புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் 2

நூறாண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் 2
*நேற்றய தொடர்ச்சி.....*
(1919 ஜுன் முதல் TDTAவாக)
நூற்றாண்டு ஞாபகமாக , எங்களுக்குரிமைப்பட்ட ஆலயங்கள் , குருகுடில்கள் , இதர சொத்துக்கள் அனைத்தும் பின் காட்டிய நிபந் தனையில் நெல்லைத் திருச்சபைக்குக் கையளித்து விடுகிறோம்.
நெல்லைச் சபையானது தன்னை ஒரு பொக்கிஷ ஆளுகைச் சங்க மாக்கிச்சட்டத்தின் படி பதிவு செய்து கொள்ளவேண்டும்.
எந் நோக்கோடு மேற்கூறிய சொத்துக்கள் வாங்கப்பட்டு கையாளப் பட்டனவோ அந்நோக்கோடு அவை நிர்வகிக்கப்பட்டு செயல் படுத்துவதாக வாக்குறுதி அ ளி க் க வேண்டும்.
சென்னையின் C . M . S . ஜில்லா விசாரணை சங்கத்தாரை இந்த விஷயத்தைப் பூரண ஒழுங்குக்குக் கொண்டு வர உதவி செய்யக்கேட்கிறோம்.
*C . M . S சங்கத்தாரின் மு த ல் மிஷனெரியான கனம் ரேனியஸ் ஐயரவர்கள் 1820ம் ஆண்டு ஜூலை மீ 7ம் நாள் பாளையங்கோட்டை வந்திறங்கினார்.*
இந் நன்னாளை மக்கள் ஒரு ஸ்தோத்திர ஜெப நாளாகக் கொண்டாடினர் எ ன் ப து ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
விழாவன்று காலை 4 மணிக்கு *100 அதிர் வேட்டுகள் போடப்பட்டன*
கால் மணி நேரத்திற்குக் கோவில் பள்ளிக்கூட *மணிகள் ஒலிக்க மக்கள்* நித்திரை விட்டெழுந்து ஆயத்தப்பட்டனர்.
4 மணி முதல் 6 மணி வரை பலரும் பாடிக் கொண்டு கிறிஸ்தவ மக்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றி வந்தனர்.
காலை 7 . 30க்குப் பரி . நற்கருணை ஆராதனை ஆரம்பித்தது.
14 குருக்கள் பங்கெடுத்தனர்.
*நூற்றாண்டு லித்தானியா வாசிக்கப் பட்டது.*
சுமார் 600 பேர் பரி . நற்கருணையில் பங்கெடுத்தனர் என்ற ஒரு கணக்குண்டு.
*கனம் ஆர்டில் ஐயர் செய்தி கொடுத் தனர்.*
பின்னர் சிறுவர்களுக்கு ஆலயத்தில் ஓர் ஆராதனை நடைபெற்றது.
தொடரும் .....

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory