புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி வின்சென்ட் தெ பால்

*மிஷனரி வின்சென்ட் தெ பால் பிறந்த தினம்*
ஏப்ரல் 24
பிரான்ஸ் நாட்டில் பிறந்த வின்சென்ட் தெ பால் ஒரு திருச்சபை ஆயர்.
ஏழைப் பெற்றோருக்குப் பிறந்ததால் சிறுவயதிலேயே பிணி , வறுமை , எளிய வாழ்வு ஆகியவற்றை அறிந்திருந்தார்.
1605ம் ஆண்டில் இவர் ஆப்பிரிக்க கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டார்.
சங்கிலிகளால் கட்டப்பட்ட இவர் முதலில் மீனவனுக்கும் பின்னர் சாராய வியாபாரிக்கும் விற்கப்பட்டார்.
இவரின் ஜெப் , தவ வா ழ் வால் இர ண் டா ண் டு க ள் க ழி த் து விடுதலையாக்கப்பட்டார்.
பிரான்ஸ் நாடு திரும்பிய இவர் , 1617ல் ஊர் ஊராகச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்.
*பரோபகாரிகளின் இயக்கம்*' என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்தார்.
ஏழைகளை சந்தித்து உணவூட்டி உதவுவதே இவரின் நோக்கமாகக் காணப்பட்டது.
1625ம் ஆண்டு ' *வின்சென்சியன்* ' என்ற துறவற சபையை ஆரம்பித்து இறை போதனைகளை வழங்கினார் . *பிறரன்பு சகோதரிகள்* என்ற பெயரில் பெண்களுக்கான துறவற சபையையும் ஆரம்பித்தார்.
ஏழைகளின் முன்னேற்றமே இவர் வாழ்வின் குறிக்கோளாகக் காணப்பட்டது.
" விசுவாசக் கண்ணால் ஏழைகளைப் பார்க்கும்போது , எளிமைத் தனத்தை தெரிந்து கொண்ட இறைமகன் இயேசுவின் வடிவத்தை அவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும். எனவே இயேசுவைப் பின்பற்றி ஏழைகளைப் பேணுவோம் , ஆறுதல் அளிப்போம். உதவி புரிந்து அவர்களை ஆதரிப்போம் . கடவுள் ஏழைகளை அன்பு செய்கிறார் . ஏழைகளை அன்பு செய்வோரையும் அவர் அன்பு செய்கிறார் . " மேற்கண்ட வார்த்தைகள் வின்சென்ட் அவர்கள் ஏழைகள் மீது வைத்திருந்த அன்பையும் , தியாகத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
தம் வாழ்நாளில் 1200க்கும் மேற்பட்ட அடிமைகளை மீட்ட இவர் ஏழைகளின் நண்பர் என்றால் மிகையாகாது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory