புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தொழுநோயாளிகளின் நலனுக்காகவே உழைத்த பால்பிராண்ட்

தொழுநோயாளிகளின் நலனுக்காகவே உழைத்த பால்பிராண்ட் பிறந்த மற்றும் நினைவு தினம்
நீங்கள் மிஷனெரி பிள்ளைகளா ?
அப்படியானால் மிஷனெரிப் பணியின் தாகம் உங்களுக்கு இருக்க வேண்டும் .
சரி , நீங்கள் மிஷனெரி பிள்ளைகளாக இல்லையானாலும் பரவாயில்லை .
நீங்கள் ஆண்டவரின் பிள்ளைகள் .
உங்களுக்கு ஊழியத்தைக் குறித்த வாஞ்சைகண்டிப்பாக இருக்க வேண்டும் .
பால் பிராண்ட் . கொல்லி மலையின் *விடி வெள்ளிகளான ஜெசிமன் பிராண்ட் மற்றும் ஈவ்லின் பிராண்ட்* அவர்களின் மூத்த மகன் .
தனது தங்கையுடன் இருண்ட மலைப்பகுதியில் உள்ள தங்களது மரவீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு நாள் அவரது தாய் பின்வருமாறு கூறினார் . *" மகனே நீ ஒருநாளும் தனியாக இல்லை . தேவன் உன்னோடு கூட இருந்து உன்னை கவனித்து காப்பாற்றுகிறார் . "* இந்த அருமையான வார்த்தைகள் பால்பிராண்டை சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்குள் வழி நடத்தின .
இவரது தாயே இவருக்கு முதல் ஆசிரியர் .
தனது பெற்றோருக்கு சிறு பருவம் முதலே கீழ்ப்படிந்து நடந்த இவர் , அவர்களுடன் ஊழியங்களுக்குச் செல்வதில் மிகுந்த வாஞ்சையுடன் செயல்பட்டார் .
ஆண்டவரின் , பெரிதான கிருபையினால் லண்டன் சென்று கல்வி கற்றார் .
மருத்துவப் படிப்பு முடித்து அறுவை சிகிச்சைத் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார் .
இந்நிலையில் இந்திய நாட்டில் தொழுநோயாளிகளாகக் காணப்பட்ட மக்கள்மேல் கனிவு கொண்டு தனது மனைவியுடன் தொழுநோயாளிகளின் துயர் துடைக்கவும் , அவர்களைக் குணப்படுத்தவும் தமிழ்நாட்டிற்கு வந்தார் .
அதனைதலைநிமிரச் செய்தார் .
தமிழ்நாட்டில் தொழுநோயாளிகள் மத்தியில் பணிகளினாலும் , புதுமைகளினாலும் உலக அளவில் தொழுநோயாளிகளின் சிகிச்சையில் உண்மையான முன்னேற்றத்தைக் கொடுத்தார் .
ஆழமான விசுவாசமும் அர்ப்பணிப்பும் கொண்ட இவர் , சிறந்த புத்தகங்கள் எழுதியதோடு பல விருதுகளையும் பெற்றார் .
உலக லெப்ரசி மிஷனின் தலைவராகப் பணியாற்றி தொழுநோயாளிகளின் நலனுக்காகவே உழைத்த பால்பிராண்ட் , சரித்திரம் - பேசும் சாதனையாளராவார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory