புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள்

நூறாண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள்*
(1919 ஜுன் முதல் TDTA)
*C . M . S . சங்க நூற்றாண்டு விழா*
*அருள்பெருந்திரு ஹென்றி வாலர்* (1915-1922)இவரது காலத்தில் C , M S சங்க நாற்றாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழா 1920 ல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 1921ம் ஆண்டு பெப்ருவரி திங்கள் 22 முதல் 25ம் நாள் வரை பாளையங்கோட்டையில் நடை பெற்றது , இதை கேட்ட C . M . S தாய்ச்சங்கத்தார் தமது வாழ்த்துச்செய்தியை நெல்லைக்கு அனுப்பி வைத்து விழா நல் முறையில் நடைபெற உற்சாகமூட்டினர்.
அச்செய்தி வருமாறு :
*C . M . S ஊழிய நூற்றாண்டு விழாவைத் திருநெல்வேலி மக்கள் கொண்டாடச் செய்திருக்கும் ஒழுங்கினை அறிந்து மிகப்பெருமை கொள்கின்றோம்*
*கடந்த நூறு ஆண்டுகளில் சபையின் விரிவையும் விருத்தியையும் கண்டு கடவுளைத் துதிக்கிறோம்.*
திருநெல்வேலி அத்தியட்சாதீன ஊழியத்தை ஒரே விசாரணைக்குள் கொண்டுவர S P . G சங்கத்தார் மன மொத்து உழைத்துவருவது அறிந்து பெரிதும் பாராட்டுகிறோம்.
திருநெல்வேலி திருச்சபையின் சகல ஊழியங்களையும் முயற்சி களையும் ஏக ஐக்கிய ஏற்பாட்டுக்குள் கொண்டுவர அத்தியட்சர் எடுக்கும் பிரயத்தினங்களுக்கு இரு சங்கப் பிரதிநிதிகளும் உற்சாக மாகக் கை கொடுத்து வருவதை நன்றியோடும் மகிழ்ச்சியோடும் அளித்து வருகிறோம் .
இந்திய குருக்கள் தொகை பெருகுவதையும் . அவர்களின் ஆன்ம வாழ்க்கை வளர்வதையும் , ஒவ்வொரு குரு சத்திலும் அதிக ஊக்கமாயும் உற்சாகமாயும் நடைபெறும் தயும் அறிந்து கடவுளைப் போற்றுகிறோம் . சுயப்பெருக் கத்திலும் , சுய ஆதரவிலும் , சுய ஆளுகையிலும் இந்தியசபைகள் எடுத்து வரும் முயற்சிகள் எங்கள் மகிழ்வூட்டுகின்றன , இந்திய திருச்சபை பரிசுத்தமும் பரி பூர்ணமுமான சபையாக வளரவும் அதில் காணும் பலவீனங்கள் முற்றிலும் ஒழியவும் வேண்டுமென்று பிராத்திக்கிறோம்.
நாளை தொடரும் .....(16/04/2019)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory