புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தாமஸ் கிராண்மர்

வேத புத்தகமானது எந்நிலையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் - தாமஸ் கிராண்மர்

இங்கிலாந்து நாட்டில் மேரி என்ற அரசி பட்டத்திற்கு வந்தாள் . தன் நாட்டில் காணப்பட்ட சீர்திருத்தவாதிகளை ஒழிக்கும் எண்ணத்துடன் மும்முரமாய் செயல்பட ஆரம்பித்தாள் .

நாட்டின் பல பாகங்களிலே , தூய்மையான வாழ்க்கை நடத்திய ஆண்களும் , பெண்களும் , சிறுவர்களும் , சிறுமிகளும் தங்கள் விசுவாசத்தின் பொருட்டாக , சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் .

பலர் நாட்டை விட்டே துரத்தப்பட்டனர் மற்றும் சிலர் உயிரோடு வைத்து கொளுத்தப்பட்டார்கள் .

நாட்டிலே இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது .

இரத்த மேரி என்றழைக்கப்பட்ட இவ்வரசியால் , அதிகமாக துன்புறுத்தப்பட்டவர்களில் ஒருவரே தாமஸ் கிராண்மர் .

கேம்பிரிட்ஜ் கல்வி சாலையில் உயர்கல்வி கற்றவர் .

1533ஆம் ஆண்டு பேராயராக ஹென்றி 8 என்ற அரசனால் , பதவியேற்றவர் .

அரசனுக்கு சிறந்த ஆலோசகராக செயல்பட்டவர் .

1538ஆம் ஆண்டு , அவ்வரசனுக்கு சிறந்த ஓர் ஆலோசனை வழங்கினார் . ஒவ்வொரு திருச்சபையிலும் , வேத புத்தகமானது எந்நிலையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அது .

அதன்படி திருச்சபைகள் அனைத்திலும் மக்கள் வேதாகமத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது .

இதனால் , திருச்சபையின் சீர்கேடுகளை மக்கள் களைந்து , சிறந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர் .

கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி குன்றி , புரோட்டஸ்டாண்ட்தலைநிமிர ஆரம்பித்தது .

ஆயினும் , வெகுவிரைவில் ஹென்றி 8 தன் மகன் எட்வர்ட் 6ஆல் கொல்லப்பட்டார் .

அவரும் வெகு விரைவில் மரிக்கவே மேரி அரசி பட்டத்திற்கு வந்தாள் .

திருச்சபையின் நிலைமைகள் தலைகீழானது , மீண்டும் கத்தோலிக்கம் தழைத்தது .

புரோட்டஸ்டாண்டை சார்ந்தவர்கள் விரட்டி பிடிக்கப்பட்டு கிறிஸ்துவின் மேல் உள்ள பற்றுதலால் அவர்கள் கொல்லப்பட்டனர் .

பேராயராக காணப்பட்ட கிராண்மரும் , அவ்வரசியால் பிடிக்கப்பட்டு , உயிரோடேதீயில் தள்ளப்பட்டு கொல்லப்பட்டார் .

------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*

📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory