புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வேதமாணிக்கம்

பாடல் ஆசிரியரின் வரலாறு
சருவ லோகாதிப நமஸ்காரம்
இந்த பாடலை எழுதிய அருள்திரு #வேதமாணிக்கம் 1864 -ம் ஆண்டு #கல்லுகூட்டம் பகுதியில் மதுர நாயகம் - தேவாயி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். ஐந்து வயதில் தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20 -ஆவது வயதில் வேதமாணிக்கம் #மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.
வேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையில் அமர்ந்தார். பக்தி, விசுவாசம், ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சை உள்ளவர். உலக பொருட்களுக்கோ, பணத்திற்கோ இடம் கொடாது மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த வீட்டில் வாழ்ந்தார். ஒருமுறை ஆங்கிலேயரான அவரது மேல் அதிகாரி #வேதமாணிக்கம்_நீவேதம் #ஓதவேண்டியவன்_இங்கு_எப்படி_வேலை_செய்யலாம். என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது.
நற்செய்தி- பணியில் தான் கொண்ட ஆர்வத்தால் உடனே அரசு வேலையை #ராஜினாமா செய்துவிட்டு மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபையின் #உபதேதியராக ஊழியம் செய்த பின் கல்லுகூட்டம் திருச்சபையின் போதகா் ஆனார். பல பாடல்களை பாடி இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார்.
தன்னையே ஒறுத்து ஊழியம் செய்ததால் ஆலையத்தில் மக்கள் கூட்டம் திரளாக வந்தனர். வாலிபர்களுக்காக சுவிஷேச படையெழுர்ச்சி என்ற திறந்த வெளி கூட்டங்களை நடத்தினார். ஞாயிறு தோறும் மாலை கூட்டம், பெண்களுக்கு சிறப்பு வேத பயிற்சி கூட்டங்கள் நடத்தினார். இவர் ஊர் பிரச்சினை தீர்க்கும் நடுவராகவும் விளங்கினார்.
ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடை அனைத்தையும் அற்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்தார். அவரது மூன்று ஆண்பிள்ளைகளுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும் தேவன் நல்ல படிப்பு, வேலை மற்றும் இசை ஞானத்தை தந்தார். வயலின் தான் அவர்கள் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார். குடும்பமாக பல இடங்களுக்கு சென்று நற்செய்தி கூட்டங்கள், கதாகாலட்சேபங்கள் நடத்தினர்.
1917 -ஆம் ஆண்டு மே மாதம் 8- ஆம் தேதி அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்கு செல்ல பஸ் ஏறும்போது தவறி விழுந்து பேருந்து சக்கரம் அவரது காலில் ஏறி காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தை தொடர்ந்த அவர் மார்த்தாண்டத்தில் மூன்றாம் நாளில் 10-05-1917 அன்று தனது 53- ஆம் வயதில் மரணமடைந்தார்.
இவர் இயேற்றிய ஆ இன்ப காலமல்லோ, ஜீவ வசனம் கூறுவோம் என்ற பாடல்கள் திருச்சபை கீர்த்தனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்
தரை கடல் உயிர்;; வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம (2)
சருவ லோகாதிபா நமஸ்காரம்.......
திரு அவதாரா நமஸ்காரம் nஐகத்திரட்சகனே நமஸ்காரம்
தரணியின் மானிடர்;; உயிர்;; அடைந்தோங்க தருவினில் மாண்டோய் நமஸ்காரம் (2) சருவ லோகாதிபா நமஸ்காரம்.......
பரிசுத்த ஆவி நமஸ்காரம் பரம சற்குருவே நமஸ்காரம்
அரூபியாய் அடியார்;; அகத்தினில் வசிக்கும் அரிய சித்தே சதா நமஸ்காரம் (2)
சருவ லோகாதிபா நமஸ்காரம்.......
முத்தொழிலோனே நமஸ்காரம் மூன்றில் ஒன்றோனே நமஸ்காரம் கர்;;த்தாதி கர்;;த்தா கருணசமுத்ரா நித்திய திரியேகா நமஸ்காரம் (2)
(சருவ லோகாதிபா.......)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory