புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கிருஷ்ணப்பிள்ளையும் *சத்தாய் நிஷ்களமாய்* கீர்த்தனையின் பிண்ணணியும் பகுதி - 2

கிருஷ்ணப்பிள்ளையும் *சத்தாய் நிஷ்களமாய்* கீர்த்தனையின் பிண்ணணியும், சரணங்களின் விளக்கங்களும்- பகுதி 02
ஆசிரியர் குறிப்பு : எ . ஆ . கிருஷ்ணாபிள்ளை ( 1827 - 1900 )

பிறப்பிடம் :
பாளையங்கோட்டை அருகில் கரையிருப்பு கிராமம் .
*பாடல்*
1. சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும்இலதாய்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடி யே கடைத்தேறுவன் என்பவந்தீர்ந் து
அத்தா , உன்னையல்லால் எக்கார் துணை , யாருறவே ?
2. எம்மா விக்குருகி உயிரிந்து புரந்ததற்கோர்
கைம்மா றுண்டுகொலோ ? கடைகாறுங் கையடையாய் ,
சும்மா ரட்சணைசெய் , சொல் சுதந்தரம் யாதுமிலேன்
அம்மான் உன்னையல்லால் எனக்கார் துனை , யாருறவே ?
3. திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புனையாயினை கண்ணிலியான் ,
பரசேன் பற்றுகிலன் , என்னைப்பற்றிய பற்றுவிடாய்
அரசே , உன்னையல்லால் எனக்கார் துணை , யாருறவே ?
4. தாயே , தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும்
நீயே எம்பெருமான் , கதிவேறிலை திண்ணயங்காண் ;
ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை ?
ஆயே , உன்னையல்லால் எனக்கார் துணை , யாருறவே ?
5. துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள ,
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெடுத்த எங்கள்
அப்பா , உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே ?
இப்பாடலையே முதற்பாடலாக வெளியிட்டுவரும் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தை இதற்காகவே பாராட்டலாம் .
ஏனெனில் இதன் ஆரம்பகால் தமிழ்ப் பதிப்பாளராக 1892 முதல் பணியாற்றியவர் எ . ஆ . கிருஷ்ண பிள்ளை அவர்கள் .
மீட்பு இவர் பாடல்களின் மையப் பொருளானதால் ' மீட்புக் கவிஞர் ' எனவும் , இவர் இரட்சண்ய மனோகரத்தில் 566 பாடல்களும் இரட்சண்ய யாத்திரிகத்தில் 3813 பாடல்களும் தேவாரப் பாடல்களில் 144 பாடல்களும் ' இரட்சண்ய சமய நிர்ணயம் ( 1898 ) ' இரட்சண்ய சரிதம் ' , ' போற்றித் திருஅகவல் ' , இலக்கண சூடாமணி ( 1883 ) , காவியதரும் சங்கிரகம் ( 2500 ) , வேதபொருள் அம்மானை மற்றும் பல நூல்களையும் இயற்றியுள்ளார் .
தென்கலை , வைணவனவரான இவரின் தந்தை சங்கர நாராயணப்பிள்ளையால் சிறுவயதிலேயே திருவாசகக் கலம்பகம் , திருவாய்மொழி , சடகோபரந்தாதி முதலியவற்றை மனனம் செய்தார் .
தந்தையின் கம்பராமாயாை சொற்பொழிவுகளை கேட்டறிந்தார் .
14 வயதிற்குள் கம்பராமாயணம் பாடல்களை ( 200 ) மனனம் செய்து அவற்றின் பொருள்வரவும் புலமை பெற்றார் .
உரிச்சொல் நிகண்டு , திருக்குறள் , ஆத்திச்சூடி முதலியனவும் பிலவன ஜோசியரிடம் வடமொழியும் கற்றார் .
ரேனியஸ் போதகர் தமிழ் பயின்றவரிடமே குருக்குல கல்வி மூலம் இலக்கண இலக்கியம் - பயின்றார் .
எனவே இவரை ' கிறிஸ்தவக் கம்பர் ' என போற்றப்பட்டு வருகிறார் .
திருவனந்தபுரம் மகாராஜர் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுடன் பணியாற்றினார் .
ஜான் மர்டாக் இவரை சென்னையில் 1832 இல் சிஎல் எஸ் - இன் தமிழ்ப் பிரிவின் ஆசிரியராக்கினார்.
இவரின் இரட்சண்ய குறள் , இரட்சண்ய பாலபோதனை ஆகியன இன்னும் கிடைத்தில் , சிஎல்எஸ் - இல் உள்ள ஐந்து கீர்த்தனைகளையும் கண்ணிகளாகவே அமைத்துள்ளார்.
திருமறை மொழிபெயர்ப்பில் ஹென்றி பவருடன் தன் தம்பி முத்தையா பிள்ளை பணியாற்றியதால் தம் பெயரோடு ஹென்றி எனவும் , 30ஆம் வயதில் தாம் திருமுழுக்கு பெற்ற மைலாப்பூர் தூய தாமஸ் ஆலயத்தில் அன்று அருளுரையாற்றிய ஆல்பர்ட் ஆர் . சைமன்ஸ் என்பவரின் பெயரையும் சேர்த்து என்றி ஆல்பர்ட் - கிருஷ்ணபிள்ளை என பெயர் இடும்படி கேட்டுக்கொண்டார்.
தந்தைக்காக 15ஆம் வயதில் 12வயது சிறுமியை மணந்தார்.
பேராயர் கால்டுவெல் திருநெல்வேலி இறையியல் கல்லூரியில் இவரைக் இமாசிரியர் ஆக்கினார் .
திருவனந்த புரம் சி . எம் . எஸ் . ) கல்லுாரி தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.
மரணத்தருவாயில் தாமரை மொட்டுகளின் நேசியாம் டோனாவூர் கார்மைக்கேல் அம்மையார் உடனிருந்தனர்.
இக்கேவாரப் பாடல் சங்கராபரணம் இராகத்தில் சதுஸ்ர ரூபக தாளத்தில் ( தக - தக - திமி ) பக்திச் சுவையோடு , பாவ உணர் நம்பிக்கையின் அறிக்கையோடு எழுதப்பட்டுள்ளது.
பண்டிதர் - எனப்படும் செம்பவள் நடை தமிழில் வடசொற்களைப் பயன்படும் : பாடுவது அவர் காலத்துச் சிறப்பாகும்.
ஆயினும் தன்னுடைய 15 வயது மகன் தியாகராஜனுக்காக ' ஜெயசிந்தை எனில் தாரும் ' என்ற பாடலை மிக எளிய தமிழில் இயற்றியுள்ளார் .
Manna selvakumar
*சரணங்களின் விளக்கம்*
சரணம் 1 : ( சத்தாய் ) என்றுமுளதான நிஷ்களமாய் ) உருவமில்லா ( அல்லது ) எங்குமுள்ள . ஒரு சாமியமும் முன் ( இல்லதாய் ) ஒப்புமை ஏது இல்லாத இறைவன் . ( சித்தாய் ) அறிவாய் ( ஆனந்தமாய் ) அழியாத அறிவின்பம் தருபவராகிய திருத்துவ தெய்வமே , எனப் போற்றி , நாயினும் கீழான என் பாவம் நீக்கி மீட்க உம்மையன்றி யாரால் முடியுமெனத் துணைக்கு அழைக்கிறார் . சத்து சிந்து ஆனந்தம் ஆகிய முக்கிய குணங்களை உடைய இறைவன் என்பதற்கு பேராயர் கோ . செல்வமணி பின்வரும் கிறிஸ்தியல் விளக்கம் தருகிறார் . கிறிஸ்தவ நம்பிக்கையும் விளக்கங்களும் பக்கம் ( 243 - 244 )
சத்து : ( யாத் 3 : 14 ) இறைவனின் இருக்கும் தன்மை இருக்கிறவராகவே இருக்கிறேன் ) என்ற , சித்து அறிவு ( கடவுளின் வார்த்தை திருமறை குறிப்பையும் வார்த்தையில் உலகை படைத்தார் , ( ஆதி 1 : 1 ) ஆதியிலே வார்த்தை இருந்தது அது மாம்சமாகிறது ( யோவான் 1 : 14 ) ( ஆனந்தம் ) ஆவியின் கனி 9 - ல் ஒன்று . சந்தோஷம் ,
சரணம் 2 : எம்மா விக்குருகி ) என் ஆத்துமா அழிவுக்கேதுவாயிருப் பதை எண்ணி உருகி உயிர் தந்து என்னைக் காப்பாற்றுவதற்காக கைமாறு என்னிடம் ஏதுமில்லையே . ( கடைகாறும் கையடையாய் ) - இறுதிவரை அடைக்கலமாவாய் சும்மா ரட்சணை செய் ) = இலவசமாக மீட்பு வேண்டுகிறேன் சொல் சுதந்திரம் ) = அறிவோ செல்வமோ ஏதும் என்னிடமில்லை . அம்மான் ) - அழகிய கடவுளே .
சரணம் 3 : திரைசேர்வெம்பவமாம் ) - நுரையுடன் அலைபாயும் கொடிய பாவக்கடலில் தீவினை செய்ததால் மூழ்கிய பாவி என்னைக் கரைசேர்த்து ) - பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை நான் அடையாதபடி கரைசேர்த்து உய்க்க ) - வாழ்விக்க . ( புனையாயினை ) - தெப்பமானீர் ; தெப்பகுளம் , தெப்பதிருவிழா என இந்து ஆலயங்களில் உண்டு . தெப்பக் குளத்தின் நடுவே ஓர் மண்டபம் இருக்கும் . ஆலயத்திலிருந்து சிலைகளை அலங்கரித்து அக்காலத்து கட்டுமரமாகிய மிதக்கக்கூடிய தெப்பத்தில் வைத்து இசையுடனும் பாடலுடனும் குருக்கள் எடுத்துச் சென்று நடு மண்டபத்தில் வைப்பது தெப்பத் திருவிழாவாகும் .
இச்சரணத்தின் சிறப்பேதெனில் , தெப்பத்தில் சிலைகளும் குருக்களும் ஏறியவுடன் அந்தத் தெப்பத்தின் மரக்கட்டைகள் தண்ணீருக்குள் மேலும் சற்று அமிழ்ந்து நனையும் . இதைத்தான் . தெப்பத்தின் கட்டைகள் நனைவதைபோல் மழையில் தொப்பக் கட்டையாய் நனைத்திருக்கிறாயே : என்பது பேச்சு மொழியாயிற்று . இதிலுள்ள இறையியல் யாதெனில் , தெப்பம் தண் ணீரில் நனைந்தாற்போல் பாவியைக் காப்பாற்றிக் கரைசேர்ப்பதற்காக ( புனை ) தெப்பமாகச் செயல்பட்ட ( மனிதனாகப் பிறந்த தேவகுமாரன் ) பாவக்கடலில் நனைந்தார் ; பாவிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் . லூக்கா 22 : 37 சிலுவையில் கள்ளர் நடுவில் அறையப்பட்டார் எனக் திருமறை சுட்டுவதை ஆசிரியர் மறைமுகமாக விளக்குகின்றனர் . கண்ணிலியான் ) பாவக்கடலில் மூழ்கும் எனக்குக் கண்தெரியவில்லை ' கண்ணிலூமன் கடற்பட்டாங்கு ' என்ற நிலையுள்ளேன் . பரசேன் ) - மோட்சத்தை உடையவனே , பற்றுகிலேன் குட்டிகுரங்கு தாய் குரங்கைப் பிடித்தாற்போல் நான் உம்மைப் பற்றிப் பிடிக்க சக்தி இல்லை பற்றியபற்றுவிடாய் நீர் என்னைப் பிடித்திருக்கிறீர் அந்தப் பிடியை பூனை தன் குட்டியை வாயால் கவ்விச் செல்வது போல் நீர் விட மாட்டீர் .
சரணம் 4 : என்னை என் பக்தி வாழ்க்கையை மதியாது ஏயே என்றிகழும் பரிகாசம் செய்யும் இவ்வுலகில் என் பெற்றோரும் , உடன் பிறப்பும் , என் ஆலோசகர்களும் , செல்வமும் , நண்பர்களும் நீயே என்று திருப்தியடைகிறார் .
சரணம் 5 : துப்பார் தூய சிந்தனை எனக்கில்லை ( மறைந்தீட்டிய மறைவாய் செய்த பாவங்களை தப்பாதே வெளியாய் ) - தவறாது வெளியாகும் நடு நாளெனைத் தாங்கிக் கொள்ள நியாயத்தீர்ப்பு நாளில் என்னைக் காப்பாற்ற என் பாவங்களை மூடிட , நீக்கிட , மனித குமாரனாகக் கோலமெடுத்து உருவெடுத்த அப்பா - பரம தந்தையே உம்மையன்றி யார் எனக்குத் துணை ? யார் உறவுக்காரர்கள் எனப் பாடுகின்றார் .
குறிப்பு : அனைத்துச் சரணங்களிலும் எதுகைத் தொடையும் சற்றடியனைத்தும் ; ஒன்றியும் அமைத்து , தேவார நடையில் பாடியுள்ளார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory