புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி அதநேஷியஸ்

மிஷனரி அதநேஷியஸ் நினைவு தினம்*
மே 02
கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்திற்காக நீங்கள் எப்பொழுதாவது நாடு கடத்தப்பட்டிருக்கின்றீர்களா ? தன் வாழ்நாளில் ஐந்து அரசர்களால் 5 முறை நாடு கடத்தப்பட்டார் அதநேஷியஸ்.
கிரேக்க சபையில் சிறந்த வேத அறிஞர்களில் ஒருவர் அதநேஷியஸ்.
வேதப்புரட்சியும் , சபைப் பிரிவினைகளும் கடவுளின் பெயரால் கொடுமைகளும் நடைபெற்று வந்த காலத்தில் அனைத்து துன்பங்களின் மத்தியிலும் கிறிஸ்தவ விசுவாசங்களைத் தொகுத்து விசுவாசிகளை பலப்படுத்தி கிறிஸ்தவ சபைக்குச் சிறந்த தொண்டாற்றியவரே இம்மாமனிதர்.
பலமுறைகள் இவர் பெயரில் அவதூறான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. ஆரியஸ் என்பவரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் இவருக்கு எதிரியானார்கள். சக்கரவர்த்திகளுக்குச் சரியான வேத அறிவு இல்லாததால் இவர் அடிக்கடி நாடு கடத்தப்பட்டார். சபைகள் விசுவாசத்தில் தழைத்தோங்க வேண்டும் என்ற காரணத்தால் சகலவித துன்பங்களையும் அவர் மனநிறைவோடு ஏற்றுக்கொண்டார்.
அலெக்சாண்டிரியா நாடு பலமுறை அவரை இழந்து தவித்தது. ஐந்தாவது முறை நாடுகடத்தப்பட்ட போது அலெக்சாண்டிரியாவில் பெரும் குழப்பம் ஏற்படவே அவர் மீண்டும் தன்நாடுதிரும்பினார்.
90 அத்தியட்சர்களை ஒன்றாக கூட்டி ' விசுவாச சத்தியங்களை தொகுத்து எழுதி அவைகளை சபைகளுக்கு அனுப்பி மக்களைவிசுவாசத்தில் திடப்படுத்தினார். அவரின் வேத அறிவும் , சுயநலமின்மையும் , ஜெப ஜீவியமும் , தூய வாழ்க்கையும் மக்கள் ' மனதைக் கவர்ந்தன.
அதன் பலனால் திருச்சபைகள் வளர்ந்து பெருகின.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory