வெள்ளாளன் விளையில் துப்பாக்கி முனையும் ஜெபமும்* 1841
கனம் ஜான் தாமஸின் ஜெபத்தாலும் , வைராக்கியத்தாலும் , விடாமுயற்சியாலும் - எதிர்ப்புகள் , துன்பங்கள் மத்தியில் ( துப்பாக்கிகளின் எதிர்ப்பு ) ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்த சபை இது.
சுவிசேஷத்தை எதிர்த்து நின்ற சிலரில் ஒருவன் *வேலாயுதம் - வேதநாயகமாக* மாற்றப்பட்டு , ஊழியராகப் பின் குருவாகப் பணி செய்ய அமர்த்தப்பட்டார்.

ஒருநாள் சிலர் துப்பாக்கியுடன் வந்து *கனம் ஜான் தாமஸ்* அவர்களைக் கொல்ல நினைக்கவே ஊழியம் செய்யாமல் , அங்கிருந்த ஓர் ஆலமரத்தடியில் முழங்காலில் நின்று , ஆண்டவரே , இவர்களின் இருதயத்தைத் திறந்தருளும் என ஜெபித்து முடித்து பின்னர் தீர்க்கதரிசனம் போன்று இவ்வாறு கூறினார்.
பிசாசை வணங்கும் மக்கள் ஒருவரும் இல்லாதபடி இவ்விடத்தில் ஒரு கிறிஸ்துவ ஆலயம் கட்டப்படும் நாள் சீக்கிரம் வரும் என்றார்.
கர்த்தர் கிரியை செய்தார் . ஆலயம் 1844ல் கட்டப்பட்டது.
மக்கள் சுவிசேஷத்தின் பாச ஜெபத்தின் வல்லமையை ஏற்றனர்.
அந்த ஆண்டில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐநூறு.
பேராயர் அசரியா பிறந்த இல்லம் இன்று சுவிசேஷ நினைவு சின்னம்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment