புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தூய திரித்துவம்

தூய திரித்துவம் 
Holy Trinity 

******************
கிறிஸ்தவ திருச்சபைகளின் விசுவாசபிரமாணங்களும் விசுவாச அறிக்கைகளும் கடவுளின் வசனத்திற்கு இசைந்த உண்மைப்பிரமாணங்கள்
, கடவுளின் வசனத்துக்கு சாட்சி கூறுவன, கிறிஸ்தவ திருச்சபையின் விசுவாசத்திற்கு பாதுகாப்புக்களாக இருக்கின்றன. அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணம், நிசேயா விசுவாசப்பிரமாணம், அத்தனாசியஸின் விசுவாசப் பிரமாணம் ஆகியன பரிசுத்த வேத புத்தகம் கடவுளைப்பற்றிக் கூறும் போதனைகளின் தொகுப்பே ஆகும். எனவே எல்லா விசுவாச பிரமாணங்களும் விசுவாச அறிக்கைகளும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து தான் உருவானவைகள் ஆகும். திருச்சபையின் ஆராதனைகளில் கிறிஸ்தவ விசுவாசத்தை அறிக்கை செய்யவும் ஞானோபதேச வகுப்புகளில் கற்றுக்கொடுக்கவும் இந்த விசுவாச அறிக்கைகள் பயன்படுகின்றன. இந்த விசுவாச பிரமாணங்கள் மூன்று பிரிவுகளாகவே விளக்கப்படுகிறது.
முதற்பகுதி சிருஷ்டிகராகிய கடவுளாம் தந்தையை பற்றியும், இரண்டாம் பகுதி இரட்சகர்/மீட்பராகிய கடவுளின் திருமைந்தனைப்பற்றியும் மூன்றாவது பிரிவு நம்மை தூய்மைப்படுத்துகிற தூய ஆவியானவரைப் பற்றியும் கூறுகிறது. அத்தனாசியஸ் என்பவரின் விசுவாசப்பிரமாணம் திரித்துவத்தைப் பற்றிய விசுவாசத்திற்கு உண்மையான உண்மையான விளக்கம் தருகிற பிரமாணம் ஆகும்.இங்கிலாந்து திருச்சபையின் முப்பத்தொன்பது விசுவாச அறிக்கைகள் / பிரமாணங்கள் , வெஸ்ட்மினிஸ்டர் விசவாச அறிக்கை , லுத்தருடைய சிறிய ஞானோபதேசம் , அகுஸ்தாபுரி விசுவாச அறிக்கை ஆகியவைகளும் திரித்துவக் கடவுளைக்குறித்து - தந்தை மைந்தன் தூய ஆவியானவர் - விளக்கும் விசுவாச அறிக்கைகளாகும்.
- பாஸ்டர் S. ஜான் மதியழகன்.
For further study :
The Creeds of Christendom, with A History and Critical Notes by Philip Schaff .Volume III ( The Evangelical Protestant Creeds , with Translations, published by Harper & Brothers ,1877.
A Companion to Confirmation : Resource Book for the Clergy and Facilitators, Revised Edition , edited by T.I.James published by Church of South India (CSI)/ISPCK ,Delhi , 2017.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory