புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஸ்தோத்திர பண்டிகை என்று சொல்லப்படும் அறுப்பின் பண்டிகையின் வரலாறு

ஸ்தோத்திர பண்டிகை என்று சொல்லப்படும் அறுப்பின் பண்டிகையின் வரலாறு
திருநெல்வேலி திருமண்டலத்தில் உள்ள அனைவருக்கும் இந்த வார்த்தை சொன்னவுடன் ஞாபகம் வருவது மகிழ்ச்சியான அந்த நாட்கள் தான்.
ஆம் ஸ்தோத்திர பண்டிகை நடக்கும் அந்த நாட்களில் நம் அனைவரின் ஊர்களிலும் மகிழ்ச்சியும் மன நிறைவும் ஆத்தும திருப்தியும் நிறைந்து இருக்கும். அனால் இதன் வரலாறு என்ன?
ஸ்தோத்திர பண்டிகை என்னும் அறுப்பின் பண்டிகையை முதன் முதலாக திருநெல்வேலி திருமண்டலத்தில் தொடங்கினவர் வால்கர் என்னும் CMS மிஷனெரி ஆவார்.
முதன் முதலாக 1891 ஆம் ஆண்டு சாட்சியாபுரத்தில் ஸ்தோத்திர பண்டிகை கூட்டம் நடைபெற்றது. முதலில் இந்த கூட்டம் 4 நாட்கள் வரை நடைபெற்றது.
இந்த கூட்டம் ஆரம்பகாலத்தில் காணிக்கைகளுக்கு மட்டும் அன்றி விசுவாசிகளை இணைக்கும் பாலமாகவும் விசுவாசிகளுக்கு ஒரு மனமகிழ்ச்சியின் நாளாகவும் இருந்தது.
சாட்சியாபுரத்தை தொடர்ந்து நல்லூரில் 1892 ஆம் ஆண்டு ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் 1895 ஆம் ஆண்டும், பண்ணைவிளை மற்றும் சுரண்டையில் 1896 ஆம் ஆண்டும் நடைபெற்றது.
அன்று மிஷனெரிமார்கள் தொடங்கிய அந்த பண்டிகைகள் இன்று வரையினும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்தோத்திர பண்டிகையை தொடங்கிய வால்கர் என்ற மிஷனெரி தான் வடக்கு மற்றும் தெற்கு சபை மன்றங்களுக்கு முதல் தலைவர் ஆவர்.
ஜார்ஜ் முல்லர் (முன்னாள் கல்லூரி முதல்வர் , பிஷப் கல்லூரி- 1980) எழுதிய பிஷப் வரலாறு என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது .
(Book available in United theological college library achieves)
- Translated and collected by Sujith

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory