வெள்ளாளன் விளை வேதநாயகம் சாமுவேல் அசரியா ( 1874 - 1945 )*
இந்த மிஷனெரி கர்த்தரால் உருவாக்கப்பட்டவர் !
இந்திய மிஷனெரி சங்கம் தோற்றுவிக்கப்பட காரணமாயிருந்தவர்களில்
சிறப்புக்குரியவர் பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா !
மிஷனெரியாக பொதுக்காரியதரிசியாக குருவாக பேராயராக இந்தியமிஷனெரி சங்கத்துக்கு செய்த அரிய பெரிய தேவை நினைவிற்கும் நன்றிக்கும் உரியது.
கர்த்தர் அசரியாவை உருவாக்கிய பெரியவார்ப்பை உடைத்துப் போட்டார்.
பேராயர் அசரியா அவர்களை சாதாரண ஒரு மனிதனாகக் கருத முடியாது இவரை இறைவன் சிறுவயது தொட்டே தமது திட்டத்திற்கென உருவாக்கியுள்ளார் - என இவரைப் பற்றி ஒரு தலைவர் கூறுகிறார்.
இவரது இளமை , வாலிபம் , ஆரம்பகாலப் பணி - இவர் சந்தித்த சவால்கள் - எப்படி இவரை ஓர் உயரிய மனிதனராக உருவாக்கிற்று.
கர்த்தர் எவ்வாறு தம்முடைய பணியை நிறைவேற்றுகிறார் என்பதை பேராயர் அசரியாவின் வாழ்க்கை நமக்கு போதிக்கிறது.
*கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட பெற்றோர்*
இந்து சமயத்தில் வைராக்கியமுள்ள ஒரு வாலிபனாக வாழ்ந்த இவரது தகப்பனார் - வேலாயுதம் ( தாமஸ் வேதநாயகம் ) கனம் ஜாண் தாமஸ் - மெய்ஞானபுரம் பகுதி மிஷனெரி தென் நெல்லை அப்போஸ்தலன் - அவர்களால் மாற்றப்பட்டார்.
கிறிஸ்தவராகி உபதேசியாராக குருவாக அழைக்கப்பட்டார் 1874இல் ஆகஸ்டு 17 ல் பிறந்த தன் மகனுக்கு சாமுவேல் ( சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் பிறந்ததால் ) எனப் பெயரிட்டார்.
*கர்த்தாவே சொல்லும் - கேட்கிறேன்*
தன் பெயருக்கேற்ப சிறுவயதில் தேவனோடு தனது உறவை வைத்துக் கொள்ள பெற்றோர் உதவினர்.
கர்த்தருக்கென்று வளர்க்கப்பட்டார் கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் - என அன்று சாமுவேல் ஜெபித்த வண்ணம் ஜெபிக்கக் கற்றுக் கொண்டார்.
மிஷனெரி ஜான் தாமஸ் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து ஜெபிக்கும் பெற்றோர்கள் அல்லவா ! -
*கதறி அழுது ஜெபித்த சிறுவன்*
வெள்ளாளன்விளை தேரியில் மாலை வேளையில் ஒரு அழுகுரல் போன்ற சத்தம் கேட்ட சிலர் ( தங்கள் வேலையிலிருந்து வீடு திரும்பியவர்கள் ) அதை கவனிக்க இறைவா காளி காட்டேரி போன்ற எண்ணற்ற தேவர்களைத் தொழுதுகொள்ளும் எம் நாட்டு மக்கள் உண்மைத் தெய்வமாகிய உம்மை , எப்போது வாங்கப் போகிறார்கள் என சிறுவன் , தங்கள் சபை குருவானவரின் மகன் சாமுவேல் வேதநாயகம் அறிந்துகொண்டனர்.தேச மக்கள் மீது இவ்வளவு அக்கறையோடு ஜெபிக்க சிறுவனைத் தட்டிக் கொடுத்தனர்.
*கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட சாமுவேல்*
மிஷன் பள்ளியில் கொய்யாப் பழங்களைத் திருடியதற்காக அடிப்பதற்கென மிஷனெரியாரின் மனைவி முன் நிற்கிறார் சின்னத் தம்பி சாமுவேல் , அம்மா சொல்லுகிறார்கள் . நான் உன்னை அடிப்பதில்லை ; உங்கள் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன் . என்றதும் , அம்மா நீங்களே என்னை அடித்துவிடுங்கள் ; எங்கள் அம்மா அடிப்பதை என்னால் தாங்க முடியாது என்று கதறினான். அவ்வளவு கண்டிப்பாக வளர்க்கப்பட்டவர் சாமுவேல் ஆசரியா !
*கல்வியுடன் கர்த்தரின் வார்த்தைகளும்*
அக்கால் வழக்கத்தின்படி கிராம் பள்ளியில் மணல்மேல் விரலால் எழுதியும் , பனை சுவடிகளில் எழுதியும் , பார்த்து படித்த சிறுவன வேதவசனங்களை மனப்பாடமாக படிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார் . பத்து வயதுக்கு மேல் , விடுதியில் தங்கியிருந்து படித்த நாட்களில் - சனி , ஞாயிறு ஆகிய நாட்களில் - வேதாகமத்தில் , ஒவ்வொரு புத்தகத்தின் ஒரு அதிகாரத்தை மனப்பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய கண்டிப்புடன் - அவைகளையும் கற்று . ஆசிரியர்களால் பாராட்டப் பெற்றார்.
*கல்வியுடன் கலையும் - கைச்செலவு பணமும் வயது 10*
மெய் ஞானபுரத்தில் அன்று தலைமை ஆசிரியர் இவரது மூத்த சகோதரர் அம்புரோஸ் - அச்சுக்கூடமும் அங்குண்டு . மாலை வேளையில் அச்சுயந்திரங்களின் தூசிகளைத் துடைப்பதும் அச்சு எழுத்துக்களைச் சரிபடுத்தி வைப்பதும் வழக்கமான ஒரு வேலையாக ஏற்றுச் செய்த சாமுவேலுக்கு கைச் செலவு பணம் கிடைத்தது.
இந்த அச்சுக்கலை . பிற்காலத்தில் தோர்ணக்கல் பகுதியில் , இவரது பணிக்கு பயனுள்ளதாக இருந்தது.
*கர்த்தரின் பணிக்கு கைக்காப்பு*
ஆப்பிரிக்கா நாட்டின் , உட்காண்டா பகுதியின் மிஷினெரி ஊழியங்களைக் குறித்து , பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் - ஊழியத்திற்கு உதவிட , அங்கு சென்றிட , அழைப்பு கொடுத்த வேளையில் - *சிறுவனாக தன் தங்க காப்புகளை கழற்றி* , காணிக்கையாகப் படைத்த - இந்த சம்பவம் , இளம் வயதிலேயே இவர் உள்ளத்தில் உதித்த மிஷனெரி தாகத்தை வெளிப்படுத்தியது.
*கிறிஸ்துவ ஈகைக்கு ஓர் முன் உதாரணம்!*
தம்முடைய 12 ஆம் வயதில் இயேசு , தமது பிதாவுக் கடுத்தவைகளில் தாம் செயல்பட வேண்டுமென்று சொன்ன பெண்ணமாக , இவரும் இவ்வயதில் எதற்காகக் கர்த்தர் தம்மை இவ்வுலகில் உருவாக்கினாரோ அதற்கேற்றவாறு விருத்தியடைந்து வந்தார்.
*கல்லூரியில் கர்த்தருக்கென*
1888 பாளையங்கோட்டையில் C . M . S : கல்லூரியில் F . A . ( இன்ட மீடியட் ) படிக்கும் காலங்களில் வெறும் கல்வி மட்டுமல்ல , ஜாதி மத பேதமின்றி யாவரும் சகோதாராக வாழ வேண்டும் என்ற உணர்வுடன் *" கிறிஸ்துவ சகோதரர் கழகம் "* ( Christian Brother hood Association ) என் அன்பின் ஐக்கிய அமைப்பை ஆரம்பித்தார். *ஜீவதண்ணீர்* என்ற ஒரு மாதம் பத்தரிக்கையையும் இச்சங்கம் வெளியிட்டது.
*இந்திய மிஷனெரி சங்கம்* உருவாக்கப்படவும் இப்பத்திரிக்கை உதவியது.
*கர்த்தரின் திட்டம்*
தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு ( B . A . ) படித்து , சுகவீனம் காரணமாக முடிக்காவிடினும் , கர்த்தர் இவன் அவ்விடத்தில் , வித்தியாசமான முறையில் , பிற்கால பணிக்கு பயிற்சி அளித்தார். பட்டப்படிப்பல்ல , பணியே இவரை உயர்த்தியது . இது கர்த்தரால் ஆயிற்று .
*கர்த்தரின் பணிக்கென ஆயத்தம்*
கல்லூரி மாணவர்கள் , இளைஞர் மத்தியில் பணிபுரியும் வகையில் *வாலிபர் கிறிஸ்துவ சங்க காரியதரிசியாகப்* பணி ஏற்று ( 1893 ) , பின்னர் இந்தியா முழுமைக்கும் இணைக் காரியதரிசியுமானார்.
வெளிநாட்டவர் ஆங்கிலேயர் , அமெரிக்க கிறிஸ்துவ தலைவர்களுடன் பழகும் வாய்ப்பும் பெற்றவர் ' *மாணவர் தன்னார்வத் தொண்டர்*. ( Student Voluntery Move ment ) காரியதரிசியாகவும் , உலக மாணவர் கூட்டணி ( World students Federation ) உபதலைவராகவும் , சிறப்பு பணியாற்ற இறைவன் இவரை பயன்படுத்தினார்.
*கர்த்தரின் பணிக்கு அழைப்பு* 1902 1903
இளைஞர் மத்தியில் பணியாற்றிய அசரியா , ஒடுக்கக் கூட்டங்களையும் ( Retreat ) ஆவிக்குரிய கூட்டங்களையும் ( Convention ) நடத்தவும் உதவினார்.
1902ல் யாழ்ப்பயணம் சென்ற நாளில் , அங்கு வாழ்ந்த தமிழ் கிறிஸ்துவர்கள் , ஒரு மிஷனெரி சங்கம் நடத்தி , இந்தியாவிற்கும் மிஷனெரிகளை அனுப்பியிருப்பதை அறிந்த போது , தமது திருநெல்வேலி திருச்சபையைக் குறித்து வெட்கப்பட்டார்.
*திருநெல்வேலிக்கு வந்த ஏராளமான மிஷனெரிகளை நினைவுகூர்ந்தார்*
இதில் எவ்வாறு தவறியிருக்கிறோம் என்று உணர்ந்து யாழ்ப்பயணம் . செய்ததை , திருநெல்வேலி செய்யமுடியும் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டார் . தமது எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.ஏற்கனவே நெல்லைப் பேராயத்தில் இந்த திட்டத்திற்காக விசுவாசம் ஜெபித்த யாவரும் கூடினர் .
12 - 02 - 1903 இல் தேவ திட்டப்படி *I. M . S . பிறந்தது*! இவரே இச்சங்கத்தின் முதல் பொதுக்காரிய தரிசியாகவும் நியமிக்கப்பட்டார்.
திரு . சாமுவேல் பாக்கியநாகன் இந்தியமுதல் மிஷனெரியாக அங்கு புறப்பட்டார்.
இதுவரை வேறு எந்த மிஷன் இயக்கமும் பணி செய்யாத - பின் தங்கிய காட்டுப்பகுதி - கல்வி அறிவில்லாத ஏழைமக்கள் வாழும் தோர்ணக்கல் இப்பணிக்கென தெரிந்தெடுக்கப் பட்டது.
*கர்த்தரின் பணிக்கு அர்ப்பணம்* 1908
கிறிஸ்துவின் நற்செய்தியின் தேவை - கடமை பற்றி இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று , பிரச்சாரம் செய்து வாலிபர்கள் இதற்கென தங்களை ஒப்படைக்க வேண்டினார் . வாலிபர் , மாணவர் மத்தியிலே இவ்விதம் வேண்டுகோளை விடுத்த சமயம் , ஒரு மாணவர் எழும்பி *நீர் என் இப்பணியில் நேரடியாக ஈடுபடக்கூடாது*? நீர் ஏன் மிஷனெரியாக செல்லக்கூடாது என்று வினாவினார்.
இச்சவாலுக்கு - அசரியாவுக்கு என்ன விடை . . . தாம் ஒரு மிஷனெரியாகதோர்ணக்கல் பகுதிக்கு செல்வதை விட - வேறு எண்ணம் இல்லை . இதுவே அவரது தீர்மானம் ! எனினும் - இப்படிப்பட்ட திறமையுள்ள ஓர் இளைஞர் தன் திறமைகளை காட்டிற்குள்ளே ஏன் எடுத்துச் செல்லவேண்டும் - என ஓர் கேள்வி இதற்காக இறைவன் இவரை உருவாக்கியதை யாரும் அப்போது அறியவில்லை !
*குருத்துவ மிஷனெரியாக 1909*
இந்த விருப்பத்தை சென்னைப் பேராயர் ஒயிட் ஹெட் ஏற்று - குருத்துவ மிஷனெரியாக அசரியாவை அங்கு அனுப்ப விரும்பினார்.
தன் வீட்டில் சில நாட்கள் தங்கி இறையியல் நூல்கள் சிலவற்றை படிக்கவும் , ஆலோசனைகள் அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
1909ம் ஆண்டு ஜூன் பதினோராம் நாள் டீக்கனகாக அருட்பொழிபெற்று தனது மிஷனெரி பயணத்தை ஆரம்பித்த அசரியாவுக்கு டிசம்பர் மாதம் ஆயர் அருட்பொழிவு அளிக்கப்பட்டது.
மனைவி பிள்ளைகளுடன் தோர்ணக்கல் சென்ற ஆயர் அசரியா - ஏற்கனவே அங்கு மிஷனெரிகளாக பணியாற்றிய கனம் சாமுவேல் பாக்கியநாதன் சாலமேன் பாக்கியநாதன் - வேதநாயகம் , ஐயாத்துரை - அவர்கள் வசித்த காட்டுப் பகுதியில் - பழைய கட்டிடம் ஒன்றில் அவர்களுடன் வாழ்ந்து தனது பணியை தொடங்கினார்.
*வனாந்தாத்தின் ஆயராக* பின்னர் பேராயராக உயர்த்தப்பட்ட அசரியா அவர்கள் வாழ்க்கை சிறுவர்களுக்கும் , வாலிபர்களுக்கும் ஊழியர்களுக்கும் , நல்மாதிரியாக இருப்பதற்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.
நம்முடைய பிள்ளைகளுக்கும் சரித்திர வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்
அன்புடன்
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment