புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சாமுவேல் பாக்கிய நாதன்

*இந்திய மிஷனரி சங்க முதல் மிஷனரி சாமுவேல் பாக்கிய நாதன்*
ஆந்திரா மாநிலம் , தோர்ணக்கல் என்ற பகுதி , சரியான பாதைகள் இல்லாதிருந்தது.
சிறுத்தையும் , புலியும் நடமாடிய காட்டுப் பகுதிகளாகக் காணப்பட்டது.

கோடைக் காலங்களில் பகலில் பயணம் செய்வது மிகக் கடினம் . ஏனெனில் அது வெப்பம் மிகுந்த பகுதி . இரவில் பயணம் செய்தாலோ திருடர்கள் கைவரிசை அட்டகாசமாகக் காணப்படும்.
அப்பகுதியில் சுவிசேஷம் அறிவிப்பதற்கு யார் முன் வரக்கூடும் ? 1903ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மிஷனெரிச் சங்கம் அக்கேள்விகளை மக்கள் முன் வைத்தது.
குடும்ப சூழ்நிலைகளால் பலர் முன்வரத் தயங்கியபோது *மருதகுளம் பாக்கியநாதன்* தன்னை மிஷனெரியாக அர்ப்பணித்தார் .
இவரே , அச்சங்கத்தின் முதல் மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது .
இவர் தோர்ணக்கல் சென்று பணியாற்றிய மூன்று ஆண்டுகளில் 23 பெரியவர்களும் , 33 குழந்தைகளும் ஞானஸ்நானம் பெற்றனர் .
உவைட்ஹெட் பேராயர் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் .
300க்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் பெற ஆயத்தமாக இருந்தனர் .
திருச்சபையை உண்மையிலும் , உத்தமத்திலும் வழி நடத்தினார் . தமது திருச்சபையைப் பற்றி இவர் கூறும்போது , " இது பலமான திருச்சபை . ஏனென்றால் கிறிஸ்தவர்களாக மாறுகிறவர்களுக்கு உலகப் பிரகாரமான நன்மையை வழங்கும் சக்தி எங்களுக்கு இல்லை . கடனாகக் கொடுக்கும் வசதியும் இல்லை , மேல் நாட்டு மிஷனெரிகளைப் போன்று நாங்கள் உதவி செய்ய முடியாது .
நாங்கள் செய்யக் கூடியது ஜெபம்தான் . கிறிஸ்துவையே நம்பி வாழ அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம் . " இவரின் வார்த்தைக்கேற்ப மக்கள் விசுவாசத்தில் பெலப்பட்டுத் தங்கள் ஏற்றத்தாழ்வுகளை மறந்து கிறிஸ்துவில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
பேராயர் V . S . அசரியாவால் தோர்ணக்கல் மிகவும் சிறப்புப் பெற்றது.
அப்பணிக்கு அடித்தளமிட்டவர் சாமுவேல் பாக்கியநாதன் அவர்களே.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory