புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பட்டினிகிடந்தாலும் பரமனைவிடேன்

பட்டினிகிடந்தாலும் பரமனைவிடேன்
மிஷன் பள்ளிக் கூடத்தில் வேலைபார்த்து வந்தவர் ஒருவரிருந்தார்.
இந்த வாயிருந்தபோதிலும் , அந்த நாட்களின் மிஷன் நிபந்தனைக் கிணங்கப் , பள்ளிச் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வேதாகமம் , சரித்திரங்களைக் கற்றுக் கொடுப்பதற்காக அதைப் படிக்க நேர்ந்து , அதின் சத்தியம்களை ஏற்றுக் கொண்டு , கிறிஸ்து மார்க்கத்தில் சேர்ந்து , நல்லூர் சேகர மிஷனெரியாயிருந்த P P .ஷாஃப்டர் ஐயரிடம் , ஞான தீட்சை பெற்றுக் கிறிஸ்தவரானார்.
சுமார் பத்தாண்டுகளாக நல்லூர் சேகரப் பள்ளிக்கூடங்களில் வேலைபார்த்த பின் , அங்கு கிடைத்த சம்பளம் தன் பாதிக்குடும்பத்தின் செலவுக்குப் பற்றாதிருந்ததால் , அவ்வேலையை விட்டுவிட்டுத் தன் சொந்தவூருக்குப் போய்ச் சேர்ந்தார். *பாறைக்கடம்* என்ற அந்த ஊரில் அவர் ஒருவர் தான் கிறிஸ்தவர்.
அவர் , ஒரு நாள் மணியாச்சி ஜமீந்தாரைப் பேட்டிகண்டு , ஏதாவது வேலை தந்து உதவ வேண்டுமென்று ! மனுக் கொடுத்தார்.
ஜமீந்தாரும் , அவர் கல்வியறிவுடையவர் - ரென்றறிந்து , ஜமீன் கணக்கர்களிலொருவராக அவரை நியமித்துப் , *பாறைக்கூட்டம்* பகுதிகளில் ஜமீன் வரவு செலவுக்கணக்குகளைக் கவனித்து வருமாறு கட்டளை கொடுத்தார் கர்த்தருக்குத் துதி செலுத்தி அவ்வேலையை ஏற்றுக்கொண்டு நம் நண்பர் தன் வீடு வந்து சேர்ந்தார்.
கிறிஸ்தவ மனச்சாட்சியுடனும் , உள்ளத் தூய்மையுடன் னும் , அவர் தன் வேலையைச் செய்து வந்த தனால் , ஜமீந் தாருக்குத் தன் புதுக் கணக்கப்பிள்ளையின் மேல் பிரியமும் : நன் மதிப்பு முண்டாயின.
ஒரு நாட்காலையில் , பாறைக்கூட்டத்துக்குச் சென்ற ஜமீந்தார் , கணக்கப்பின் மீது பூசா நெற்றியுடனிருந்த தைக் கண்டு , *விபூதி அணிந்து* வேலையைச் செய்யும் ' ' என்று ஆக்யாபித்தார்.
கலைக்கப்பிள்ளை , மிகவும் பணிவுடன் ஐயனே ,
*நான் கிறிஸ்தவன்.*
*நீறும் பூசேன்*
*பொட்டும் வையேன்*
என்னை மன்னித்தருள வேண்டும் ,என்று கரங் கூப்பினார் .
அவர் தன்னைச் கிரிஸ் தவனென்றறிக்கையிட் - மாத்திரத்தில் , ' ஜமீனு ' க்குக் கடும்கோப் முண்டாயிற்று.
அவர் அவரைத் தாறுமாறாய் ஏசிப் பேசி , ' ' நீ உடனே விபூதி பூசிக் கொண்டு கிறிஸ்துமார்க்கத்தைவிட்டு விலகவில்லையானால், உன்னை வேலையிலிருந்து தள்ளிவிடுவேன் , புரிந்ததா ? என்றிரைந்தார்.
ஆனாலும் , நம் கணக்கர் தாழ்மையுடனும் உறுதியாகவும் நாயனே , என் வேலை போய்விட்டாலும் , - *நானும் என் மனைவி மக்களும் பட்டினியால் சாக நேரிட்டாலும்* , என்னை ஆண்ட எம்பெருமான் இயேசுவை விடமாட்டேன் , இது உறுதியென்று கூறிக் , கைகட்டி வாய் பொத்திநின்றார்.
ஜமீனாதிபதி மௌனமானார்.
அங்கு நிசப்தம் . அமைதி . திடீரென்று அவர் தான் உட்கார்ந்திருந்த ஆசனத்திலிருந்தெழுந்தார் ; கணக்கப்பிள்ளையிடம் போனார் ; அவர் தோள்மீது கையை வைத்தார்.
கணக்கர் தலை நிமிர்ந்து தன் எஜமானின் முகத்தைப் பார்த்தார்.
அப்பெரியோன் அவரைப் பார்த்து , ' ' கணக்கரே , உன் தைரியத்தை மெச்சி னேன்.
உன் உறுதியைப் பாராட்டுகிறேன்.
உன் உண்மையையும் நேர்மையையும் அறிவேன்.
உன்னை வேலை நீக்கம் செய்யமாட்டேன்.
நீ உன் கடவுளைச் சேவிப்பதில் எனக்கு ' அட்சேபணையில்லை. தைரியமாயிரு என்று கூறி உற்சாகப் படுத்திவிட்டு வெளியேறினார்.
கிறிஸ்தவப் பக்தன் , உள்ளத்தில் தன் ஆண்டவருக்குத் துதி செலுத்தி ஜமீந்தாரை வழி பயனுப்பிக் கொண்டார்.
சில நாட்களுக்குப் பின் ( 1852 ஜனவரி ) அவ்வூருக்குப் பிரசங்க ஊழியம் செய்யச் சென்றிருந்த பண்ணைவிளை மிஷனெரி அச்செய்தியைக் கேள்விப்பட்டுக் , கணக்கப்பிள்ளையின் வீட்டுக்குப்போய் , அவரையும் அவருடைய மனைவி மக்களையும் கண்டு சந்தோஷித்து , உற்சாகப்படுத்தி , அவர் களுடன் ஜெபித்து ஆசீர்வதித்துத் திரும்பினார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory