அவளுக்கு விழுந்ததினாலுணடாகக் கூடிய அதிர்ச்சியுங் கூட ஏற்படவில்லையென்பது பெரிய அதிசயமே.
பத்து நாட்களுக்குப்பின் அவளுக்கு சுகப்பிரசவமாகி ஓர் ஆண் குழந்தை பிறந்தது. நாகலாபுரம் SG ஏசுவடியான் ஐயர் சின்னாட்கழித்துப் பரமானந்தத்தின் வீட்டுக்குச் சென்று பொழுது , அவள் , “ ஐயா , கர்த்தர் எனக்குச் செய்த இந்த மகத்தான உபகாரத்துக்கு ஈடாக அவருக்கு நான் என்னத்தைச் செலுத்தக் கூடும் ? சங்கீதக்காரனைப் போல ' நான் அவருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கும் முன்பாகச் செலுத்த வேண்டும் . ஆகையால் தயவு செய்து என் வீட்டில் ஒரு ஸ்தோத்திர ஜெபம் கூட்டம் நடத்தித்தாருங்களையா என்று வேண்டிக் கொண்டாடாள்.
அதற்கிணங்க , சில தினங்களில் ( 4 - 7 - 1870 ) அவட வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தினார் ஐயர்.
பள்ளிவாசல்பட்டி , நாகலாபுரம் சபை மக்களனைவரும் அக்கூட்டத்திற்குச் சென்று , அவளுடனும் அவள் குடும்பத்தாரோடும் சேர்ந்து கர்த்தருக்கு நன்றியறிதலான ஸ்தோத்திரங்களை யேறெடுத்தார்கள்.
கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது . ( 1870 - S GY . )
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory