புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சவரிராயன் ஏசுதாசன் - கிறிஸ்து குல ஆசிரமம்

கிறிஸ்து குல ஆசிரமத்தை கொண்டுவந்தவர் -சவரிராயன் ஏசுதாசன்

கிறிஸ்து குல ஆசிரமம் . இது இந்தியாவில் தோன்றிய முதல் கிறிஸ்தவ ஆசிரமமாகும்.

துறவு வாழ்வை ஏற்றுக் கொண்டு , தனக்கென தனியாக எந்த சொத்தும் வைத்துக் கொள்ளாமல் , எளிமை , தூய்மை , தாழ்மையோடு இயேசு கிறிஸ்துவின் அன்பு வழியைப் போதித்து , அதின்படி நடந்து பணி செய்பவர்களே , இவ் ஆசிரமத்தின் உறுப்பினர்கள் .

1882ம் ஆண்டு பிறந்த சவரிராயன் என்பவரும் அவரது நண்பர் பேட்டன் அவர்களும் இணைந்து ஆரம்பித்த ஆசிரமமே கிறிஸ்து குல ஆசிரமம் .

இளமைப் பருவத்திலேயே முதியவர்களிடமும் , ஏழைகளிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சவரிராயன் .

தெய்வ பக்தி நிறைந்த பெற்றோரின் கண்காணிப்பு இவரை ஆன்மீகத்தில் அதிக நாட்டம் பெறச் செய்தது .

மருத்துவராக வேண்டும் என்று விரும்பிய இவர் 1910ம் ஆண்டு இங்கிலாந்தில் மருத்துவப் படிப்பை முடித்து இலங்கை அரசுத்துறையில் மருத்துவராகப் பணியாற்றினார் .

மீண்டும் மேற்படிப்பை இங்கிலாந்தில் தொடர்ந்தார் .

அங்கே சகோதரர் பேட்டனை சந்தித்தார் . ஓர் நள்ளிரவு . இருவரும் கூடி ஜெபித்தனர் . இறைவனுக்கென்று தங்களை தொண்டர்களாக ஒப்படைக்கும்படி தூண்டும் இறையருளை உணர்ந்தனர் .

இந்தியா வந்தனர் . இறைப்பணியைத் தொடர்ந்தனர் .

மருத்துவமனைகள் கட்டப்பட்டன . ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன .

ஆண்டவரின் சேவைக்காக வாழ்க்கையில் எல்லாவற்றையும் துறந்து முழு நேரப்பணி புரிந்த இவர் பெரியண்ணன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார் .

உலக நாடுகள் பலவற்றிற்கு சுற்று பயணம் செய்து கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றியவர் .

அநேக சீடர்களை உருவாக்கியவர் . ஆத்தும ஆதாய வீரர் . தமிழ் புலமை மிக்கவர் . சிறந்த எழுத்தாளர் . அநேக பாடல்களை இயற்றி பாடியுள்ளார் .

இன்றும் அவை திருச்சபைகளில் பாடப்பட்டு வருகின்றன .

திருப்பத்தூர் கிறிஸ்து குல ஆசிரமம் இவர் புகழை என்றும் பறை சாற்றும் .

------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*

📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory