புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பரிசுத்த தேவனே நித்தியமானவா

*திருநெல்வேலி திருமண்டல ஆராதனை முறையியின் சிறப்புகள்*
நம் திருநேல்வேலி ஆராதனை முறைமையானது நான் முன்பு சொல்லியப்படி வேத அஸ்திபாரத்துடன், பாரம்பரியமும், ஆழமான அர்த்தத்தையும் கொண்டது ஆகும். முதலில் நம் பரிசுத்த திருவிருந்து ஆரதனை முறையில் இருந்து ஆரம்பிப்போம். நம் சிறப்புகளையும் ஆராதனை முறைமைகளின் வரலாறுகளையும் அறிந்து கொள்வோம்.
*பரிசுத்த தேவனே நித்தியமானவா*
இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பாடல் அதாவது Chant ஆகும். இந்த பாடல் முதன் முதலாக Orthodox என்றும் பூர்விக சபையின் சபை ஒழுங்கு முறையில் இருந்தது ஆகும். இப்பொழுதும் அவர்கள் இந்த பாடலை அவர்களின் ஆராதனை முறையில் பின்பற்றி வருகிறார்கள். இப்பாடல் கிரேக்க மூலத்தில் இருந்து எடுக்க பட்டது.
*இதன் வரலாறு (According to orthodox)*
கிபி 433 ஆம் ஆண்டு கான்ஸ்டன்டைன் நோபிள் மாகணத்தில் St.ப்ரோக்ளுஸ் பதவியேற்ற பொது பெரும் பூமி அதிர்ச்சிகள் உருவாகினது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறி பக்கத்தில் இருந்த மாகணத்தில் முகாம் இட்டு தேவனிடம் மன்றாடி ஜெபித்து கொண்டிருந்தனர். இவ்வாறு ஜெபிக்கும் பொது ஒரு கண் தெரியாத சிறுவன் சுறாவளி காற்றினால் வானத்திற்கு மேலாக எடுத்து செல்லப்பட்டான். கண்தெரியாத அவனுக்கு தீர்க்கதரிசனமாக தேவதூதர்கள் தேவனை பாடி துதிதுள்ளதை கண்டுள்ளான். உயரத்திற்கு சென்ற அவன் ஒருகட்டத்தில் கீழே விழும் பொது அடி எதுவும் படவில்லை என்பதால் மக்கள் அவனிடம் ஆச்சர்யமாக கேட்டபோது அவன் தான் கண்டவை அனைத்தையும் சொல்ல மக்கள் அனைவரும் உற்சாகமாக தேவனை துதித்து பாடிய பாடலே இந்த “பரிசுத்த தேவனே நித்தியமனவா” பாடலாகும். இவர்கள் பாடியபோது இயற்க்கை சீற்றங்கள் நின்றது.
இந்த பாடல் ஏசாயா 6:1-5 ஐ வேத ஆதாரமாக கொண்டது.
*இப்பாடலின் தமிழ் இராகம்*
இந்த பாடல் நமது பாடல் புத்தகத்தில் நாட்டை இராகம் என்னும் பதத்தில் படிக்கும் படி கேட்டு கொண்டுள்ளபட்டது. நாம் அனைத்து சபைகளிலும் இந்த இராகத்தை பயன்படுத்தியே இப்பாடலை படிப்போம்.
*இந்த இராகத்தின் உணர்வுகள்*
கர்நாடிக் இசை முறையில் இதன் அர்த்தங்களையும் அதன் பாடல் உணர்வையும் அறிந்து கொள்வது நமக்கு அவசியமாகும். அப்போது தான் நம் முன்னோர்கள் எந்த காரணத்திற்காக இந்த பாடலை நம் பாடல் புத்தகத்தில் இணைத்தார்கள் என்பதை அறியலாம்.
இந்த நாட்டை இராகம் முதல் தன்மையை குறிக்கிறது.எந்த கர்நாடிக் இன்னிசை கச்சேரி எடுத்ததாலும் இந்த இராகத்திலே பாடல்களை ஆரபிப்பர்கள். ஒருமனிதனின் ஆன்மிக அனுபவத்தில் இந்த இராகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாடலை வேகமாக அவசரத்துடன் கேட்போமாகில் இந்த இராகம் ஒரு ஆராதனை பற்றிய ஒரு விழ்ப்புணர்வை மக்களிடம் விதைக்கும்.
தேவனை பெருமை படுத்துதல், புகலுதல் போன்றவற்றிக்கு தான் இந்த இராகத்தை பயன்படுத்துவார்கள். இது பாடல் படிக்கிறவர்களுக்கு அதன் அர்த்தம் மிகவும் ஆழமாகவும் உணர்ச்சிபூர்வமாக விளங்கதக்கதாகவும் இருக்கும்.
*Source* : keethangalum kerthanaigalum, Some theological theses, Karnatic musical sites, Orthodox encyclopedia
Collected and Translated by Sujith Rex
*கிரேக்க மொழியில் இப்பாடல்* http://bit.ly/2wqc2cO
*ஆங்கிலத்தில் இப்பாடல்* http://bit.ly/2JFWydb
*தமிழ் மொழியில் இப்பாடல்* http://bit.ly/2JKrtFl

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory