புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் -- வில்லியம் வால்ஃபோர்டு

 என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் ”
" Sweet hour of Prayer " *ஞானக்கீதங்கள் வரலாறு*
இயற்றியவர் :-
*வில்லியம் வால்ஃபோர்டு* ( WILLIAM WALFORD )
1842 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் , கோல்ஸ்றில் என்னுமிடத்தில் , வில்லியம் வால்ஃபோர்டு என்னும் கண்பார்வையற்ற போதகர் , தமது அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
கண் பார்வை இல்லாததால் அவர் அதிக நேரம் ஜெபதில் தரித்திருப்பது வழக்கம்.
அன்று அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது , அவரது நண்பரான போதகர் தாமஸ் சால்மன் அவரிடம் வந்தார்.
வந்தவர் யாரென்று - தெரிந்தவுடன் , வால்ஃபோர்டு அவரிடம் , ' ' என் மனதில் ஜெபத்தைக் குறித்த ஒரு பாடல் உருவாகிக்கொண்டிருக்கிறது .
நான் சொல்லச் சொல்ல அதை எழுதிக் கொள்ளுங்கள் ' எனக் கவி வரிவரியாக அதைச் சொல்லவே , போதகர் சால்மன் அதை எழுதிக்கொண்டார் .
எழுதி முடித்தவுடன் அதைப் படிக்கக் கேட்டு , வால்ஃபோர்டு அவர்கள் அதைச் சரியென ஒத்துக்கொண்டார் .
சால்மன் போதகரும் இப்பாடலின் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டார் .
இரு ஆண்டுகளுக்குப்பின் சால்மன் போதகர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்குச் சென்றார் .
அங்கு 1848 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாவதாக இப்பாடல் ஒரு கிறிஸ்தவப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது .
இப்பாடலைப் பார்த்தவரெல்லாரும் அதைப் பாராட்டினர் .
சரீரக் கண்கள் பார்வையற்றிருந்தாலும் , தனது ஆத்தும கணகளின் மூலம் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்ததால் , வால்ஃபோர்டு அவர்களால் இப்பாடலை எழுத முடிந்தது.
வில்லியம் பிராட்பரி என்னும் சங்கீத நிபுணர் இப்பாடலுக்கு ஓர் அழகிய இராகத்தை அமைத்தார் .
இதுவே நாம் இப்போது இப்பாடலுக்கு உபயோகிக்கும் இராகமாகும் . ' இப்பாடலை எழுதிய வில்லியம் வால்ஃபோர்டு அவர்கள் 1800 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார் .
இளவயதில் மிகவும் ஏழையாயிருந்தார்.
சிறுவனாயிருக்கும்போது விளையாட்டுச் சாதனங்களைச் செய்து விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
அடிக்கடி பண நெருக்கடிகளும் , மற்றும் பல கவலையான நிலைமைகளும் அவரைத் துன்புறுத்தின.
அச்சமயங்களில் அவர் ஆண்டவரின் பாதத்தில் வெகுநேரம் ஜெபத்தில் தரித்திருந்து , தன் கவலைகள் நீங்கப் பெற்றார் .
இவ்விதமாக அதிகமான ஆத்மீக அனுபவம் அவருக்குக் கிடைத்தது .
கண்பார்வையற்றிருந்தாலும் , அடிக்கடி ஆலய ஆராதனைகளில் அருளுரை ஆற்ற அவர் அழைக்கப்பட்டார் .
பல ஆண்டுகளுக்குப்பின் , அவர் போதகராக அபிஷேகம் பெற்று , சில சபைகளில் திருப்பணியாற்றினார் .
அவர் 1875 ஆம் ஆண்டு தமது எழுபத்தைந்தாம் வயதில் காலமானார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory