புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

புளோரன்ஸ் ஸ்வான்சன்

புளோரன்ஸ் ஸ்வான்சன் என்ற தேர்ந்த
சிறந்த செவிலியர் இவருக்கு உடல் அங்கஹீனம் உள்ளவர்களுக்கு சேவை செய்வதில் மிகுந்த அக்கறை விருப்பம் மற்றும் ஆர்வமும் கூட.அவர்களை உடனிருந்து கவனித்து கற்ப்பித்து தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.ஒருமுறை ஜினைனா மிஷன் என்ற இங்கிலாந்து தேவாலயம் இவரை
இந்தியாவிற்கு சேவை புரிய அனுப்பி வைத்தது.
முதலில் 1885 ல் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.
இங்கே அவர் கண்ட நிகழ்வுகள் மிகவும் மனம் வேதனையடைய செய்தது. வாய்பேசமுடியாத காது கேளாதோர் கண்பார்வை அற்றவர்கள் என்று இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்
இந்த நாட்டில் இருப்பதை கண்டறிந்தார்.
1887 ல் ஸ்வய்ன்ஸன் 10 வயது பாக்கியம் என்ற காது கேளாத வாய் பேசாத பெண்ணை சந்தித்தார்.அவருக்கு
எழுதவும் வாசிக்கவும் கற்றுத்தந்தார்.
அதில் அந்த பெண் வெற்றி கரமாக கற்றுத்தேர்ந்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்த ஸ்வைய்ன்ஸன் சாராள் தக்கர் பள்ளி வளாகத்தில் ஒரு காது கேளாதோர் வாய் பேசாதோருக்கு கற்று தரும் கல்விக்கூடத்தை நான்கு குழந்தைகளுடன்
1895 ல் துவங்கினார்.
தொடர்ந்து பல மாணவ மாணவிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக டெல்லி லாகூர் இலங்கையில் இருந்தும வந்து சேர்ந்து
கல்வி கற்க துவங்கினர்.
1901 ல் இந்த பள்ளிக்கு அரசு அங்கீகாரமும் கிடைத்தது.
துவக்கத்தில் தமிழில் வார்த்தைகள் படங்கள் உதவியுடன் கற்றுத் தந்தார்.அதே போல் அவரும்
டேக்டிலாஜி என்ற நுட்பத்தை கற்று தேர்ந்து ஆங்கில விரல் எழுத்துக்கள் மூலம் தமிழ் எழுத்துக்களை கற்கும்
நுட்பத்தை வளர்த்து கொண்டு அந்த வழியில் கற்றுத் தந்தார்.
மேலும் டாக்டர் தனக்கோடி ராஜா என்பவரிடம் ரூபாய் 4500 க்கு சிறிது நிலம் வாங்கி 1897 ல் அங்கே ஒரு பள்ளியை கட்டினார்.
இங்கிலாந்து அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு உதவிகளை இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்று பள்ளியை மேம்படுத்தினார்.
இதை தொடர்ந்து அரசு நிதியுதவியும் கிடைக்கப்பெற்று படிப்படியாக விடுதிகள் நோயாளிகள் தங்கும் அறைகள் ஆசிரியர் விடுதிகள்
என்று பல்வேறு கட்டிடங்கள் கட்டினார்.
மாணவர்கள் கற்று முடித்தவுடன் தொழிற்பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவிகளுக்கு கூடை பின்னுதல், பாய் முடைதல், சமையல் தோட்டக்கலை என்று
பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்த சமயத்தில்
இந்த மாணவிகள் உருவாக்கிய துணிகள் பாளையங்கோட்டை யில் இருந்து இங்கிலாந்து க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.மேலும் மாணவிகளுக்கு
நாட்டுப்புற கலை மற்றும் நடனம்,கூடை பந்து கும்மி கோலாட்டம் முதலியவை விளையாடவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளியின் தயாரிப்புகளான கார்பெட் பாய்கள்,துணிப்பைகள் லக்னோ தொழில் கண்காட்சியில் 1902 ல் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு அதற்கான போட்டியில் பரிசுகளும் வென்றனர் மாணவிகள்.
பெண் ஆசிரியர்கள் இங்கே ஊதியம் எதுவும் பெறாமல் சேவை ஆற்றியது
குறிப்பிடத்தக்கது.
கல்லிடைக்குறிச்சியில்
துவக்கப்பட்ட பள்ளியின் கிளையில்
பயிற்சி பெற்ற மாணவர்கள்
ஊசி கொண்டு செய்யப்படும் வேலைப்பாடுகளில் சிறந்து விளங்கினர்.
இன்றும் இந்த பள்ளி பாளையங்கோட்டை சிறைச்சாலை க்கு
எதிரே செயல்படுகிறது.
அடுத்து ஸ்வாய்ன்ஸின் கவனம் சென்னையில் ஒரு பள்ளி துவங்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டது.
அதிர்ஷ்டவசமாக சாந்தோம் கடற்கரை சாலையில் உள்ள தனக்கோடி ராஜா வின் வீடு கிடைத்தது.அதனை விலைக்கு வாங்கி லீலண்டு கார்டன் என்று பள்ளி வளாகமாக உருவாக்கினார்.
தொடர்ந்து இந்த பள்ளி
சிஎஸ்ஐ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இப்போது இந்த பள்ளி சிஎஸ்ஐ காது கேளாதோர் வாய் பேசாதோர் பள்ளி என்று அழைக்கப்படுகிறது.திருவல்லா விலும்
ஒரு பள்ளியை துவக்கினார்.
ஸ்வான்ஸைனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1909 8 பிப்ரவரி மாதத்தில் 'கேஷர் ஐ ஹிந்த்' என்ற விருது வழங்கப்பட்டது.1919 ல் ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார்.
‌இந்த சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி ஒரு சிறந்த அடையாளமாக புளோரன்ஸ் ஸ்வான்சன் அவர்களின்
கடின உழைப்பு அர்ப்பணிப்புக்கு உதாரணமாக திகழ்கிறது.
முகநூல் பதிவு Shivakumar

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory