புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருமண்டல மூலச் சட்டத்திலிருந்து காணிக்கை(பணம்) தொடர்பான சில தகவல்கள்

திருமண்டல மூலச் சட்டத்திலிருந்து காணிக்கை(பணம்) தொடர்பான சில தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக....மட்டுமே....
*பணத் தொடர்பானவை சபையின் பொது நிதி*
1 . திருமண்டலப் பெருமன்றத்திற்குரியச் சகல பணங்களும் கடன் பத்திரங்களும் “ றி . டி . றி . ஏ . சபைப் பொது நிதி " என்று அழைக்கப்படும் ஒரு கணக்கில் திருநெல்வேலி திருமண்டல அறக்கட்டளையிடம் வைத்து வைக்கப்பட வேண்டும் .
2 சபைப் பொது நிதியானது திருமண்டலச் செயற்குழுவின் மேல்விசாரணைக்குள் இருக்கும் . அந்நிதியைத் , திருமண்டலத்தில் நடைபெறும் வேலையை ஆதரிப்பதற்காக அக்குழு பயன்படுத்தும் .
3 . திருநெல்வேலித் திருமண்டல அறக்கட்டளையின் பொருளாளர் திருமண்டலச் செயற்குழுவுக்காகவும் அதின் உத்தரவுக்கமைந்தும் மேற்படி சபைப் பொதுநிதியை கையாள வேண்டும் . திருநெல்வேலி திருமண்டல அறக்கட்டளையின் பொருளாளர் பணத்தைச் செலவு செய்வதிலும் வங்கியில் போட்டு வைப்பதிலும் அவர் திருமண்டலப் பெருமன்றத்தின் ஒரு பதவி வகிப்போராகவே அப்படிச் செலவிடுகிறார் என்று பாவித்துத் திருமண்டலப் பெருமன்றமே அவருக்குப் பொறுப்பாக வேண்டும் . இது காரணம் பற்றித் திருமண்டலப் பொருளாளரே திருநெல்வேலித் திருமண்டல அறக்கட்டளை யின் பொருளாளராக இருப்பார் .
4. திருமண்டலப் பொருளாளர் அந்த நிதியின் கணக்குகளை வைத்துக் கொள்வார் . சகல வரவு , செலவும் கணக்குப் புத்தகங்களில் ஏற்ற தலைப்பின்கீழ் காட்டப்பட வேண்டும் . ஆண்டுதோறும் மார்ச் மாதம் 31ம் தேதி இந்நிதியின் கணக்குகள் முடிக்கப்படும் . இந்நிதியின் கணக்குகள் முடிக்கப்படும்.
5 .இந்நிதியின் கணக்குகள் திருநெல்வேலி திருமண்டல அறக்கட்டளையினரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தொழிலறி வரான தணிக்கையாளரால் தணிக்கைச் செய்யப்பட வேண்டும் .தணிக்கையாளர் கணக்குகளைத் தணிக்கைச் செய்து கையிருப்புத் தொகை , வங்கிகளிலிருக்கும் தொகைகளைச் சரி பார்க்க வேண்டும் , இது செய்யப்பட்டதற்கு சான்றாக ஆண்டுக் கணக்கோடு அவருடைய சான்றிதழும் சேர்க்கப்பட வேண்டும் தணிக்கையின் முடிவை அதன் பொருளாதாரத் துணைக்குழுக் கூட்டத்திலும் அடுத்துப் பின்னால் கூடும் திருமண்டலச் செயற்குழுவின் கூட்டத்திலும் பார்வைக்களிக்க வேண்டும் . தணிக்கைச் செய்யப்பட்ட முழு வரவு செலவுக் கணக்குகள் அடங்கிய பத்திரம் ஒன்று ஆண்டுதோறும் வெளியிட வேண்டும் .
6 . *சிறப்பு நிதிகள்  சேகரங்கள் , நிறுவனங்கள் இவைகளின் மானிய நிதிகள் , மாணவர் உதவி நிதிகள் , இன்னும் இவை போன்ற வட்டி மாத்திரமே . செலவிடக்கூடிய நிதிகள் எல்லாம் மூல நன்கொடையில் குறிப்பாகவாவது , வெளிப்படையாகவாவது ஏற்பட்ட நோக்கங்கள் எவையோ அவற்றிற்காகவேத் திருநெல்வேலித் திருமண்டல அறக் கட்டளையிடம் வைத்து வைக்கப்பட வேண்டும் . திருச்சபை தொடர்பான ஏதாவது சிறப்பு வைப்பாக அதாவது ஆலயங்கள் ,பள்ளிக் கூடங்கள் , கட்டுவது இன்னும் இவைபோன்றவைகளுக்காக ஏற்பட்ட மற்றெல்லா நிதிகளையும் ஒவ்வொரு நிதியின் தொடர்பாயும் ஏற்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருநெல்வேலித் திருமண்டல அறக்கட்டளையிடம் வைத்து வைக்கக்கூடிய வரை ஒழுங்கு செய்ய வேண்டும் .
7 . ஆறாவது விதியின்படி போட்டு வைக்கப்பட்ட எல்லா நிதிகளையும் காட்டிய முழுமையான பட்டியல் ஒன்று , ஆண்டுதோறும் ஒரு தடவை தணிக்கையாளருக்குக் கொடுக்க வேண்டும் . முதல்கள் சரியானபடி வட்டிக்கு விடப்பட்டிருக்கின்றனவா என்றும் மேற்படி முதல்களின் லாப் ஈவு அல்லது வட்டி ஒழுங்குபடி அந்தந்த வகைக்குப் ப்விடபட்டிருக்கின்றதா என்றும் அவர் பார்த்துக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதா என்று கொள்ள வேண்டும் . தணிக்கையாளர் தனது ஆண்டுச் சான்றிதழ் கடிதத்தில் இப்படிப்பட்ட பொறுப்பு நிதிகளைக் குறித்து ஓர் அறிக்கையும் சேர்த்திருக்க வேண்டும்.
*திருமண்டல நிறுவனங்களின் நிதிகள்*
8. திருமண்டல நிறுவனங்களின் நிதிகள் திருமண்டலச் செயற்குழு காலாகாலங்களில் தீர்மானிக்கும் ஒழுங்குகளை அனுசரித்து நிறுவனங்களின் தாளாளர்களால் நடத்தப்படும் .
9. நிறுவனங்களின் தாளாளர் அல்லது மேலாளர்கள் அனைவரும் திருமண்டலப் பொருளாளரிடம் காலாண்டுக் கணக்கு விபரங்களைக் கொடுப்பதோடு ஆண்டுதோறும் மார்ச் மாதம் 31ம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்ளாகத் தங்கள் மூலமாய் வரவு , செலவு செய்யப்பட்ட எல்லா பணங்களுக்கும் ஆண்டு முழுவதற்கும் உரிய கணக்குகளைக் காட்டும் ஆண்டுக் கணக்கு விபரம் ஒன்றும் கொடுக்க வேண்டும் .
அனுமதியில்லாமல் வரவு , செலவு மதிப்புப் பட்டிக்கு மாறாக | செய்யப்பட்டச் செலவுகளைக் காலாகாலங்களில் எடுத்துக் காட்டுவது திருமண்டலப் பொருளாளரின் கடமையாகும் .
10. நிகழும் மாதத்திற்கேற்பட்டச் செலவுத் தொகையில் எவ்வளவு பாகம் சபைப் பொது நிதியிலிருந்து பள்ளிக் கூடத்திற்குக் கிடைக்க வேண்டியதோ அவ்வளவு பாகத்தையும் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்படும் பட்டியல்படி சிட்டாவில் கண்டு குறிப்பிடும் தேதிக்குள் திருமண்டலப் பொருளாளருக்குக் கிடைக்கும்படி நிறுவனங்களின் தாளாளர் அல்லது மேலாளர்கள் அனைவரும் அனுப்ப வேண்டியது , ஒழுங்குப்படி அனுமதி பெறாத எந்தச் செலவும் இந்த சிட்டாவில் சேர்க்கப்படலாகாது . முந்தின விதியில் குறிக்கப்பட்டக் கணக்கு விபரங்கள் அனுப்பப்படாவிட்டால் திருமண்டலப் பொருளாளர் ஏதாவது பணம் கொடுப்பதற்குக் கடமைப்பட்டவரல்ல .
11. ஒவ்வொரு நிறுவனத்தின் கணக்குகளும் ஆண்டுதோறும் தணிக்கைச் செய்யப்பட வேண்டும் .
*சேகரங்களின் நிதிகள்*
12. சேகரங்களுக்குரிய பணங்கள் எல்லாம் அந்தந்தச் சேகர மன்றத்தால் நடத்தப்படும் .ஆனால் , இந்த மூலச் சட்டங்களின் பொதுவான விதிகளுக்கு அல்லது காலத்திற்குக் காலம் திருமண்டலச் செயற்குழுவால் ஏற்படுத்தப்படும் விதிகளுக்கு அமைந்து அவற்றை நடத்த வேண்டும் .
13 எல்லாச் சேகரப் பொருளாளரும் திருமண்டல பொருளாளரிடம் காலாண்டுக் கணக்கு விபரங்கள் தாக்கல் செய்வதுடன் பிரதியாண்டு , மார்ச் மாதம் 31ம் தேதியில் ஒரு மாதத்திற்குள்ளாகத் தங்கள் மூலமாய் வரவு,செலவு செய்யப்பட்ட எல்லாப் பணங்களுக்கும் முழுவதுக்கும் உரிய ஆண்டுக் கணக்கு விபரம் ஒன்றும் தாக்கல் செய்ய வேண்டும் . அனுமதியில்லாமல் ,வரவு செலவு மதிப்புப் பட்டிக்கு மாறாக செய்யப்பட்ட செலவுகளைக் காலாகாலங்களில் எடுத்துக் காட்டுவது திருமண்டல பொருளாளருடைய கடமையாகும் ,
14. நிகழும் மாதத்திற்கேற்பட்டச் செலவுத் தொகையில் எவ்வளவு பாகம் சபைப் பொது நிதியிலிருந்துச் சேகரங்களுக்குக் கிடைக்க வேண்டியதோ அவ்வளவுப் பாகத்தைக் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்ட பட்டியல் சிட்டாவில் கண்டு குறிப்பிடும் தேதிக்குள் திருமண்டலப் பொருளாளருக்குக் கிடைக்கும்படி எல்லாச் சேகரப் பொருளாளரும் அனுப்ப வேண்டும் . ஒழுங்குப்படி அனுமதி பெறாத எந்தச் செலவும் இந்தச் சிட்டாவில் சேர்க்கப்படலாகாது . முந்தின விதியில் குறிக்கப்பட்டக் கணக்கு விபரங்கள் அனுப்பப்படாவிட்டால் திருமண்டலப் கடமைப்பட்டவரல்ல . பொருளாளர் ஏதாவது பணம் கொடுப்பதற்கு கடமைபட்டவரல்ல.
15. திருமண்டலப் பொருளாளர் சேகர் மன்றத்தாரிடம் ஆலோசித்துக் காலத்திற்குக் காலம் குறிப்பிடும் தொகைக்கு அதிகமான கையிருப்பு ஒருக்காலும் சேகரப் பொருளாளர் தன்வசம் வைத்திருக்கக் கூடாது . இதற்கு மிஞ்சிய எல்லாத் தொகைகளையும் பாரத வங்கியின் சேமிப்புக் கணக்கிலாவது , திருமண்டலச் செயற்குழு , பொருளாதாரத் துணைக்குழு அனுமதி கொடுக்கும் வேறெந்த வங்கிகளிலாவது போட வேண்டும் . இந்தக் கணக்கு இரண்டு ஆட்கள் பேரால் இருந்து இவ்விரண்டு பேரும் நடவடிக்கை நடத்த வேண்டும் . அவசியம் நேரிடுங்கால் திருமண்டலப் பொருளாளர் நடவடிக்கை நடத்தலாம் .
16. காலாகாலங்களில் சேகரங்களையும் , நிறுவனங்களையும் சந்திப்பதும் அவசியமானால் சேகரத் தலைவர்கள். பொருளாளர்கள் , நிறுவனங்களின் தலைவர்கள் இவர்களுடையக் கணக்குகளையும் , கையிருப்புகளையும் , பரிசோதிப்பதும் கணக்குகள் வைத்திருக்கும் முறையில் ஏதாவது சீர்திருத்தம் அவசியம் என்று கண்டால் அதை அவர்களுக்குச் சொல்லுவதும் திருமண்டல பொருளாளரின் கடமையாகும் .
*பல்வகை செயல்கள்*
17. *பண மான்யத்திற்காகப் பொது மக்கள் விண்ணப்பங்கள் 
சபையின் வேலை தொடர்பாக ஏதாவது ஓர் நிலையான காரியத்திற்காகப் பணம் வேண்டுதல் செய்யும் பொதுமக்கள் விண்ணப்பங்களுக்கடுத்த விதிகள் காலத்திற்குக் காலம் திருமண்டலச் செயற்குழுவால் ஏற்படுத்தப்படும் .அக்குழு ஒவ்வொரு செயலுக்கும் அனுமதி கொடுக்க வேண்டிய கழகம் எதுவென்று திட்டம் பண்ணும் .இவ்விதிகளை அனுசரித்தேயன்றி , எவ்வித விண்ணப்பத்திற்கும் எந்தக் குழுவோ அல்லது மன்றமோ அல்லது திருமண்டலப் பெருமன்றப் பதவி வகிப்போராவது அனுமதி கொடுக்கக் கூடாது .
18. *பணத்தை வட்டிக்கு விடுதல் 
திருமண்டலப் பொருளாளருக்கு முன் தகவல் இன்றி ஒரு சேகர மன்றமோ அல்லது திருமண்டல நிறுவனமோ பணங்களைப் போட்டு வைக்கவாவது , கடன் கொடுக்கவாவது , ஒழுங்கு செய்யலாகாது .இப்படி ஏதாவது ஒழுங்கு நடத்தியிருக்குமானால் , திருமண்டலச் செயற்குழு அல்லது அதின் பொருளாதாரத் துணைக்குழுவிற்குத் தெரிவித்து அவர்கள் முடிவு செய்யும் வரை அந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்கத் திருமண்டலப் பொருளாளருக்கு அதிகாரம் உண்டு .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory