புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பேரின்பபுரம் திருச்சபை

பேரின்பபுரம் திருச்சபை வரலாறு*
பாளையம்பதியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பெரும்பாதையில் அழகிய சிறு கிராமம் பேரின்பபுரம்.
ஆதி ஆரம்ப பக்தர் பெருமாள் நாடார் என்ற பேரின்பம் நாடார் பேரில் தோன்றிய ஊர்தான் பேரின்பபுரம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டைக்குத் தெற்கே மூலைக்கரைப்பட்டிக்கு வடக்கே சேந்தான்குளம் என்ற ஊரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் பனை ஏற்றுத் தொழில் செய்து வந்தார்கள்.
அவர்களில் மூத்த மகன் பெருமாள் ஒரு சாமியாடி.
அவர் ஒரு மிஷனரி மூலம் கிறிஸ்தவராகி பேரின்பம் என்ற பெயர் பெற்றார்.
இயேசு கிறிஸ்து மனித சமூகத்தின் சமத்தவ , சமாதான வாழ்விற்காகவே மரித்தார் . சமய வேறுபாடுகள் , ஏற்றத் தாழ்வின் அநியாயங்கள் கூடாது , *யாவரும் சமம்* இது போன்ற போதனை பேயாடியான அந்தப் பெரியவருக்குப் புதுமையாக , புரட்சியாகத் தெரிந்தது.
தங்கள் அடிமைத் தன வாழ்விற்கு ஓர் விடிவு ஏற்பட்டதுபோல் இருந்தது . பெரு மகிழ்ச்சியுடன் கிறிஸ்தவம் தழுவினார்.
அவருக்கிருந்த இந்த சந்தோஷத்தைக் கண்ட மிஷனரி அவருக்குப் பேரின்பம் எனப் பெயர் வைத்தார்.
அவருடைய பிள்ளைகள் , குடும்பத்தார் யாவரும் கிறிஸ்தவர்களானார்கள் . பேரின்பம் நாடாருக்கு நான்கு ஆண்கள் , ஒரு பெண் . அவர்கள் பலுகிப் பெருகிப் பல குடும்பங்கள் ஆயினர் . அடிமை வாழ்வு அகன்றது என்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்தடுத்த தலைமுறையினர் பேரின்பம் என்ற பெயரையே முதற் பிள்ளைகளுக்கு இட்டு வழங்கினார்கள்.
சேர்ந்தனார் குளத்தில் ரெட்டியார் நிலப்பிரபு அவருடைய ஆதிக்கம்தான் கொடிதாகக் கொடி கட்டிப் பறந்தது கிறிஸ்தவம் வந்தபிறகு அவர்களின் அக்கிரமச் செய்கைகளுக்கு எதிர்ப்புகள் வலுத்தன.
ஒருநாள் பேரின்பப் நாடாரின் பேரன் இருபது வயது இளைஞன் ரெட்டியார் தோட்டத்திலிருந்த ஒரு மாங்காயைப் பறித்துத் தின்றுவிட்டான் , அதைக் கண்ட நிலப்பிரபுவின் ஆட்கள் அவனைப் பனை மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் அடித்தார்கள். அதனை எதிர்த்து முறையிட்டு மூன்று நான்கு குடும்பங்கள் சேர்ந்து சேர்ந்தனார் குளத்தை விட்டு இப்பொழுது குடியிருக்கும் இடத்திற்கு வந்தார்கள் இங்கு வெந்து நிலம் பொங்கி அழகிய ஒரு கிராமத்தை நிர்மானித்தனர்.
அதுதான் இன்றைய பேரினப்புரம் 1924 ஆம் ஆண்டு சி எம் . எஸ் . சத்தாங்க சுவிசேஷ சபை தோன்றி கிராமங்கள் ஒரு குழப்ப நிலையில் இருந்தன கோயில்களில் சிலுவை வைக்கப் போகிறார்கள். சிலுவையை சிலையாக்கி விடுவார்கள் என்று ஒரு கருத்து மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது இந்நிலையில் இங்கு வந்த பேரின்பம் நாடார் குடும்பத்தினர் பிரிவினைச் சபையில் சேர்ந்து , பின்னர் மீண்டுமாக அங்கிருந்து வந்து , *சி எஸ் ஐ சபை* ஆலயத்தைக் கட்டி வளர்த்தார்கள். ஒரு சிறு கோவிலையும் கட்டினார்கள் .
பின்னாளில் சற்றுப் பெரிய கோயிலைக் கட்டினார்கள்.
அறுபது குடியிருப்பு உள்ள இந்த ஊரில் புற மதத்தினரோ , புற மத வழிபாட்டிடங்களோக் கிடையாது.
ஒரே இன மக்கள் வாழும் ஐக்கியக் குடியிருப்பு இது பக்கத்தில் மேல்சாதியினர் வாழும் ஓர் ஊர் உள்ளது.
அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகமாய் இருந்தன , அப்பொதெல்லாம் கோயில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கூடமாக விளங்கியது . மணி அடித்தவுடன் மக்கள் கோயிலில் கூடி விடுவர்.
இவ்வாறான அபாய காலகட்டங்களில் அங்கு வாழ்ந்த கால் நாடார் எனப்பட்ட இஸ்ரவேல் நாடாரின் புதல்வர்களான முத்தையா நாடார் , ஆபிரகாம் நாடார் , பாலையா நாடார் , சீமோன் நாடார் ஆகியோருடன் சாமுவேல் நாடார் போன்றவர்கள் துணிச்சலுடன் முன்நின்று அவர்களை எதிர்த்தனர்.
விரைவில் அவர்கள் சந்ததியார் அந்த அடாவடிக்காரர்களை அடக்கியும் விட்டனர்.
தற்சமயம் அவர்களின் உழைப்பை யாரும் சுரண்ட முடியவில்லை , சுதந்திரமாகவும் சுபிட்சமாகவும் வாழ்கிறார்கள்.
இன்னும் சற்றுப் பெரிதாக ஆலயம் விரிவு பெற்றது . கோயில் கோபுரம் *உள்ளும் புறமும் பளிங்குக் கற்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது*.
இந்தக் கோயில் மட்டுமே முழுமையாகப் பளிங்குக் கல்லில் ஒளிர்கிறது.
ஆலய மற்றும் கோபுர பணிகளில் திரு காபிரியேல் அவர்கள் குடும்பத்தின் பங்கு அதிகமாக இருந்து வருகின்றது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜(ஊரும் பேரும்) வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory