புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

Rev . கான்ஸ்ட ன்டைன் ஜோசப் வெஸ்கி ( வீரமாமுனிவர் )

அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்*
Rev . கான்ஸ்ட ன்டைன் ஜோசப் வெஸ்கி ( வீரமாமுனிவர் )
Rev . கான்ஸ்டன்டைன் ஜோசப் வெஸ்கி இத்தாலி நாட்டில் உள்ள காஸ்திகிலியோன்
என்ற இடத்தில் 1680 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 - ம் நாள் பிறந்தார் .
ஊயர்நிலை கல்வி கற்று அங்குள்ள ஆலயத்தில் போதகராகப் பணியாற்றினார் .
1710 - ம் ஆண்டு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகமெங்கும் பரவச் செய்யவேண்டும் என்று சிறந்த சிந்தனையுடன் 1710 - ம் ஆண்டு இந்தியாவில் கோவா வந்து சேர்ந்தார் .
சில நாட்கள் கோவாவில் தங்கியவர் 1711 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திற்கு வந்தார் .
தமிழ் மக்களோடு சேர்ந்து உணவிலும் உடையிலும் பழக்கவழக்கத்திலும் ஒரு தமிழனாக வாழ்ந்தார் .
ஜோசப் வெஸ்கி என்ற தன்னுடைய பெயரை *“ தைரிய நாதர் ”* என மாற்றிக்கொண்டார் .
மக்கள் இவருடைய துணிவைக்கண்டு *" வீரமாமுனிவர் ”* என்று அழைத்தனர் .
இவர் ஆங்கிலம் , பிரெஞ்சு , லத்தீன் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , ஆரியம் , இந்துஸ்தானி போன்ற மொழிகளைக் கற்று அறிந்திருந்தார் .
தமிழ் மொழியில் சிறந்து விளங்கினார் கிறிஸ்தவ ஆலயங்களில் மற்றும் கிறிஸ்துவ மக்களிடம் அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்து காணப்பட்டதைக் கண்டு மனம் வருந்தினார் .
அவர்களுக்காக ஜெபித்து அவர்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தார் .
புதிய ஆலயங்களைக் கட்டினார் .
இவரது எளிய வாழ்க்கை கண்டு பலர் கிறிஸ்துவின் அன்பை கண்டுகொண்டனர்.
கிறிஸ்துவின் அன்பை எளிமையாக , இனிமையாக போதிப்பதில் சிறந்து விளங்கினார் , உவமைகளால் கிறிஸ்துவின் செய்திகளை திறம்பட கூறி அனேகரை கிறிஸ்துவின் தொண்டராக மாற்றினார் .
தமிழின் சிறப்பை உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள திருக்குறள் , தேவாரம் , திருப்புகழ் , நன்னூள் , ஆத்திச்சூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டார் . தமிழ்மொழியைக் கற்பதற்கு ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார் .
இதுவே தமிழ் முதல் அகராதி , இயேசுகாவியமான தேம்பாவணியை இயற்றினார் .
தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார் . 9 மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும் பெயராலும் , பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தார் .
1742 - ம் ஆண்டு மதுரை பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர் கால்நடையாக நடந்து கேரள மாநிலத்திலுள்ள அம்பலக்காடு என்னும் இடத்தில் தன்னுடைய ஊழியத்தை நடத்தினார் .
இவரது பணித்தளங்கள் , பல கிறிஸ்தவ நிறுவனங்கள் , மன்னர் திப்பு சுல்தான் காலத்தில் இடம் தெரியாமல் அழிந்துபோயின .
1746 முதல் 1747 - ம் ஆண்டு காலகட்டத்தில் வீரமாமுனிவர் மரித்து இருக்கலாம் என்று அக்கால அறிக்கைகள் மூலமாக அறியலாம் என்றும் தமிழ்நாட்டில் உள்ள மணப்பாட்டில் இறந்தார் என்றும் கூறப்படுகிறது .
இத்தாலி நாட்டிலிருந்து இந்தியா வந்து தமிழ்மொழியைக் கற்று தமிழ்நாட்டை தாய்நாடாக போற்றி அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பையும் எடுத்துரைத்து திருமறைச்செல்வராக , பன்மொழிப்புலவராக , ஓவியக் கலைஞராக , இசை ஆர்வம் மிகுந்தவராக , கலையறிவும் , குணநலமும் பொருந்தியவராக கிறிஸ்துவின் சேவையை வாழ்நாள் முழுவதும் உற்சாகமாய் செய்த வீரமா முனிவர் என்ற ஜோசப் பெஸ்கி 1747 - ம் ஆண்டு நமது நாட்டிலே கோதுமை மணியானார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory