ரேனியஸின் இரண்டாவது (1817) மற்றும் மூன்றாவது நற்செய்திப் பயணம்* - (1818-1819)
வாசகர்கள் எண்ணப்பட்ட ஊழியர்களை ( Readers ) அனுப்பி , தகுந்த ஆயத்தம் செய்து வடதில்லை கன்னிப்புதூர் பெரிய பாளையம் அக்கரைப் பாக்கம் முதலிய ஊர்களுக்குச் சென்று அங்கு தங்கி இரவும் பகலும் நற்செய்திகளை அறிவித்தார்.
இவ்ஊழிய காலங்களில் இவருக்கு உதவியாக C . M . S . சங்கத்தார் கூடுதலாக சில மிஷனெரிகளையும் அனுப்பினர்.
ஏற்கனவே சென்னையில் பணிசெய்து கொண்டிருந்த இராணுவ குரு தாம்சன் S . P . C . K சங்கத்தார் அனுப்பி , இராயபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கனம் P . ராட்லர் - தியோக்கர் ஷ்மிட் , பெர்னாட்ஷ்மிட் என்ற மிஷனெரிகளும் வந்து சேர்ந்தனர்.
1818 ல் கனம் G . T பேரன்புருக் ( இவர் சுரண்டை மிஷனெரி T . G பேரன்புருக் அவர்கள் தந்தை ) மற்றும் இருவரும் இப்பணிக்கு அதிகமே உதவியவர்கள்.
*மூன்றாம் மிஷனெரி பயணம் 1818 - 1819*
அக்காலத்தில் வட ஆற்காடு , தென் ஆற்காடு மாவட்டங்களில் சமணர்கள் பலர் வாழ்ந்தனர்.
எனவே அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க விரும்பிய மிஷனெரி வீரர் தொண்டர் ரேனியஸ் அப்பகுதிகளுக்கு தமது பிரயாணத்தை மேற்கொண்டார்.
ஆற்காடு , வேலூர் , சித்தூர் , ஆரணி , சித்தாம்பூர் , திருவள்ளுவர் , தேரூர் , செங்கல்பட்டு , வந்தவாசி , விராணமூர் - முதலிய ஊர்களுக்கு சென்று , தங்கியிருந்து , அவர்களுடன் நேரில் உரையாடி , தெருக்களில் நின்று நற்செய்தி அறிவித்து , துண்டு பிரதிகளை கொடுத்து பணியை நிறைவேற்றினார்.
சமணத் தலைவர்களுடன் உரையாடினார்.
*உண்மையாகவே சுவிசேஷகனுடைய பாதங்கள் அழகானவைகளே தேவ திட்டத்தை நிறைவேற்ற நடந்திடும் கால்கள் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பாதம் அழகானவைகளே*
பாவிகளைத் தேடிவந்த கிறிஸ்துவைப் போல் - எல்லா ஜாதி மக்களிலும் - பிற்படுத்தப்பட்டோர் , சமணர் , பிராமணரையும் தேடிச்சென்ற ரேனியஸின் இப்பணியை சென்னைப் பகுதி மக்கள் மனதில் கொண்டுள்ளார்களா ?
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment