புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி டவுண் திருச்சபை வரலாறு

திருநெல்வேலி டவுண் திருச்சபை வரலாறு
நாற்புறங்களிலும் வயல்வெளிகளால் சூழப்பெற்ற அழகு நகர் திருநெல்வே டவுண் நெல்லையப்பர் கோயிலின் பெருமிதத் தோற்றம் கண்டு இதனை , கோயில் நகர் என்றும் அழைப்பர்.

நெல்லை அப்போஸ்தலன் ! ரேனியஸ் உருவாக்கிய நெல்லை டவுண் என மிகப் புராதனமானது இன்றைக்கு 172 ஆண்டுகளுக்கு முன்பு 1828 இல் உருவான வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சபை இது.
இவ்வாலயத்திற்குக் கீழ்புறமும் தென்புறமும் சந்தடி நிறைந்த ரோடுகள் உள்ளன.
தென்புறம் உள்ள ரோடு குற்றாலம் ரோடு என்று சொல்லப்படும் பழமையான பெருவழிப் பாதையாகும்.
வடபுறம் வீடுகளும் மேல்புறம் சாப்டர் கிளைப் பாடசாலையும் அமைந்துள்ளன இவ்வாலயம் மாற்று மதத்தினரால் வெகுவாக மதிக்கப்படுகிறது.
தங்களுக்குப் பிரச்சனையின் பொழுதெல்லாம் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
இவ்வாலயத்தில் வழிபட்டு ஆசிர்வாதமும் , மன அமைதியும் பெற்றவர்கள் ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகள் சுவையானவை , சரித்திர வலுவுள்ளவை . அவரது நாட்குறிப்பு ஒன்றைக் கீழே தருகிறேள்.
ஜீலை 14 , 1878 *திருநெல்வேலி உபதேசியாரான சவரிமுத்து நேற்றைய இனம் சில பிராமணர்களுடன் தான் செய்த உரையாடலை என்னிடம் சொன்னார் அவர்கள் அவரிடம் நாங்கள் கிறிஸ்தவர்களானால் உங்களுடைய பாதிரியாரிடம் வரமாட்டோம் அரசுக்கெழுதி ஒரு பிராமணனையே எங்களுக்கும் பாதிரியாராக நியமிக்கக் கேட்போம் என்றார்களாம்.*
( நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் , பர் 223 )
ரேனியஸ் காலத்தில் கட்டிய ஆலயம் 1884 1957 1977 . ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்படம் மாற்றம் பெற்றது . ஆயினும் இடம் கொள்ளவில்லை .
ஞாயிறு ஆராதனைகளில் குற்றாலம் ரோட்டில் மக்கள் நிற்பார்கள் ஆலயத்தை விரிவாக்க இடமில்லை. சுறறிலும் பால் கனியுடன் புதிய ஆலயம் கட்டத் திட்டமிடப்பட்டது .
பல லட்சம் செலவில் இன்று புதுமையான மகிமையான ஆலயமாக உள்ளது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜ஊரும் பேரும் என்ற வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory