பேராயர் R . H . ஞானதாசன் (ஏப்ரல் 18 ) பிறந்த தினம்
ஓய்வு நாள் பள்ளி பிள்ளைகள் ; வசனத்தைக் கேட்பதிலும் , செயல்படுத்துவதிலும் வாஞ்சை உள்ளவர்கள் ; கற்றுக் கொடுப்பதை செயல்படுத்த துடிப்பவர்கள்.
பேராயர் ஞானதாசன் இச்சிறுவர்களை தம் ஊழியத்தில் பயன்படுத்திய விதம் அனைவருக்கும் சிறந்த எடுத்துகாட்டாகும்.
அவர் பிரைமரி பிள்ளைகளை அழைத்தார் , அவர்களுக்கு *" மிஷனெரி டேமியன் வீட்டினர் "* என்று பெயரிட்டார்.
தொழுநோயாளிகளை இப்பிள்ளைகள் தாங்கினர்.
*குளச்சல் தொழுநோய் இல்லம்* இவர்களால் குதூகலமானது.
ஜூனியர் மாணவர்களுக்கு *" மிஷனெரி சத்தியா வீட்டினர் "* என்று பெயரிட்டார்.
இவர்கள் பாப்புவாதீவில் நடைபெற்ற ஊழியத்தை உற்சாகப்படுத்தினர்.
சீனியர் மாணவர்கள் *" லீச்வீட்டினர் "* என்று அழைக்கப்பட்டனர்.
இவர்கள் நெய்யூர் மிஷன் பணியை வளரச்செய்தனர்.
சிறுபருவத்திலேயே குழந்தைகளுக்கு மிஷனெரி தாகத்தை ஏற்படுத்தியவரே பேராயர் ஞானதாசன்.
பிள்ளைகளைநடக்க வேண்டிய வழியில் நடத்திக் காட்டினார்.
1959ம் வருடம் . திருவிதாங்கூர் பேராயம் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டபோது , குமரி திருச்சபையின் *முதல் பேராயராக தனது 44வது வயதில் அபிஷேகம் செய்யப்பட்டார்.*
இவர் பிரிவினைகளை அழித்து ஐக்கியத்தை உருவாக்கினார். *ஒற்றுமை நிலைத்தது.*
1972ம் ஆண்டு தென்னிந்திய திருச்சபைகளின் *பிரதமப் பேராயராகவும் உயர்த்தப்பட்டார்*.
வீண் ஆடம்பரம் இல்லாதவர் , எளிமையானவர் , பழகுவதற்கு இனிமையானவர் , சமுதாய அக்கறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர் . காது கேளாதவர் , பார்வையற்றவர் போன்றவர்களுக்கு பள்ளிகளை ஏற்படுத்தினார்.
இவருடைய காலம் திருச்சபைகளின் பொற்காலம் என்றே கூறலாம்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
No comments:
Post a Comment