புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

S P G மிஷனில் L , M . S சபைகளை இணைத்த சுவாரசியமான சம்பவம்



S P G மிஷனில் L , M . S சபைகளை இணைத்த சுவாரசியமான சம்பவம்
L . M . S மிஷனெரியாக இருந்த கனம் . ராபர்ட் கால்ட்வெல் ( Rev . Robert Caldwell ) 1841 - ஆம் வருட இறுதியில் திருநெல்வேலியில் S . P . G . மிஷனெரியாக நியமிக்கப்பட்டார்.
அவர் S . P . G மிஷனில் இணைந்ததால் அவ்வருடம் ஜூன் மாதம் 29 ஆம் நாள் L . M . S மிஷனோடிருந்த தொடர்பை ராஜினாமா செய்துவிட்டார்.
அவர் இடையன்குடியைத் தலைமை ஸ்தானமாக்கி அங்கிருந்து ஊழியம் செய்யும்படி அனுப்பப்பட்டார்.
அவர் சென்னையிலிருந்து புறப்பட்டுக் கால்நடையாகவே தஞ்சை வந்து , அங்கிருந்தும் நடந்தே உதகை சென்று உதவிக் குருப்பட்டம் பெற்று , பின்னும் நடந்தே கோயமுத்தூர் , திண்டுக்கல் , மதுரை மார்க்கமாய்ப்பாளையங்கோட்டை சேர்ந்து , நவம்பர் 28 - ஆம் தேதி நாசரேத்துக்கு வந்தார்.
கால்ட்வெல் அத்தியட்சர் இடையன்குடி மிஷனெரியாக 1841 நவம்பர் மாதம் வந்ததிலிருந்து C . M . S . , S . P . G . சங்கத்தார் ஊழியத்தில் ஒரு புதிய ஒழுங்குமுறையை ஆரம்பித்தார்.
அதுவரை C . M . S . சங்கத்தாரின் ஊழியம் வெகுவாய் உள்நாட்டிலும் , S . P . G . ' சேவை தென் கீழ்க்கடற்கரைப் பிரதேசத்திலும் நடததெனினும் , C , M . S . ஐச் சேர்ந்த சில சபைகள் S . P . G . ஜ சேர்ந்த ஊழிய முகாமுக்குள்ளும் , S . P G சபைகளில் சில C . M . S . பிராந்தியங்களுக்குள்ளும் இருந்தன .
1843 , 1844 ல் இரு சங்க மிஷனரிமாரும் கூடி ஆலோசித்துத் தத்தம் எல்லைகளை வகுத்துக்கொண்டனர்.
அதுவரையிலும் அந்த இரு சங்கங்களின் சபைகளின் எல்லைகளும் ஒன்றுக்குள் ஒன்றாய் இணைந்திருந்தன.
இது ரேனியஸ் ஐயரின் காலத்தில் சபைகளின் ஒற்றுமையை வளர்த்ததோடு எல்லா சபைகளையும் ஒரே விதமாக மேற்பார்வை செய்வதற்கு வசதியாயிருந்தபோதிலும் ஒரே விதமான கிராம மக்கள் வேறு வேறு சபை தொடர்பு உடையவர்களாக இருப்பதும் , வேறு வேறு கண்காணிப்பாளர்களைச் சந்திக்க வேண்டியதாயிருப்பதும் நாட்டுப் போதகர்களுக்கும் , பள்ளி ஆசிரியர்களுக்கும் குழப்பமும் தர்ம சங்க முமாயிருந்தது.
இது குறித்து S . P . G . Digest ல் கூறப்பட்டிருப்பதாவது , . . . பள்ளிகள் , சபைகள் மற்றும் சாதாரண பொறுப்பாளர்கள் ஆகிய பரிமாற்றங்களில் கஷ்டங்கள் ஏற்பட்டதுமல்லாமல் , ஒரு சேகரத்தைத் தங்களுக்குள்ளே பிரித்துக்கொள்வது என்பது பொதுவான நன்மை சார்ந்த நல்லுணர்வுகளைப் பாதிப்பதாக இருந்தது.
முந்தைய மிஷன்களின் நீண்டகால கவனக்குறைவின் விளைவாக திருநெல்வேலி பணித்தளங்களின் பெரும்பகுதியை C . M . S . பெற்றுக்கொண்டது , S . P . G . ன் ந வடிக்கைகள் தென்கிழக்கு எல்லைப் பகுதிக்குட்பட்டுவிட்டது. என்று கூறப்பட்டிருந்தது.
C . M . S . , S . P . G ஆகிய இரண்டு சங்கத்தாருடைய நாட்டுப் போதகர்களும் தங்களுக்குள்ளே ஒரு சங்கத்தாரின் சபையையும் , ' சொத்துக்களையும் மற்றொரு சங்கத்தாருடையதென உரிமை கோரிவந்தனர்.
இதனால் 1843 - ம் ஆண்டில் , C . M . S . , S . P G சங்கத்தினரின் நெல்லை மிஷனெரிமார் அவர்களின் மிஷன் பணித் தளங்களை முறையே பிரித்து தங்கள் வட்டார எல்லைகளைச் சற்று மாற்றி அமைத்துக் கொண்டனர்.
அதின் படி முதலூர் , சாத்தான் குளம் மெஞ்ஞானபுரம் , நாசரேத் வட்டாரங்களும், சுவிசேஷபுரம் , இடையன்குடி , சாயர்புரம் , பண்ணைவிளை வட்டாரங்களும் திருத்தி அமைக்கப்பட்டன , நாசரேத் வடக்கிலுள்ள உக்கிரன் கோட்டை , பார்வதியாபுரம் , பாளையங்கோட்டை பத்மநாபபுரம் சபைகளைப் பாளையங்கோட்டை C . M , S . க்கு விட்டுவிட்டு , அங்கிருந்து ஆழ்வார்திருநகரி , திருக்கோளூர் என் ஊர்களின் சபைகளையும் , மெஞ்ஞானபுரத்திலிருந்து ஒய்யான்கள் சபையையும் S . P . G . சேர்த்துக்கொண்டது.
இது தவிர மற்ற வட்டாரங்களிலும் பல மாறுதல்கள் உண்டாயின.
திருநெல்வேலியிலும் , அதனை அடுத்து நாகர்கோவிலிலும் நிறுவப்பட்டிருந்த C . M . S . , S . P . G மற்றும் L . M . S . ஆகிய மூன்று மிஷன்களும் ஆரம்பமுதலாகவே ஒரு எச்சரிக்கை உணர்வைப் பெற்றிருந்தன.
முதலாவது C . M . S மற்றும் S , P . G மிஷன் சேகரங்கள் வசதியற்ற விதத்திலும் குழப்பமான விதத்திலும் இணைந்திருந்தன.
ஆனால் இரு சங்கத்தாருடைய ஸ்தலங்களும் ஒன்றுக் கொன்று மிகவும் அருகில் அமைந்திருந்தபோதும் , அவர்களின் மிஷனெரிகள் நட்புடனிருந்தபோதும் அவை ஓரளவிற்கு மாற்றம் செய்தும் , திருத்தி ஒழுங்குபடுத்தியும் பிரித்து சரி செய்யப்பட்டன.
L . M . S . ஐ பொருத்தமட்டில் அதன் சில கிராமங்கள் 1844ல் L . M . S . ன்தலைமை மிஷனெரியின் மகளுக்கும் S . P . G , மிஷனெரி கால்டுவெல்லுக்கும் திருமணம் நடைபெற்ற காலத்தில் S . P . G . மிஷனுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன.
இதனால் அந்த கிராமங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த L . M . S சபைகள் S . P . G சபைகளாயின .
இக்காலக்கட்டத்தில் திருநெல்வேலியின் எல்லைப் பகுதியைச் சேர்ந்த திருவிதாங்கூரின் தென்கிழக்கு எல்லைப்பகுதியில் S . P . G மிஷனின் மேற்பார்வையிலிருந்த *பிச்சைக்குடியிருப்பு சபை* L . M . Sக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது.
S . P ' . C . K ன் ஊழியத்தால் உருவான இந்தச் சபை S . P . G மிஷனில் மேற்பார்வையிலிருந்த போதிலும் S . P . G மிஷனுக்கு விட்டு கொடுக்கப்படாமல் L . M . S க்கு மாற்றிக் கொடுக்கப் பட்டிருப் இந்தப் பிச்சைக்குடியிருப்பு சபையை L . M . S ஊழிய ஸ்தல திருவிதாங்கூர் எல்லைக்குள்ளேயே S . P . C . K உருவாக்கியிருந்தனர் என்று தெளிவாக விளங்குகிறது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory