புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கேள் ஜென்மித்த ராயர்க்கே

கேள் ஜென்மித்த ராயர்க்கே 

கேள் ஜென்மித்த ராயர்க்கே ”* என்ற பாடல் . மற்றெந்த பாடல்களையும்விட
கிறிஸ்துமஸ் உணர்வைப் பிரதிபலிக்கும் பாடல் இது தான் என்றால் அது மிகையாகாது.
கடந்து சென்ற ஆண்டில் எவ்வளவுதான் சோர்வைச் சந்தித்திருந் தாலும் , *“ மண்ணோர் யாரும் எழுந்து , விண்ணோர் போல் கெம்பீரித்து ”* என்ற வரிகளைப் பாடும்போது உலகெங்குமுள்ள மக்களுக்குக் கிறிஸ்துமஸ் பண்டிகை உணர்வையும் உத்வேகத்தையும் அளிக்கிறது .
சோர்ந்து போயிருக்கின்ற ' உள்ளங்களுக்கு உற்சாகத்தை ஊட்டி , ' கிறிஸ்து பிறந்து விட்டார் என்ற உலகிற்கு ' மிகவும் தேவைப்படுகின்ற நற்செய்தியை ' மகிழ்ச்சியுடன் இப்பாடல் உவந்தளிக்கிறது .
இப்பாடல் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசிகளை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது .
இப்பாடலை எழுதிய சார்லஸ் வெஸ்லி , இப்பாடல் வாயிலாக கிறிஸ்து பிறப்பை விரிவாக மக்களுக்கு எடுத்துரைக்கின்றார் .
இப்பாடலின் வழியாக , கிறிஸ்து பிறப்பைப் பற்றி கூறுவதோடு மட்டுமல்லாது .
கிறிஸ்துமஸ் பண்டிகை உணர்வையும் நம்மில் தூண்டி எழுப்புகின்றார் .
தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் 6000 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார் சார்லஸ் வெஸ்லி , *“ கேள் ஜென்மித்த ராயர்க்கே ”* என்ற வெற்றிப் பாடலை எழுதிய இதே ஆசிரியர் தான் *“ இன்று கிறிஸ்து எழுந்தார் என்ற உயிர்த்தெழுந்த பண்டிகை '* பாடலையும் எழுதியுள்ளார் . *“ எந்தன் ஆத்ம நேசரே ”* என்று அனைவராலும் ' பாடப்படுகின்ற பாடலையும் சார்லஸ் வெஸ்லி எழுதியுள்ளார் .
திருச்சபையில் அதிகமாகப் பாடப்படும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும் .
தான் மனந்திரும்பிய ஓராண்டிற் குள்ளாகவே *“ கேள் ஜென்மித்த ராயர்கே ”* பாடலை சார்லஸ் வெஸ்லி எழுதியதாக பாரம்பரியம் கூறுகின்றது .
கர்த்தருடன் பாவி ஒப்புரவாதல் என்ற கருத்தை உள்ளடக்கிய *“ மீட்பராக வந்தவர் , ஒளி ஜீவன் தந்தவர் ”* என்ற வரிகள் சார்லஸின் மனமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது .
*“ சாவை வெல்லப்பிறந்தீர், மறுஜென்மம் அளித்தீர்* என்ற வரிகள் மூலமாக இரட்சகரின் வருகையை விவரிக்கின்றார் .
முதல் சரணத்தில் , “ *மண்ணோர் யாரும் எழுந்து , விண்ணோர் போல் கெம்பீரித்து , பெத்லகேமில் கூடுங்கள் ' '* என்று கர்த்தரின் பிறப்பைக் கொண்டாட மக்களை அழைக்கிறார் .
அடுத்த இரு சரணங்களிலும் கன்னியிடம் பிறப்பு மற்றும் உலக மக்களுக்காக அருள் அவதாரம் எடுத்த கர்த்தராகிய கிறிஸ்து என்ற செய்தி கூறப்பட்டுள்ள .
இயேசு கிறிஸ்துவின் வழியாக கர்த்தர் நிறைவேற்றிய செயல்கள் மிகவும் அழகாக , வரிசையாக கூறப்பட்டுள்ளன .
நாடுகளிலுள்ள மக்கள் எல்லோரும் கிறிஸ்து பிறந்தார் என்பதை அறிவிக்கும் இப்பாடலைப் பாட வேண்டு மென்று அழைக்கின்றார் .
கிறிஸ்துமஸ் காலத்தின் மறக்கமுடியாத அம்சம் என்னவெனில் , கிறிஸ்துமஸ் கீத பவனியாகும் .
ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து குழந்தையாக மாட்டு முன்னணையில் பிறந்துள்ளார் என்ற செய்தியை விளக்கும் பாடல்களை நாம் கேட்கும் போது நம்மையுமறியாமலேயே நாம் நின்று , அப்பாடல்களை உன்னிப்பாகக் கவனித்து பேருவகை கொள்கிறோம் .
இப்பாடல்கள் நமக்காகவே எழுதப்பட்டுள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் .
நமது நாட்டு மக்களின் மீட்புக்காக *பணித்தளங்களில் நம்பிக்கையின் செய்தியைக் கொடுத்து வருகின்ற நமது மிஷனெரிகளையும் நமது ஜெபங்களில் நினைவு கூருவோம்.*
- டேவிட் பென்னி

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory