புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அங்கி ஒரு கல்யாண வஸ்திரம்

அங்கி ஒரு கல்யாண வஸ்திரம்
அங்கி ஒரு கல்யாண வஸ்திரமா ? ஆம் குருவானவர்களுக்கு அங்கி வேதத்தில் குறிக்கப்பட்ட நமது ஆண்டவர் உவமை கதைகளில் ஒன்றான கலியாண வஸ்திரம் போன்றதுதான் மத்தேயு 22 : 11 . 12 , 13 , வசனங்களை பார்க்கும்போது கலியாண வஸ்திரம் இல்லாமல் வந்தவனுக்கு ராஜா கொடுக்கும் தண்டனையைப் பற்றி கூறுகிறார்.
சாதாரண மனிதன் ராஜாவின் வீட்டு திருமணத்துக்கு போகும்போது கலியாண வஸ்திரம் தரித்திருக்க வேண்டும் என்று கூறும் நம் இரட்சகர் அவரது பணியை ஏற்று ஊழியம் செய்யும் அபிஷேகம் பெற்றவர்கள்.
அங்கியை அணியாமல் இருக்கலாமா ? பொது இடங்களில் குருவானவர்கள் அங்கி அணியும் போது அவருக்கான மரியாதையும் பரிசுத்தமும் வெளிப் படுகிறது.
ஏதோ ஆலயத்தில் திருமணம் நடத்தும் போது மட்டும் அங்கி அணிந்து கொண்டு விட்டு வரவேற்பில் சாதாரண உடையுடன் வந்தால் குருவான வருக்குரிய மரியாதை அவருக்கு எல்லோரிடமும் கிடைத்து விடுமா ? இல்லை வரவேற்பில் ஜெபம் செய்யும் போது மட்டும் அங்கி அணிந்து விட்டு பின் அதை வேக , வேகமாக கழற்றி சுருட்டி பையில் திணித்து விட்டு பந்தியில் முதலிடத்தில் அமர்ந்து கொள்ளும் சிங் ' பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. ஏன் கெட்டிற்கு செல்லும்வரை சிறிது நேரம் அங்கி உடலில் இருந்து விட்டுத்தான் போகட்டுமே.
உணவு பட்டு கறை பட்டு விடும் பயம் இருந்தால் மடியில் ஒரு துண்டினை போட்டுக் கொள்ளலாமே ! என்னுடைய தாய் திருமண்டிலமான மதுரை - இராமநாதபுரம் ( சி . எஸ் . ஐ ) அத்தியட்சாதீன முதல் பிஷப் மகாகனம் லெஸ்லி நீயூபிகன் அவர்கள் இரண்டாம் பிஷப் மகாகனம் ஜார்ஜ் தேவதாஸ் போன்றோர் அங்கியை தன் தோலாகவே கருதினார்கள்.
பொது இடங்களில் மட்டுமல்ல தங்கள் இல்லத்திலும் , அவர்களை சந்திக்க வருபவர்கள் மத்தியிலும் அங்கியுடனே காணப்பட்டார்கள்.
அவர்கள் காலத்தில் குருவானவர்கள் பஸ்ஸிலும் , ' ரயிலிலும் , கடை வீதிகளிலும் , மார்க்கெட்களிலும் , தங்கள் சொந்த காரியங்களுக்காக வெளியே செல்லும்போது கூட அங்கிகளோடே தான் காணப்பட்டார்கள்.
அங்கியின் மகிமை புத்தகத்திலிருந்து
A பத்மராஜன்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory