மிஷனரி ஆர்தர் மார்காஷியஸ் நினைவு தினம்
ஏப்ரல் 27
காலரா . இப்பெயரைக் கேட்டதும் , உள்ளத்தில் பீதி எழும்புவது நிச்சயம். ஆம் உயிரை பறிக்கும் ஆட்கொல்லி நோய் இது.
1902ம் ஆண்டு இக் கொள்ளை நோய் திருநெல்வேலியின் நாசரேத்தை தாக்கியது.
*மக்கள் செத்து மடிந்தனர்.*
பலர் அனாதைகளாக்கப்பட்டனர். ஆற்றுவாரும் , தேற்றுவாரும் இல்லாமல் மக்கள் அழுது புரண்டனர்.
*மார்காஷியஸ் ஐயர்* மக்களின் மன நிலையை அறிந்தவர். மன வருத்தம் அடைந்தார்.
மனிதரை காப்பாற்றும் வழிமுறையை யோசித்தார். அவசரம் அவசரமாய் ஆலயத்தினுள் நுழைந்தார் . அழுது , அழுது ஜெபித்தார்.
ஆண்டவர் மட்டுமே குணமாக்க முடியும் என்பதையறிந்து மணிக்கணக்காய் மன்றாடிநின்றார்.
*வேண்டுதல் கேட்கப்பட்டது*
தினசரி திருவிருந்து ஆராதனை நடத்த தீர்மானம் செய்தார்.
அம்முறைகளை கடைபிடிக்கச் செய்தார்.
மக்கள் மத்தியில் காணப்பட்ட மரண பயத்தையும் , மரித்தோரின் ஆவிகளைப் பற்றிய பயத்தையும் களைந்தார்.
ஆதரவற்றோர் பிள்ளைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை ஏற்படுத்தினார்.
ஆசிரியர் பயிற்சி பள்ளியையும் ஆரம்பித்தார்.
மருத்துவமனையை கட்டினார்.
உபதேசிமார்களுக்காக இறையியல் கல்லூரி ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார்.
நாசரேத் தபால் அலுவலகத்திற்கு தந்தி வசதியைப் பெற்று தந்தார்.
மக்களின் நன்மைகளுக்காக செயல்பட்டதால் *' கைசர் - இ - ஹிந்த் '* என்ற விருதை அரசிடமிருந்து பெற்றார். *'நாசரேத் நகரின் தந்தை '* என்றழைக்கப்படும் மர்காஷியஸ் இதே நாள் 1908ஆம் ஆண்டு விண்ணக தந்தையிடம் தஞ்சம் புகுந்தார்.
நாசரேத்தில் காணப்படும் ஆலயம் அவரின் கனவின்செயல்வடிவமாகும்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
------------------------------------------------------------
No comments:
Post a Comment