புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஆங்கிலிக்கன் சபை வரலாறு

நம்முடைய திருநெல்வேலி திருமண்டலத்தின் பாரம்பரியமும், நடைமுறையும் பதினைந்து நூற்றாண்டுகள் பழமையானவை!*
_ஆங்கிலிக்கன் சபை வரலாறு._
இது என்ன புதிதாக உள்ளது இதை ஏன் திருநெல்வேலி திருமண்டல மக்கள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ஆம் திருநெல்வேலி திருமண்டல மக்கள் இதை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். முன்னொரு காலத்தில்! அதாவது நான் சொல்லுவது CSI உருவாவதற்கும் முன்பு. CSI உருவாவதற்கு முன்பாக நாம் என்னவாக இருந்தோம் என்ற கேள்விக்கு பலர் பலதரப்பட்ட பதில் கூறினாலும் பொதுவாக பேசப்பட்டது என்னவென்றால் திருநெல்வேலியில் புதிதாக ஒரு குடும்பம் கிறிஸ்தவராகி விட்டால் அவர்கள் ஆங்கிலிக்கன் என்பது தான். நாம் இப்பொது வைத்துள்ள ஜெப புஸ்தகம் , ஆராதனை முறைமைகள் என்று அனைத்தும் ஆங்கிலிக்கன் சபையில் இந்து தழுவிக்கொண்டதே. ஆனால் நம் முன்னோர்கள் இந்திய கலாச்சாரத்திக்கு ஏற்ற மாதிரியும் சில மாறுதல்களை செய்து உள்ளனர். அதை பற்றி பிறகு பார்க்கலாம் முதலில் நாம் நம்முடைய பாரம்பரியமான ஆங்கிலிகனின் என்ற முந்தைய வரலாறு என்னவென்று பார்ப்போம்.
ஆங்கிலிகன் சபை என்றால் “இங்கிலாந்தின் சபை” என்று பொருள்படும். என்னத்தான் இங்கிலாந்து சபை என்று பெயர் இருந்தாலும் இது உலகம் முழுவதும் பரவி உள்ளது. ஆங்கிலிக்கன் சபை கிபி 6 ஆம் நூற்றாண்டில் தொடங்க பட்டது. போப் கிரிகோரி கிரேட் என்பவர் அகஸ்டின் என்ற தேவஊழியகாரரை இங்கிலாந்திற்கு பாரம்பரிய மிக்க(ரோமன் கத்தோலிக்க சபை) அவரது சபைக்கு மக்களை சேர்க்க அனுப்பினார். அதில் உருவானது தான் ஆங்கிலிக்கன் சபை. ஆரம்ப காலகட்டங்களில் ரோம சபையின் ஒரு பிரிவாக ஆங்கிலிகன் சபை இருந்தது. அனால் சில விஷயங்கள் அதை ரோம சபையுடன் அதை கலக்க விடாமல் தடுத்தது. இந்த ஆங்கிலிக்கன் சபையானது ஆங்கில காலனி ஆதிக்கத்தினாலும், ஆங்கிலம் பேசும் மிஷனெரிகளாலும் தான் முதன் முதலாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
ஆங்கிலிக்கன் சபை வழிவழியாக வந்த பாரம்பரியமிக்க திருச்சபையாக இருந்தாலும் அது ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து சற்று கலக்காமல் தனியாகவே இருந்தது. கிறிஸ்தவத்த்தின் வரலாறுகளில் பல கருத்து வேறுபாடுகளால் பிரிவுகள் ஏற்பட்டததை நாம் வரலாற்றில் காணலாம். ஆரம்ப காலகட்டங்களில் ரோமன் கத்தோலிக்கத்தை போல இங்கிலாந்தும் (State), திருச்சபையும் (church) முதலில் ஒன்றாக இருந்தது. அதன் பின்பு பல பிரிவுகள் , குழப்பங்கள் தோன்றியது. Magna Carta வை போப் அவமதித்து இங்கிலாந்திற்குள் கலவரத்தை ஏற்படுத்துதினது போன்றவை இதற்கு சாட்சிகள்.
இவ்வாறாக சென்று கொண்டிருக்கும் பொது பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பமே ரோம சபைக்கு ஒரு ஆட்டத்தை கொடுத்தது. ஆம் நீங்கள் நினைத்தது சரியே. மார்ட்டின் லூத்தர் என்னும் புரட்சியாளர் விட்டன்பார்க் என்னும் சபையில் 95 கேள்விகளை எழுப்பினர். இதுவும் இங்கிலாந்து சபையின் காதுக்கு வரும்போது 20 வருடம் கழித்து அவர்கள் ரோமன் கத்தோலிக்கத்தை நேரடியாக சரமாரியாக கேள்விகளால் தாக்கினர். ஹென்றி VIII 1536 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்த ரோம கிறிஸ்தவ துறவிகள் (ஆம் கிறிஸ்தத்திலும் துறவு என்பது அங்கீகரிக்க பட்டதாக இருந்தது ) வாழ்ந்து வந்த ஆசிரமங்களை கலைத்தார். ஹென்றி VIIIஎன்பவர் இந்த காலகட்டங்களில் ஆங்கிலிகன் சபையை ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து தனியே பிரிக்க போப்பிடம் அனுமதி கேட்டார் அனால் அந்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வரலாற்று ஆவணங்கள் இவர் ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்த்தார் என்ற உண்மையை சொல்லுகிறது. ஆங்கிலிக்கன் சபையின் இந்த நடவடிக்கை 500 (கிபி 1054)ஆண்டுகளுக்கு முன்பு ரோமன் கத்தோலிக்கத்தை கிறிஸ்த்தவர்கள் புறக்கணித்ததை போல இருந்ததாக அறிஜர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு புதிதாக பிறந்த ஆங்கிலிக்கன் சபையானது எலிசபெத் I ஆட்சியின் பொது ஒரு முறையான நிர்வாகமானது. அதன் பின் சபைக்கான கோட்பாடுகள் நம்பிக்கைகள் வரையறுக்கப்பட்டது. 1549 ஆம் ஆண்டு முதல் ஜெப புஸ்தகம் அச்சிடப்பட்டது. லத்தீன் மொழியில் இருந்த ஜெபங்கள் பிரமாணங்கள் அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நாம் தற்போது CSI வழியாக ஆங்கிலிக்கனில் இணைந்து இருந்தாலும் அது வருவதற்கும் முன்பும் நாம் ஆங்கிலிக்கன் தான். நம் கையில் வைத்திருக்கும் ஜெப புஸ்தகமும் நம்முடைய பாரம்பரியமும் வெறும் முந்நூறு வருடத்தில் உருவானது அல்ல. அது பதினைந்து நூற்றாண்டுகளின் பாரம்பரியம்.
*பின்னுரை குறிப்புகள்:*
1.ஆங்கிலிக்கன் சபை 6 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது
2.ரோமன் கத்தோலிக்கத்துடன் இருந்த சபை சபை எழுச்சிக்கு பின் தன்னை தனியாக அடையாளப்படுத்திக்கொண்டது
3.திருநெல்வேலி திருமண்டலம் CSI வழியாக ஆங்கிலிகன் முறைமைகளை பின்பற்றி வருகிறது.
ஆங்கிலிகன் வரலாறு என்ற நூலில் இருந்தும் சில ஆங்கிலிக்கன் வரலாறு கட்டுரைகளில் இருந்தும் , எடுக்கப்பட்டது. சபை ஒன்றிணைப்பு என்னும் புத்தத்தில் இருந்தும் சிலதகவல்கள் எடுக்கப்பட்டது.
திருநெல்வேலிதிருமண்டலம் CSI மூலமாக ஆங்கிலிக்கனில் இணைந்துள்ளது ஆதாரம் : http://bit.ly/2K2wOHg
*Translated and collected By Sujith*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory