புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வெள்ளாளன்விளை

மாதிரி கிறிஸ்தவ கிராமத்தின் வரலாறு
வெள்ளாளன்விளை
இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் என்ற இடத்தில் பிறந்தவர் *கனம் ஜான் தாமஸ்*.
1836 - ம் ஆண்டு CMS சங்கத்தின் மூலம் மிஷனெரியாக சென்னை வந்தார்.
CMS சங்கத்தினரின் கட்டளைக்கிணங்கி 1839 - ல் மெஞ்ஞானபுரம் பங்களாவில் குடும்பமாய் தங்கி சுவிசேஷ பணியில் ஈடுபட்டார்.
வெள்ளாளன்விளையின் மத்தியில் அமைந்திருந்த ஆலமரத்துக்கு அருகில் நின்று கடின உழைப்பின் காரணமாக இளைப்பாறிக் கொண்டிருந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
ஒருநாள் சிலர் துப்பாக்கியுடன் வந்து *கனம் ஜான் தாமஸ்* அவர்களைக் கொல்ல நினைக்கவே ஊழியம் செய்யாமல் , அங்கிருந்த ஓர் ஆலமரத்தடியில் முழங்காலில் நின்று , ஆண்டவரே , இவர்களின் இருதயத்தைத் திறந்தருளும் என ஜெபித்து முடித்து பின்னர் தீர்க்கதரிசனம் போன்று இவ்வாறு கூறினார்.
பிசாசை வணங்கும் மக்கள் ஒருவரும் இல்லாதபடி இவ்விடத்தில் ஒரு கிறிஸ்துவ ஆலயம் கட்டப்படும் நாள் சீக்கிரம் வரும் என்றார்.
அந்த நாள் வரத்தான் போகிறது ” என்று தீர்க்கத்தரிசனம் உரைத்தார்.
அவரது சுவிசேஷத்தால் முதன் முதலில் மனம் மாறியவர்தான் சுடலையாடும் பெருமாள் ( எ ) கி . மு . சுவாமியடியான் . 1842 - ம் ஆண்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியது . சுமார் 300 பேர் புதிய கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.
இசக்கியம்மன் கோவில் இருந்த இடத்தில் ஒரு ஜெபவீடு கட்டப்பட்டது.
இதனால் பெரும் எதிர்ப்புகள் உண்டானது.
புதியதாக கட்டப்பட்ட ஜெப வீடும் , கிறிஸ்தவர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. பலர் பின்வாங்கினர் .
1844 - ம் ஆண்டில் மறுபடியும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது . ஆலமரத்திற்கு அருகில் ஒரு புதிய இடம் வாங்கப்பட்டு பெரிய கூரையாலான ஆலயம் கட்டப்பட்டது .
வெள்ளாளன்விளை திருச்சபையின் தந்தை கனம் வேதநாயகம் தாமஸ் . *" வேதத்தில் சிறந்தது வெள்ளாளன்விளை "* என்ற அன்றைய கூற்றுக்கும் காரணமாய் அமைந்தவர் கனம் வேதநாயகம் தாமஸ் . இவரின் தகப்பனார் " ஞானியார் பூர்வீக இந்து நாடார் குடும்பத்தைச் சார்ந்தவர்.
இவர் செட்டிவிளை என்ற ஊரைச் சார்ந்தவர் என நம்பப்படுகிறது . ஞானியார் ஓர் தானிய வியாபாரி.
இவரது மகனாக 1821 - ம் ஆண்டு பிறந்தவர் வேலாயுதம்.
சிறுவயதில் தன் தந்தையுடன் வியாபாரத்துக்குச் செல்லும்போது கனம் ஜாண் தாமஸ் மிஷினெரியின் சுவிஷேச செய்திகளை கேட்டார்.
1839 ம் ஆண்டு மெஞ்ஞானபுரம் மாணவர் விடுதி பள்ளியில் சேர்ந்து படித்தார் .
1839 - ல் கனம் ஜான்தாமஸ் அவர்களால் திருமுழுக்கு பெற்று வேதநாயகம் தாமஸ் என்ற பெயரை பெற்றார் .
1858 - ல் வெள்ளாளன்விளையில் முழுநேர சபை ஊழியராக கனம் ஜாண் தாமஸ் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
1869 - ம் ஆண்டு ஜனவரி 31 - ம் நாள் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெற்ற பட்டாபிஷேக் ஆராதனையில் சென்னை பேராயர் பிரட்ரிக் கெல் அவர்களால் உதவி குருவாக அபிஷேக பண்ண ப்பட்டார் .
1871 டிசம்பர் 24 - ம் நாள் குருவானாராக . அபிஷேகம் பெற்று தொடர்ந்து வெள்ளாளன்விளையில் பணியாற்றினார் .
1875 - ல் இசக்கியம்மன் கோயில் இருந்த இடத்தில் ஆலயத்தை கட்டி முடித்தார்.
வெள்ளாளன்விளை திருச்சபையின் தந்தை கனம் வேதநாயகம் தாமஸ் அவர்கள் , வெள்ளாளன்விளையை *மாதிரி கிறிஸ்தவ கிராமமாக* மாற்றி அமைத்தார் .
இவர் வெள்ளாளன்விளையில் 10 ஆண்டுகள் முழு நேர சபை ஊழியராகவும் , 2 ஆண்டுகள் உதவி குருவாகவும் , 20 ஆண்டுகள் குருவானவராகவும் மொத்தம் 32 ஆண்டுகள் ( 1858 - 1889 ) இறைபணி செய்தார் .
தனது 68 - வது வயதில் 23 . 06 . 1889 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
இவரது உடல் வெள்ளாளன்விளை துய திரித்துவ ஆலயத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
1874 - ம் ஆண்டு ஆகஸ்ட் 17 - ல் கனம் வேதநாயகம் தாமஸ் - ஹெலன் ஹேஸ்டிங்ஸ் தம்பதியாருக்கு வெள்ளாளன்விளையில் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு அவ்வாண்டு அக்டோபர் 4 - ம் நாள் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு *வேதநாயகம் சாமுவேல் அசரியா* என பெயரிடப்பட்டது .
இவரே இந்தியாவின் *முதல் ஆங்கிலிக்கன் திருச்சபை பேராயர்*, பிராட்டஸ்டண்ட் புனிதர் , இந்தியாவின் அப்போஸ்தலன் , *இந்தியாவின் பெரிய நட்சத்திரம் ,* வெள்ளாளன்விளையில் தோன்றிய தெய்வ மனிதன் என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர்.
சுவிஷேசப் பணிக்காக தன் நல்ல வாழ்க்கையை தியாகம் செய்தவர் பேராயர் V . S . அசரியா . IMS , NMS ஆகிய சுவிசேஷ சங்கங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை . *தோர்ணக்கல் திருமண்டலத்தை உருவாக்கியவர்*.
*தென்னிந்திய திருச்சபை ( CSI ) உருவாக காரணமாக இருந்தவர்*
சுவிசேஷ பணிக்காக ஓய்வின்றி உழைத்த இவர் 1945 - ம் ஆண்டு ஜனவரி 1 - ம் நாள் தோர்ணக்கலில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
இவரது கல்லறை தோர்ணக்கல் பேராலயத்தின் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூய திரித்துவ ஆலயம், வெள்ளாளன்விளை வரலாற்றிலிருந்து திரட்டியது ....

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory