மிஷனரி டேவிட் சீஸ்பெர்கர் பிறந்த தினம்*
உழைப்பின் விளைச்சல் தான் வெற்றி.
முன்னேற்றமும் கூட முன்னேறி கொண்டிருக்கும் எவரிடமும் தொடர்ந்து கடமைகளும் , பொறுப்புகளும் கூடிக் கொண்டே இருக்கும்.
இவர்கள் தங்கள் கடமையிலேயே மிகவும் கருத்தாக இருப்பார்கள். உலகப் பிரகாரமாக மக்கள் முன்னேற துடிப்பதற்கு பல முயற்சிகளையும் , வாய்ப்புகளையும் உருவாக்கும்போது கிறிஸ்தவ பணி செய்யும் வீரர் இன்னும் அதிகமாக தன்னுடைய உழைப்பில் தீவிரம் காட்டுதல் மிகவும் அவசியமானது.
டேவிட் சீஸ்பெர்கர் , வாலிபப் பிராயத்தில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்.
இரட்சிக்கப்படாத மக்கள் உலகில் அதிகம் உண்டு என்று கேள்விப்பட்டவுடன் , அம்மக்களின் ஆன்மீக இரட்சிப்புக்காக தன்னையே அர்ப்பணம் செய்தார் . ஹாலந்தில் தன்னுடைய ஊழியத்தை உற்சாகமாக செய்த இவர் லண்டன் திரும்பினார்.
அங்கு சின்சென்டார்ப் பிரபுவை சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றார் . 1739ம் ஆண்டு , இருவரும் இணைந்து மொரேவியன் காலணிகளில் உள்ள ஜார்ஜியா பகுதிகளில் சுவிசேஷத்தை அறிவித்தனர்.
சுமார் 60 வருடங்கள் டெலவர் பகுதி இந்தியர்களிடம் பணியாற்றினார்.
அவர்கள் மொழியை மிகவும் கடினப்பட்டு படித்து , அவர்கள் மொழியிலேயே சுவிசேஷம் அறிவித்தார் . இவர் ஒற்றர் என சந்தேகிக்கப்பட்டு , அந்நாட்டு அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட இவர் , புது உற்சாகத்தோடு கிறிஸ்துவின் திருத்தொண்டை இன்னும் வேகமாக செய்ய ஆரம்பித்தார்.
1600 மைல்களுக்கு மேல் நடந்தே சென்று சுவிசேஷப் பணி செய்தார் . இன்றைய காலக்கட்டங்களில் நடந்து ஊழியப் பணிகளை கிராமங்களில் செய்ய பலர் தயங்கும்போது , இவரின் வாழ்வு நாம் செய்துவரும் பணியை சிந்தித்து பார்க்கவும் , சீர்தூக்கி பார்க்கவும் அறைகூவல் தருகின்றது . இவர் அன்றாட வாழ்வு குறிப்புகளை எழுதும் பழக்கமுடையவர்.
ஆண்டவர் தன் வாழ்வில் செய்த மகத்தான காரியங்களை திட்டமும் , தெளிவுமாக எழுதினார் . இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் . அநேக புத்தகங்களையும் , இலக்கண புத்தகங்களையும் எழுதினார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment