S . P . C . K . சபைகள் S . P . G . மிஷனுக்கு மாற்றப்படுதல்*
1822 முதல் 1829 வரையுள்ள ஏழு வருடங்களில் மிஷனெரி ஊழியங்களில் ஒரு மாறுதல் உண்டாயிற்று.
S . P . C . K பொதுக்குழு 1825 ஆம் வருடம் 7 ஆம் நாள் கூடி , அதுவரை S . P . C K ஏற்படுத்தியிருந்த ஊழிய ஸ்தலங்களைக் கவனித்துக்கொள்ள இயலாதென்று எண்ணியதால் , அதன் தென்னிந்திய மிஷனை , கிழக்குத் திருநெல்வேலி பகுதியில் கிறிஸ்தவ ஊழியம் செய்வதற்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்த புரோட்டஸ்டன்ட் S . P . G ( Society for the Propagation of the Gospel ) மிஷனுக்கு மாற்றம் செய்யப்பட்ட சபைகளாக ஒப்படைக்கத் தீர்மானித்தது.
அதனால் அச்சபைகள் S . P . G . ன் பராமரிப்பில் செல்ல இருந்தன .
இந்த மாற்றம் செய்வதற்குக் கொள்கையளவில் 1825 ல் முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அது நடைபெறுவதற்குச் சில காலம் சென்றது .
1826 ம் வருடத்தில் S . P . C . K சங்கத்தார் தங்கள் தென் பகுதிகளில் நடந்த மிஷனெரி ஊழியங்களை S P G சங்கதாரிடம் ஒப்படைத்தனர்.
அவ்வருடம் முதல் தஞ்சாவூர் , தரங்கம்பாடி , திருநெல்வேலி முதலான இடங்களில் கிறிஸ்தவ அபிவிருத்தி ( S . P . C . K ) சங்கத்தார் விசாரித்துவந்த சபைகள் - விசேஷ பிரபல ( S . P . G ) மிஷனைச் சேர்ந்து " S . P G சபைகளாக மாறின.
1826 ஆம் வருடம் மே மாதம் 15 ஆம் நாள் S . P . G ன் சென்னைக் குழு உருவாக்கப்பட்டது .
அதன் செயலர் Rev . Wm . ராய் Rev . Wm . Roy ) , கோல . ப் ( Rev . Kohlhot ) ஐயரிடமும் , ஹொட்ரோ ஐயரிடமும் தஞ்சாவூரில் வைத்து , திருநெல்வேலி மிஷனைப் பற்றி ஆலோசனைக் கேட்டார்.
அதற்கு அவர்கள் இருவரும் இச்சங்கத்தார் தாங்கள் S . P . C . K . சபைகளை ஏற்றுக்கொண்டவுடன் தாங்களே மிஷனெரிமாரை அனுப்பக் கூடாமலிருந்தமையால் , ஒரு மிஷனெரியை அனுப்புவதுவரை திருநெல்வேலி மிஷனை தஞ்சாவூர் மிஷனின் விசாரிப்பில் விடுவது நல்லது என்றனர் .
அதனால் Rev . Wm . ராய் திருநெல்வேலிச் சபைகளை முன்னிருந்தபடியே அருகிலிருந்த C . M . S . மிஷனெரிகளான ரேனியஸ் மற்றும் ஸ்மிட் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
*C , M . S . மற்றும் S . P . G சபையாருக்கு இடையே அடிக்கடி எல்லைத் தகராறு இருந்துவந்தது.*
அவைகளை ரேனியஸ் ஐயரும் அவருக்குப் பின்ரோசன்ஐயரும் சுமூகமாய்த்தீர்த்துவைத்தனர்.
*இது தொடர்பாக இளைய கோலப் ஐயர் கால்டுவெல் ஐயருக்கு எழுதியிருப்பதாவது 

திருநெல்வேலி மிஷனை ரேனியஸ் ஐயர் கனிவாகக் கவனித்து வந்த சமயத்தில் அவருடைய போதகர்கள் அவ்வப்போது எங்களுடைய நாட்டு உபதேசிகளால் உபதேசிக்கப்பட்ட மக்களை அழைத்துச் சென்றுவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதாவது கூறப்படுவதுண்டு. ஆனால் , அவர்கள் அப்படிச் செய்வார்களென்று ரேனியஸ் ஐயர் நம்புவதில்லை.
உபதேசியார் தன்னுடையது என்று உரிமை கோரிய ஒரு சபையை சந்திக்க ஏவுதலடைந்து சென்றார்.
ஸ்தலத்திற்குச் சென்று விசாரித்தபோது சபையாருக்கு ஆலோசனை சொல்லி, மிஷனெரிகளின் வழக்கத்தின்படி சிறு ஜெபம் செய்தார்.
~அப்போது கர்த்தருடைய ஜெபம் சொல்லாமல் முடிப்பதே அவர்களுடைய வழக்கமாக இருந்தது.~
ஆனால் ஜெபத்தின் முடிவில் ஆமென் சொல்லி முடித்தவுடனேயே அவர் ஆச்சரியப்படும் விதத்தில் சபையார் அவசரமாக கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இது அந்த சபையார் நாட்டு உபதேசியாரால் உபதேசிக்கப்பட்டவர்கள் என்ற திருப்தியை அவருக்குள் ஏற்படுத்தியது .
உடனே அவர் நாட்டு உபதேசிகளின் பணிகளில் குறுக்கிடக்கூடாது என்று தன்னுடைய ஊழியர்களைக் கண்டித்தார் .
இதனால் இந்த சபை S . P . G . மிஷனிடத்திலேயே வைத்துக்கொள்ளப்பட்டத என்றவாறு எழுதியிருந்தார்.
No comments:
Post a Comment