மிஷனரி ஜே . பி . ராட்லர் ன் ஜெப வாழ்வினால் சிக்கல்கள் தீரும்
யுத்தங்கள் எங்கு பார்த்தாலும் கவலையும் , கண்ணீரும் நிறைந்திருந்தது.
வாழ்வையே வெறுத்து மக்கள் ஏனோ தானோவென்று நடமாடிக் கொண்டிருந்தனர்.
பஞ்சத்தினால் பசியும் , பட்டினியுமாய் பரிதாபமாகக் காட்சியளித்தனர்.
ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லாமல் வீதிகளில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தியாவின் இந்நிலைமை வெளிநாட்டவருக்கு இரக்கத்தை ஏற்படுத்தியது.
ஜெர்மனியில் பிறந்த ராட்லர் இந்தியாவின் வேதனையை நீக்கி நற்போதனையைத் தர இடம்பெயர்ந்தார்.
தரங்கம்பாடி என்ற இடத்திற்கு ராட்லர் 1776ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார் .
ஏற்கனவே அங்குப் பணிசெய்த மிஷனெரிகளுடன் இணைந்து ஊழியங்களை உற்சாகப்படுத்தினார்.
ராட்லர் சிறுபிள்ளைகளின் மேல் மிகவும் பிரியமுள்ளவர் .
எனவே மிஷனெரி ஜான் என்பவர் நிறுவிய பள்ளியை மிகவும் சிறந்த முறையில் வளர்ச்சி பெறச் செய்தார் .
செடி , கொடிகளை வளர்த்து பள்ளிக்கூடங்களைச் சுற்றி அழகியத் தோட்டங்களை உண்டுபண்ணினார் .
அப்பள்ளியின் மூலம் சிறுவர்களின் அறிவுக் கண்கள் திறக்கப்பட்டன .
ஏழை எளியவர்க்கு வருமானம் பெற்றுத் தர நூல் காலுறைகளைத் தயாரிக்கும் கூடம் ஒன்றைக் கட்டி அதனைத் திறம்பட நடத்தினார் .
முதன்முதலாக இத்தொழிலை அறிமுகப்படுத்தியவர்ராட்லரே .
இதனால் ஏழைகளின் வாழ்வு மலர்ந்தது . தரங்கம்பாடி மட்டுமல்லாமல் சென்னையிலும் பல இடங்களில் குருவாகப் பணியாற்றினார் .
மக்களிடையே காணப்பட்ட உயர்வு தாழ்வுகளைக் கண்டித்தார் . *" ஜெப வாழ்வினால் சிக்கல்கள் தீரும் "* என்பதைத் தன் வாழ்வில் கடைபிடித்த ராட்லர் ஜெப் புத்தகம் ஒன்றையும் தமிழில் வெளியிட்டார் .
60 வருடங்கள் . இந்தியாவில் மிஷனெரியாகப் பணியாற்றிய ராட்லர் தமது 87வது வயதில் இப்பூலோகப் பணியை முடித்து மேலோகம் சென்றார்.
No comments:
Post a Comment