புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கல்லிடைக்குறிச்சி திருச்சபை

வரலாற்றில் நமது கல்லிடைக்குறிச்சி திருச்சபை
1828 ல் நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களது நற்செய்திப் பணியால் உருவானது நம் கல்லிடைக்குறிச்சி சபை.
மார்ச் முதலாம் நாள் நமது சபையின் முந்தின தேவாலயம்
கிறிஸ்து தேவாலயம் என நெல்லைப் பேராயர் Rt.Rev. A.A.வில்லியம்ஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நந்நாள்
முந்தின தேவாலயம் கட்ட அரும்பாடுபட்ட நமது திருச்சபையின் தந்தை Rev.E.S.கார் மிஷனரி அவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தாலுகா உயரதிகாரி திரு.ஹண்டர் அவர்களையும்
தென்னிந்திய ரயில்வே உயரதிகாரி திரு.மன்றோ அவர்களையும் நன்றியோடு நினைவுகூருவோம்.
இம்மூவரும் முந்தின தேவாலயக் கட்டுமானப்பணிக்கு செய்த நன்மைகள் அதிகம்
இம்மூவரும் 01.03.1910 செவ்வாயன்று பிற்பகலில் நடைபெற்ற முந்தின தேவாலயப் பிரதிஷ்டையில் பேராயர் அவர்களோடு பங்கேற்றார்கள் அன்று காலையில் மேலச்சிவந்திபுரம் பரி.கல்வாரி தேவாலயத்தை பேராயர் அய்யா அவர்கள் பிரதிஷ்டை செய்துவிட்டு அம்பாசமுத்திரம் வழியாக வருகையில் பேராயர் அய்யாவோடு இவர்கள் இணைந்து நம் கல்லிடைக்குறிச்சி தேவாலயப் பிரதிஷ்டைக்காக நம் ஊருக்கு வருகை தந்தார்கள் இதுகுறித்து அப்போதைய பேராயர் மகாகனம்.A.A. வில்லியம்ஸ் அவர்கள் "The Madras and Tinnevelli Diocesan Magazine" (April 1910) Page 155 ல் மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள் அதில் நம் தேவாலய பிரதிஷ்டை வேளையில் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றதாகவும் பதிவு செய்துள்ளார்கள். மேலும் அன்றையதினம் நம் தேவாலயத்தில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானங்களை ஞானஸ்நானப்பதிவேட்டில் பதிவு செய்த நமது பேராயர் அய்யா அவர்கள் அந்த பதிவேட்டில் கையொப்பமிட்டதோடு கல்லிடைக்குறிச்சி தேவாலயப் பிரதிஷ்டை என சிறப்புப் பதிவும் செய்துள்ளார்கள். ஐரோப்பா கண்டத்தில் கிரேட்பிரிட்டன் நாட்டில் பிறந்து வளர்ந்து நம் தேவாலயத்தை நேசித்து தொலைநோக்கோடுஆல்டர் நீங்கலாக
50 அடி நீளம்
33 அடி அகலம்
30 அடி உயரம் கொண்ட பெரியதோர் தேவாலயம் 1906 - 1910 ல் கட்டப்படபெரும் உதவிகரமாக இருந்த
பேராயர்.மகாகனம்.A.A.வில்லியம்ஸ் அவர்கள்,
நம் சபையின் தந்தை கனம்.E.S.கார் மிஷனரி அவர்கள்,
Taluk Officer திரு.ஹண்டர் அவர்கள்,
South Indian Railway Officer திரு.மன்றோ அவர்கள் ,
ஆகியோர்
சுமார் 109 ஆண்டுகளுக்கு முன்பு நம் ஊர் சபைக்கு செய்த பேருதவிகளையும் நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூருவோம்.
*கல்லிடைக்குறிச்சி திருச்சபையே நீ வாழ்க உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக*
Thank you Mr.John Gnanaraj John Jacob

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory