மிஷனரி ராபர்ட் மர்ரே மச்செயின் பிறந்ததினம்*
மே-21
கடுமையான வெப்பம் . சிறிய காற்று கூட இதமாக வீசவில்லை . உடல் முழுவதும் வியர்வைத் துளிகள் . பாலைவனத்தில் மிகவும் களைத்துப் போய் காணப்பட்டனர் அந்த நான்கு பேர்.
ராபர்ட் மர்ரே மச்செயின் தன் நண்பர்களுடன் அந்த பயணத்தைத் துவங்கியிருந்தார்.
பாலஸ்தீனத்திற்கு நற்செய்தி அறிவிக்கும் மகிழ்ச்சிகரமான பயணம் அது.
ஐரோப்பாவைத் தாண்டியதும் எங்கு பார்த்தாலும் பாலைவனங்கள் . ஒட்டகங்களிலும் , கழுதைகளிலுமாக அவர்கள் பயணம் தொடர்ந்தது . கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பாலஸ்தீனத்திற்குப் போய் சேர்ந்தார்.
ஸ்காட்லாந்து தேச சபை இவர்களின் வரவால் மகிழ்ச்சியடைந்தது.
பாலஸ்தீன யூதர்களுக்கு இயேசு கிறிஸ்துவே மேசியா என்பதை ஆதாரங்களுடன் விளக்கிக் கூறினார்.
வேத சாஸ்திரமும் கல்லூரியில் கற்ற இறையியலும் , அனுபவத்தோடு கூடிய விசுவாசமும் யூதர்களிடம் ஆணித்தரமாக நற்செய்தியைப் போதிப்பதற்கு உதவியாக அமைந்தது.
அநேக யூதர்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி தாய் நாடு திரும்பினார் ராபர்ட்.
ராபர்ட் மர்ரே மச்செயின் சிறந்த இசைஞானம் பெற்றவர்.
தேவ நாம மகிமைக்காகப் பாடும் வரத்தையும் பெற்றிருந்தார் . சிறந்த ஓர் மாணவராக விளங்கியதால் பல பரிசுகளை எடின்பரோ சர்வ கலா சாலையில் பெற்றிருந்தார்.
ஸ்காட்லாந்து திருச்சபையின் போதகரான இவர் சிறந்த ஓர் பிரசங்கியார் . " நான் பரிசுத்த ஆவியானவரால் முற்றும் நிரப்பப்பட்டிருந்தால் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிக்கவும் , அதிகமான நேரத்தை ஜெபத்தில் செலவிடவும் , பாவத்திற்கு எதிராக என் ஆத்துமாவை பரிசுத்தமாகக் காத்துக் கொள்வதிலும் மிகுந்த விழிப்புடையவனாக இருந்தேன் " என்ற இவர் ஸ்காட்லாந்து தேசத்தின் ஒப்பற்ற தேவ மனிதனாவார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment