புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் பகுதி 3

நூறாண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் பகுதி 3
*காலை பதிவின் தொடர்ச்சி.....*
காலை 10 - 30க்கு நூற்றாண்டு மண்டபத்தில் யாவரும் கூட , ராவ்சாகிப் A S அப்பாசாமி பெரியார் தலைமை தாங்க , மிஷனெரி மார் 15 பேர் மேடையில் அமர , பட்டதாரிகள் தம் பட்டத்து ஆடையோடு பவனிவந்து தம் ஆசனத்தில் அமரக் கூட்டம் ஆரம்ப மானது.
தாய்ச் சங்கத்தாருக்கு நன்றிக்கடன் செலுத்தக் கனம் M . ஆசீர்வாதம் ஐயரவர்கள் 145ம் சங்கீதம் வாசித்து ஜெபித்தனர்.
தலைவர் முன்னுரை வாசித்தார் . கனம் மூர் ஐயாரவர்கள் *மிஷனெரிமார் செய்த சேவையைப் பெரிதும் பாராட்டிப்பேசினார்.*
அரசு சேப்ளனான கனம் ஹெள ( Hough ) ஐயரவர்கள் , ரேனியஸ் , ஸ்மிட் , பெற்றிற் ஆகிய குருக்களும் மகாகனம் சார்ஜென்ட் அத்தியட்சரும் பள்ளிக்கூடத்து மானேஜர்களான மிஷனெரிமார் செய்த ஊழியங்களையும் எடுத்துரைத்து ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தக்கேட்டுக்கொண்டனர்.
பின்னர் கனம் P . N . தெய்வநாயகம் ஐயரவர்கள் *இந்திய கிறிஸ்தவ ஊழியர்களான ஜாண் தேவ சகாயம் , ஞானமுத்து . மதுரேந்திரம் , முத்துசாமி வேத நாயகம் , வீரபாகு முதலியவர்களின் ஊழியச் சிறப்பினை எடுத்துக்காட்டினர்*.
திரு J . அன்புடையான் *கடந்த நூறு ஆண்டுகளில்* பிராந்திய கல்வி அபிவிருத்தியையும் சு வி சே ஷ முயற்சிகளையும் எடுத்து சிலாகித்துப் பேசினார்.
சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சிகளைக் காட்ட இந்திய மிஷனெரி சங்கத்தை ஆதாரமாகக்கொண்டனர் கனம் மூர் ஐயர் *தாய் சங்கக் காரியதரிசி கனம் பார்ட்ஸ்லே* மூ ல மாய் வந்த வாழ்த்துத் தந்தியைத் தலைவரிடம் கொடுக்க அது , சபை யாருக்கு வாசிக்கப் பட்டது.
அது சங் . 115 , 12 - 14 வசனங்கள் அடங்கியதாகும்.
கனம் R , U . ஆசீர்வாதம் ஐயரவர்கள் ஸ்தோத்திர ஜெபம் செய்த பின் காணிக்கை சேகரிக்கப்பட்டது.
💐நூற்றாண்டு விழாக்குழுவினர் தாய்ச் சங்கத்திற்குத் தம் நன்றி கலந்த ஒரு வாழ்த்துச் செய்தி தந்தியைக்கனம் ஆர்டில் ஐயரவர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.💐
கனம் ஆர்டில் ஐயர் ஆசீர்வாதம் கூறக்கூட்டம் இனிது கலைந்தது கூட்ட முடிவுக்குப் பின் திருத்துவ ஆலயத்திற்கு முன்
🌳 *மூன்று ஞாபகார்த்த மரங்கள் நாட்டப்பட்டன* 🌲🌴.
அன்று மாலை 3🐘 யானைகள் , 🐪ஒரு ஒட்டகம் , 🥁போலீஸ் பாண்ட் வாத்தியம் முன் செல்ல 👨‍👩‍👧‍👧பெரியோரும் சிறியோரும்🧚🏼‍♀கொடி யேந்தி நகர் வலம் வந்தனர்.
இரவு 8 மணிக்கு 1⃣0⃣0⃣ ஆண்டுகளில் நம் மத்தியில் பணிபுரிந்த மிஷனெரி மார்களின் படம் சரித்திரக் கோர்வையாக எடுத்துக்காட்டப்பட்டது.
பதிவு 17/04/2019 11;45Am
நாளை தொடரும்.....

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory