புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி வில்லியம் கெளடி

மிஷனரி வில்லியம் கெளடி பிறந்த தினம்*
மே 06
இறைப்பற்றுமிக்க அன்னையின் அரவணைப்பில் அற்புதமாக வளர்ந்தவர்.
தந்தை ஒரு இறைபணியாளர்.
1882ம் ஆண்டு இந்தியாவிற்கு மிஷனெரியாக வந்தார்.
சென்னையில் ஜார்ஜ் டவுன் மற்றும் புனித தாமஸ் மலையின் வெஸ்லி சபைகளில் பணிபுரிந்தார் . 1883ம் ஆண்டு திருவள்ளூர் பகுதியில் தன் ஊழியத்தை ஆரம்பித்தார் . ஏழைகளின் மீது பரிவு கொண்டு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட தலித் மக்கள் மீது பாசம் கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சுவிசேஷம் சொன்னபோது உயர்ஜாதி மக்கள் கற்களையும் , நாற்றமடிக்கும் சேற்றையும் அவர்மீது அள்ளி வீசினர்.
கல்லெறிந்த மக்களைப் பார்த்து , *நீங்கள் என்மீது கல்மழை பொழிந்தீர்கள் ஆனால் ஆண்டவர் உங்களுக்கு அரிசி மழையை பொழிவார்* என்று அவர்களை ஆசீர்வதித்தார்.
அப்போது அப்பகுதி மிகுந்த பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலப்பிரபுக்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழை மக்களை விடுவித்தார்.
அவர்களின் நிலங்களை அவர்களுக்கே திரும்ப கிடைக்கும்படி செய்தார்.
ஆண்களுக்கு தனியாகவும் , பெண்களுக்கு தனியாகவும் பள்ளிகளை ஏற்படுத்தினார்.
விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டது.
ஈக்காடு என்ற கிராமம் கௌடியால் செழிப்பைப் பெற்றது.
கடும் பிரயாசத்தின் பலனாக ஈக்காட்டில்வெஸ்லி ஆலயத்தையும் கட்டினார்.
முதல் உலகப்போரில் தன் மகன்கள் இருவரை இழக்கக் கொடுத்தும் , சோர்ந்து போகாமல் தன் கடைசி மூச்சுவரை இந்தியர்களுக்காகவே வாழ்ந்த கெளடி உலகிற்கு ஓர் வரப்பிரசாதம்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory