புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தட்டார்மடத்தின் வரலாற்று சம்பவம்

*தட்டார்மடத்தின் வரலாற்று சம்பவம்*
சுற்றிலும் தீவிரத்துடன் பரவி வந்த கிறிஸ்து மார்க்கம் தங்களூருக்கு வந்துவிடக்கூடாது என்று தீர்மானித்த தட்டார்மடம் என்ற கிராமத்தார் வெகு கவனத்துடனிருந்து வந்தார்கள்.
ஆனாலும் , 1829 - ம் ஆண்டு அது அவ்வூருக்குள் புகுந்தேவிட்டது ! சில குடும்பத்தார் *கிறிஸ்து நாதரின் பிள்ளை களாகி , அவ்வூரில் திருச்சபையை நாட்டி விட்டார்கள்*
துவக்கத்தில் அவர்களுக்குச் சற்று எதிர்ப்பு இருந்ததெனி னும் , சீக்கிரமே அவ்வெதிரிப்பு ஓய்ந்துவிட்டது.
ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டும் கிறிஸ்துமார்க்கத்தைத் தீராப் பகையுடன் பகைத்துத் தூஷித் துவந்தான். ஆயினும் , கிறிஸ்து சபையில் மேலும் மேலும் பலர் சேர்ந்துகொண்டேயிருந்தார்களே யன்றி , யாரும் விலகவில்லை.
அதனால் அம்மனிதனுக்கு ஒருவிதமான தோல்வி மனப்பான்மையும் வெறுப்பும் உண்டாயிற்று.
ஈராண்டுகள் கழித்து ஒருநாள் அவன் அவ்வூரில் மீதியா யிருந்த தன் மதத்தினரிடம் ' கிறிஸ்து மார்க்கம் இவ்வூரில் வேரூன்றிவிட்டபடியால் , நான் இனி இவ்வூரிலிருக்கமாட்டேன்.
என்றைக்காவது ஒருநாள் அம்மனுக்கு இவ்வூரின் மீது கோபம் மூளும் அன்றைக்கு அவள் நம் குழந்தைகளை ' அம்மனால் ' ( வைசூரியால் ) , வாதித்துக் கொன்றுவிடுவாள் ; ஆகையால் நான் இப்போதே போகிறேன் ' , என்று சொல்லித் தன் குடும்பத்துடன் , சிறிஸ்துமார்க்கம் புகாதிருந்த ஒரு ஊரில் குடியேறினான்.
அப்புதிய ஊரில் அவன் ஒழுங்காக அம்மனைப் பூசித்துச் சேவித்து வந்தானெனினும் , ' எவ்வாறோ அங்கு வைசூரி தோன்றிப் பரவி , அவனுடைய குடும்பத்தையும் தாக்கிற்று.
தாக்குற்ற அவனது குழந்தைகளில் ஒன்று இறந்தும் போயிற்று.
உடனே அம் மனிதன் *தட்டார் மடத்தின்* மீது அம்மனுக்கிருக்கும் கோபத்தை இவ்வூரிலும் காட்டிவிட்டாளே என்று பயந்து , வேறொரு கிராமத்துக்குச் சென்று குடியேறினான்.
ஆனால் , சில நாட்களுக்குள் , கிறிஸ்துமார்க்கம் அவ்வூரும் அருகிலுள்ள ஒரு சிற்றூரில் தோன்றிவிட்டது ! அதையறிந்ததும் , இனி இவ்வூர் ஆகாது என்று , தான் இரண்டாவது குடியிருந்த அவருக்குச் சென்று வசிக்கலானான்.
ஒருநாள் " அங்கு வந்த சன்னியாசி ஒருவனிடம் , தான் செய்யவேண்டிய தென்னவென்று அவன் விசாரிக்க , அச்சன்னியாசி *கிறிஸ்து மார்க்கத்தை* ப்பற்றி நீ அச்சங்கொள்ளத் தேவையில்லை , அது *வரத்தான் செய்யும் ; வளரத்தான் செய்யும் ;* பேய் - பிசாசுகளும் ஓடிப்போகத்தான் செய்யும்.
நீ தட்டார் மடத்துக்கே திரும்பிப்போவென்று ஆலோசனை கூறினான்.
நம் நண்பன் அவ்வாலோசனையை நன்குமதித்துத் தட்டார்மடத்துக்குத் திரும்பி வந்து குடியேறின்துமின்றித் திருச்சபையின் பிள்ளையாகவும் சீக்கிரமே மாறினார்.
------------------------------------------------------------
 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.* 
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory