புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அங்கியும் அதன் தோழமை வஸ்திரங்களும்


*ஸ்டோல் ( Stole )*
ஆராதனை நேரங்களில் கழுத்தைச் சுற்றி தோளின் மேல் அணியும் உடைதான் இது.
கிட்டதட்ட அங்கவஸ்திரம் போல அல்லது துப்பட்டா போல காணப்படும் .
குருவானவர் ஆண்டவருக்கு கீழ் படிந்தவர் என்பதனை இது காட்டுகிறது.
யாராவது குருவானவரை கெளரவிக்க சால்வை போர்த்தினால் , ஸ்டோலை எடுத்து கைகளில் வைத்துக்கொண்ட பின்பே சால்வை போர்த்த அனுமதிக்கப்படுவார் , வெள்ளை ஊதா , பச்சை , சிவப்பு , மஞ்சள் , கருநீலம் போன்ற , கறுப்பு , சிவப்பு , வண்ணங்களில் இவை அமைந்திருக்கும்.
அட்வெந்து காலங்களில் ஊதாநிறமும் ( ராஜாக்களுக்கு உரிய நிறம் ) வெள்ளை நிறம் கிறிஸ்மஸ் , புத்தாண்டு , ஈஸ்டர் , ஞானஸ்நானம் , திடப்படுத்துதல் போன்ற சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது என்னும் *' Master Stole '* என்றே அழைக்கப்படுகிறது.
திருமணம் நடத்தும்போது மங்களகரத்தை காட்ட மஞ்சள் நிறமும் , லெந்து காலங்களில் உபவாசத்தைக் குறிக்க கருநீலமும் , விஷேச நாட்கள் , அறுப்பின் பண்டிகை மற்றும் பரிசுத்த ஆவியின் திருநாட்களில் சிவப்பும் பயன்படுத்தப்படும்.
துக்க நாட்கள் , பெரிய வெள்ளி , அடக்க ஆராதனைகளில் கறுப்பு நிறம் பயன்படுத்தப்படும்.
திரித்துவ திருநாள் முதற்கொண்டு அட்வெந்து ' காலம் ஆரம்பிக்கும் வரை பொதுவாக வசந்த காலத்தை காட்டும் வண்ணமாக பச்சை நிறம் பயன்படுத்தப் படுகிறது.
லுத்தரன் திருச்சபைகளில் பண்டிகை இல்லாத நாட்களில் பச்சை அணிவதாக கூறப்படுகிறது.
குருவானவர் அணியும் ' ஸ்டோல் ' நிறத்தைப் பொறுத்து " ஆல்டரும் ' அதேவண்ணத்தில் அலங்காரம் செய்யப்படும் .
அத்தியட்சர் ( C . S . I . ) அணியும் ஸ்டோலானது காவி வண்ணத்தில் காணப்படும்.
அங்கியின் மகிமை புத்தகத்திலிருந்து
A பத்மராஜன்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory