புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கடையனோடை திருச்சபை

தீச் சட்டியும் பண்டாரமும்
கடையனோடை திருச்சபையின் வரலாற்று உண்மை சம்பவம்
கடையனோடைத் தெருக்களிலொன்றில் ஒரு கூட்டம் வீடு வீடாய்ச் சென்றது அந்தப் பெப்ருவரி மாதத்தின் ஒரு பிற்பகலில ( 1864 ). கூட்டத்தின் முன் ஒரு பண்டாரம்.
காவி வஸ்திரம் ; நெற்றியிலும் மார்பிலும் புஜங்களிலும் திருநீறு ; தலையில் சடைபிடித்து , எண்ணைச் சிக்குப் பிடித்தது போன்ற கேசம் ; காலில் மரக்கட்டைச் செருப்பு ; கையில் தூக்கிப்பிடித்த ஒரு தீச்சட்டி ; அதிலிருந் தெழும்பும் புகை.
அவனைச் சுற்றி மேளக்காரரும் வாத்தியக் காரரும் . சிறுவரும் பெரியவர்களுமாக அவனைப் பின் தொடர்ந்த கூட்டத்தினர் அவனை ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்துக்கொண்டிருக்க , வீட்டினுள்ளிருந்து வந்த ஒருவர் , கிட்டிய அவனுடைய ஒரு கையில் , ஏதோ ஒரு நாணயத்தைப் பயபக்தியுடன் வைத்தார்.
வாங்கிக் கொண்ட அவன் , மேளவாத்தியக்காரர் இசை யுடன் புடைசூழ , அடுத்த வீட்டுக்குச் சென்றான்.
கூட்டம் பின்தொடர்ந்தது. வீட்டின் முன் நின்று அவன் உரத்த சத்தமாய் , *வீரவசந்தராயர் வந்துகொண்டிருக்கிறார்.*
தாழ்ந்த சாதிக்காரரையெல்லாம் , அதிலும் *கிறிஸ்தவர்களை யெல்லாம்,* அவர் அழித்தொழிப்பார்.
அவர்களுடைய *தேவாலயங்க ளெல்லாவற்றையும் தரைமட்டமாக்குவார்.* என்று ஜோ சி ய ம் கூறினான் .
கூட்டத்தினர் , அச்சம் கலந்த நோக்குடன் , ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வீட்டுக் கதவு திறந்தது . முதியவர்ளொருத்தி வெளிப்பட்டு நீட்டப்பட்ட அவனுடைய கரத்தில் காணிக்கை வைத்தாள் , வாங்கிக் கொண்ட அவன் மேள வாத்தியத்துடன் அடுத்த வீட்டுக்குச் சென்று அதே வார்த்தைகளைச் சொல்ல , அங்கும் அவனுக்குப் பணம் கிடைத்தது. இவ்வாறே வீடுதோறும் , தெருக்கள் தோறும் சுற்றிக் , காசு பெற்றான்.
கடையனோடை நாடார் குலத்தினரனைவரும் கிறிஸ்தவர்களே யெனினும்,
தீச்சட்டியைக் கையிலேந்தினபோதிலும் அது அவனைச் சுடவில்லை . அவனுக்குத் தீங்கொன்றும் ஏற்படவில்லை.
ஆகையினால் , அவனிடத்தில் ஏதோ தெய்வீகச் சக்தியிருக்கிறது ! , அவன் சபித்து விட்டால் துன்பம் வரும் ' என்றெண்ணி , அஞ்சி , அவனுக்குக் காணிக்கை கொடுத்தனுப்பினர்களே யன்றி , வேறு காரணமெதற்காகவுமல்ல . சேகரித்த பணத்துடன் மந்தை வெளிக்கு அவன் வந்தான்.
கூட்டமும் பின் தொடர்ந்தது . உபதேசியாரும் அங்கு வந்து சேர்ந்தார்.
பண்டாரமும் அவனது சகாக்களும் வீரவசந்தராயரின் வீரப் பிரதாபங்களை அளந்து கொண்டிருந்தனர்.
கடையனோடைச் சபை வாலிபனொருவன் மற்றவர்களை விடச் சற்று வித்தியாசமானவன். புத்திசாலி . *எக்காரியத் தையும் துருவி அறிய ஆசைப்படுபவன்.*
இந்தத் தீச்சட்டி பண்டாரத்தின் கையைச் சுடவில்லை . அது ஏன் ? வேறு யாராவது அதைக் கையிலேந்தினால் சுட்டுவிடுமோ ? அதை வாங்கிக் கையில் வைத்துத்தான் பார்ப்போமே ! சுட்டு விட்டால் ? . . . சுட்டால் சுட்டும் . கீழே போட்டு விடலாம் ' ' இப்படி யெண்ணினவன் திடீரென்று , பண்டாரம் கவனியா திருந்தபொழுது இரு கைகளாலும் அவன் கையிலிருந்த சட்டியைத் தூக்கித் , தன் வலது உள்ளங்கையில் வைத்து ஏந்தித் , தூக்கினான் .
ஆ , ஆச்சரியம் ! சட்டி சுட வேயில்லை ! திடுக்கிட்ட பண்டாரம் நடந்ததைக் கண்டு விக்கித்துப் போனான்.
கூட்டம் ஆச்சரியத்தால் வாயைப் பிளந்து நின்றது.
அந்த வாலிபன் சிரித்துக்கொண்டு, சட்டி சுடவில்லையடா ! . . . என் கையைச் சுடவேயில்லையென்று கத்தினான்.
உபதேசியார் அவன் கையிலிருந்து சட்டியை வாங்கினார் . உடனே பண்டாரம், அதை என்ன தும் செஞ்சியோ , சாமி சும்மா விடாது . அடிச்சிப்பூடும்.
*ரெத்தங் கக்கிச் சாவ . பேதிலே போவ. குடுத்திடு , எங்கிட்டக் குடுத்திடு* என்று ஆவேசம் கொண்டவன் போல் கதறி , வாயில் வந்த வசை மொழிகளையெல்லாம் வீசினான் உபதேசியார் அதைச் சட்டைபண்ணவில்லை.
அவர் அச்சட்டியைத் தூக்கிப்பிடித்து, எல்லாரும் பார்த்துக்கொண்டு இருக்க அதைத் தலை கீழாகக் கவிழ்த்தார்.
நெருப்புக்கங்குகள் விழுந்து சி த றி ன , அவற்றின் மேல் தொப் . . . . ! அதென்ன ? ஒரு கட்டி ஈரக்களிமண் ! ! அரைச் சட்டியளவான களி . பண்டாரம் , தனக்குத் ' தாகமாயிருக்கிறது தண்ணீர் தாருங்கள் என்று கேட்க , ஒருவன ஒரு செம்பு நிறையத் தண்ணீர் கொடுத்தான்.
அதைப் பெற றுக்கொண்ட பண்டாரம் உடனே அதை அக்களிமண் மேல் ஊற்றினான் . அ தி னா ல் தான் அது ஈரமாயிற்று என்று ஏமாற்றுவது அவனது நோ க் க ம்.
ஆனால் அவ்வளவு மந்தப் புத்தியுள்ளவர்களல்ல அம் மக்கள் : தெருவில் தாங்கள் ஏமாந்து அவனுக்குப் பணம் கொடுத்து விட்டதை நினைத்துக்கொண்ட அவர்கள் , அவனிடம் , ' கொடுத்த பணத்தைத் திருப்பித்தா ' வென்று கேட்க வாரம்பித்தனர்.
அவ்வளவுதான் , பண்டாரம் தலை தெறிக்க ஓட்டமெடுத்தான் ! வாத்தியக்காரர் அ வ ன் பின்னால் ஓடினர்.
ஊரார் ஊரெல்லைவரை அவர்களை துரத்திவிட்டுத் திரும்பினார்கள் . அது முதல் கடையனோடைச் சபையாரை எவரும் அவ்வாறு ஏமாற்றத் துணிந்ததில்லை ! . . . . . . . . . . முடியுமா . . . ?
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory