மிஷனரி காரி டென் பூம் நினைவு தினமும் பிறந்தநாளும்*
1940ம் ஆண்டில் ஹாலந்து தேசம் ஜெர்மானியப் படை க ளி டம் ச ர ண டை ந் த து
ஹி ட் ல ரி ன் கொடுமைகளுக்குத் தப்பி ஹாலந்து தேசத்திற்கு வந்த யூதர்கள் பிடித்துக் கொல்லப்பட்டனர்.
சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர் . காரிடென்பூம் குடும்பம் , ஹாலந்து தேசத்தில் கடிகாரம் செய்யும் தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வந்தனர்.
உயிருக்கு பயந்து ஓடி ஒழிந்த யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்க தங்கள் வீட்டைத் திறந்து கொடுத்தனர்.
நூற்றுக்கணக்கான யூதர்கள் காரியின் குடும்பத்தினரால் சாவுக்குத் தப்பினார்கள் .
1943ம் ஆண்டு ஹிட்லரின் ரோந்து படை குடும்பத்தை குறிவைத்தது . கூண்டோடு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் ; சித்தரவதைகளினால் காரியின் தந்தையும் , தங்கை பெத்சியும்மரித்துப்போனார்கள்.
காரி சிறைக்குள்ளே ஆராதனைகளை நடத்தி மக்களை ஆண்டவருக்குள் நடத்த ஆரம்பித்தார்.
தினமும் மறைவிடத்தில் இரண்டு ஆராதனைகள் நடத்தப்பட்டன.
காரியின் டச்சு வேதாகமம் சிறைச்சாலையிலுள்ள அனைவருக்கும் மிகுந்த ஆறுதலாகக் காணப்பட்டது . ஆண்டவரின் அநாதி தீர்மானத்தின்படி காரி டென் பூம் விடுதலை செய்யப்பட்டார்.
தேவன் தனக்கு செய்த மகத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார் . இரண்டாம் உலகப்போரில் *அனாதைகளான மக்களுக்காக இல்லம்* ஒன்றைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
பல நாடுகளுக்குச் சுற்றுபயணம் செய்து தனது சிறைச்சாலை அனுபவங்களை எடுத்துரைத்து மக்களை விசுவாசத்தில் நிலைபெறச் செய்தார்.
காரி டென் பூம் ஓர் சிறந்த எழுத்தாளரும் ஆவார் . *" மறைவிடம் "* என்ற நூல் பிரபலமானது .
பின்னர் அது படக்காட்சியாகவும் தயாரிக்கப்பட்டது.
பிறருக்காகவே வாழ்ந்த காரி டென் பூம் தனது பிறந்த தினத்திலேயே ஏப்ரல் 15 , 1983ல் விண்ணுலகம் சென்றார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment